Wednesday, 28 December 2016

Day 2 : Fasting opposing SASIKALA becoming Gen.Sec of Ruling Party/CM of Tamilnadu

To the Editor


பினாமியாக பல்லாயிரம் கோடி சொத்துக்களைச் சேர்த்த சசிகலா ஆளுங்கட்சிக்கு, ஆட்சிக்கு தலைமை ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 நாள் உண்ணாவிரதத்தின் (27-12-2016 முதல் 29-12-2016 வரை) இரண்டாம் நாளான இன்று சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ இளங்கோ, பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாநில அமைப்புச்செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையில் உண்ணாவிரதம் தொடர்ந்தது. இதில் தண்ணீருக்கான பொதுமேடை, தாகம், தமிழர் தேசிய முன்னணி, தோழன் உள்ளிட்ட அமைப்பினர், மூத்த பத்திரிக்கையாளர் TN கோபாலன் மற்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் நேரில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.


இன்றைய தினம், சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் பொறுப்பேற்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்களை தெரிந்துகொள்ளும் வகையில் இணைய கருத்துக்கணிப்பு துவக்கியுள்ளோம் (கருத்துக்கணிப்பு பதிவும் இணைக்கப்பட்டுள்ளது).


தொடர்ந்து மூன்றாவது நாளாக நாளையும் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது


----
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
__________________________________________

​Satta Panchayat Iyakkam

|  31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

No comments:

Post a Comment