Tuesday, 27 December 2016

Day 1 : Fasting opposing SASIKALA becoming Gen.Sec of Ruling Party/CM of Tamilnadu..

Day 1 : Fasting opposing SASIKALA becoming Gen.Sec of Ruling Party/CM of Tamilnadu..             

பினாமியாக பல்லாயிரம் கோடி சொத்துக்களைச் சேர்த்த சசிகலா ஆளுங்கட்சிக்கு, ஆட்சிக்கு  தலைமை ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து

      3 நாள் உண்ணாவிரதம் 27-12-2016 முதல் 29-12-2016 வரை


பத்திரிகை செய்தி

ஓமந்தூராரும்காமராஜரும்அண்ணாவும் அலங்கரித்த முதல்வர் பதவியில் விரைவில் பினாமியாக இருந்துசட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் மூலம் பல்லாயிரம் கோடிகள் சொத்து சேர்த்த சசிகலா அமர்வார் என்பதற்கான அறிகுறிகள் பலமாகத் தென்படுகின்றன. ஆளுங்கட்சியின் முன்னணி நிர்வாகிகளே சசிகலா காலில் விழாத குறையாக கட்சிக்குத் தலைமை தாங்குங்கள் என்று கெஞ்சிவரும் காட்சிகளை தினந்தோறூம் பார்த்துவருகிறோம். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் இரண்டாமிடத்தில்(Accused No:2 (A2)) இருப்பவரையா தமிழக அரசில் முதலிடத்தில் வைக்கப்போகிறோம்..?


இன்னும் மூன்று நாட்களில்(டிசம்பர் 29) நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா இருந்தபோதே குடும்பத்தோடு சேர்ந்து தமிழ்நாட்டைக் கொள்ளையடித்த கும்பல் நாளை ஆளுங்கட்சியை வழிநடத்தும் பொதுச்செயலாளராகி.. இன்னும் சில மாதங்களில் முதல்வரானால் தமிழ்நாடே சூறையாடப்படும் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை..


சரி..பொதுமக்கள்சமூக ஆர்வலர்களாகிய நாம் இதற்கு என்ன செய்யலாம்..இன்றைய சூழலில் பொதுமக்கள் தரப்பிலிருந்து சசிகலா அவர்கள் ஆளுங்கட்சிக்கும்ஆட்சிக்கும் தலைமையேற்பதற்கு எதிர்ப்பு இல்லை என்ற மாயை கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால்உண்மை இதுவல்ல. கோடிக்கணக்கான மக்கள் மனதிற்குள்ளே குமுறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. இப்படிக் குமுறிக்கொண்டிருக்கும் பொதுமக்களுக்குசமூக ஆர்வலர்களுக்குசமூக அமைப்புகளின்கட்சிகளின் உணர்வுகளை வெளிப்படுத்தஒருமுகப்படுத்தவே இந்த உண்ணாவிரதம்.


தமிழக அரசியல் அதலபாதாளத்திற்கு போவதைக் கண்டு குமுறிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் அழைக்கிறோம்.. ஊழல்வாதிகள் தமிழகத்திற்கு தலைமை ஏற்பதைக் கண்டு கொதிக்கும் ஒவ்வொருவரையும் அழைக்கிறோம்.. வாருங்கள் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.. இனியும் மவுனம் காத்தால் தமிழகம் சூறையாடப்படுவதை யாராலும் தடுக்கமுடியாது.. 


உண்ணாவிரதக் களத்தில் ஓரிரு மணி நேரமாவது கலந்துகொண்டு கையெழுத்திட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறோம்..


குறிப்பு: மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் முதல் நாளான இன்று நடைபெற்ற நிகழ்வில் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் அண்ணாத்துரை, நெல்லை மாநகர ஒருங்கிணைப்பாளர் ரகுமான் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சட்ட பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ.இளங்கோ தலைமை தாங்கினார். அறப்போர் இயக்கம், நாம் விரும்பும் தமிழகம், நல்லோர் வட்டம், பேக்ட் இந்தியா, லா எக்ஸ்போ போன்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவளித்தனர். கலந்துகொண்டவர்கள், உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கையெழுத்திட்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்..


இடம்: சட்ட பஞ்சாயத்து இயக்க தலைமை அலுவலகம்
             31, 
தென்மேற்கு போக் சாலைதி.நகர்சென்னை -600017
நாள்: 27-12.2016(செவ்வாய்) காலை மணி முதல்                                             தொடர்புக்கு: 87545-80270, 87545-80274




No comments:

Post a Comment