Vanakkam,
3 days fasting opposing SASIKALA becoming leader of ruling party or state got concluded today..
சில நூறு கோடிகள் கொள்ளையடித்த மூத்த அமைச்சர்கள்- கட்சியின் நிர்வாகிகள், "பல்லாயிரம் கோடி" சொத்து சேர்த்த "திறமைசாலிதான்" தங்களுக்குத் தலைவியாக வேண்டும் என்று விருப்பப்படுவதில் ஆச்சரியமில்லை..
தங்கள் தலைவியைத் தேர்ந்தெடுக்க அக்கட்சியினருக்கு உரிமை இருக்கிறது...
தமிழகம் சூறையாடப்பட உள்ளது என்ற கவலையால், அக்கறையினால் எதிர்ப்பு தெரிவிக்க நமக்கு கடமை இருக்கிறது...என்பதே இந்த உண்ணாவிரதத்தின் அடிப்படை..
இலஞ்ச-ஊழலுக்கு எதிராக 86வயதிலும் போராடும் காஞ்சிபுரம் முனுசாமியும், வேலூரிலிருந்து வந்திருந்த மாதவி, கேரளாவிலிருந்து வந்திருந்த சேலம் சக்திவேல் ஆகியோர் முறையாக இளங்கோ, எனக்கு, ஜெய்கணேஷ் ஆகியோருக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.
இதுபோன்ற விவகாரத்திற்கு பொதுவெளியில் உண்ணாவிரதம் இருக்க காவல்துறை எப்போதும் அனுமதி அளிப்பதில்லை. ஆகவே, அலுவலகத்திலேயே உண்ணாவிரதம் இருந்தோம்...
நேரிலும், முகநூல், வாட்ஸ் அப், இமெயில் மூலம் ஆதரவளித்தவர்களுக்கு மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறோம்..
உண்ணாவிரதம் முடிந்தது.... ஊழலுக்கு எதிரான, ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம் தொடரும்;
அநீதிகள் நடப்பது தீயவர்களின் செயல்களால் அல்ல;
நல்லவர்களின் மெளனத்தாலே...
மெளனம் கலைப்போம்.. உரக்கப் பேசுவோம்..
No comments:
Post a Comment