Sunday, 12 February 2017

CBI Should probe the possible Illegal activities(Rs.200 Cr) behind the Disproportionate Asset case...சொத்துக்குவிப்பு வழக்கின் பின்புலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சட்ட த்திற்குப் புறம்பான செயல்பாடுகளை(ரூ.200கோடி) சி.பி.ஐ. உடனடியாக விசாரிக்க வேண்டும்.

                                                                    PRESS RELEASE(12/2/2017)

           CBI Should probe the possible Illegal activities
   behind the Disproportionate Asset case
                                                                          Attached the representation given to CBI
                            பத்திரிகை செய்தி( 12/02/2017)

   சொத்துக்குவிப்பு வழக்கின் பின்புலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும்
சட்ட த்திற்குப் புறம்பான செயல்பாடுகளை சி.பி.. உடனடியாக விசாரிக்க வேண்டும்
.

                                           சி.பி.ஐக்கு கொடுக்கப்பட்ட மனு, இணைப்பில்...


                                               (தமிழில் விரிவான பத்திரிகை செய்தி - கீழே)


Satta Panchayat Iyakkam has been creating awareness and fighting against corruption

continuously. Has exposed many corruption with evidence acquired using Right to Information (RTI).
Because of these works, many people reach us with their evidence and information on various corruption 
issues, requesting us to expose the same. Likewise, we have received some documents recently.

These documents seem to indicate that, In the Disproportionate asset case on former
chief minister Ms.J.Jayalalitha (recently passed away), Sasikala, Illavarasi and Sudhakaran, 
during the appeal hearing in Bengaluru High court, there seem to be some illegal activities happened
in influencing the judgement in favour of the accused.

Generally, when we receive documents related to corruption, we publish it only after analyzing the
veracity of the evidence. But since this document involves Chief Minister, Judge - to establish the
authenticity, for us it will take too long. Hence we have submitted this document to Central Bureau of
Investigation (CBI). We submitted this document on 10/02/2017 in-person at the CBI head
office in Delhi and have received acknowledgement for the same(attached). 

We request the CBI to investigate this documents and take appropriate action
quickly. We also request the press to analyse these documents from all perspective and bring the truth.
Satta Panchayat Iyakkam will continue to work on collecting more evidence based on this documents
and will bring it to the notice of CBI and public.

We would like to bring it to notice that the Special Public Prosecutor  B.V.Acharya in the disproportionate 
assets case resigned in August 2012, saying "...he had suffered untold hardship and embarrassment at the
 instance of interested parties". Pressure form interested parties even to former Advocate-General indicates 
the interesting parties has been trying to wield their influence to shape the outcome in their favour in the past too.
It is presumed that these powerful interested parties will fight tooth and nail to get themselves acquitted.
Otherwise, their political future will be in stake. 
Hence, there is a possibility of the above said illegal efforts by the accused.

The Judiciary is the guardian of democracy and we hold judiciary in the highest regards. 
Without the Judiciary's outstanding orders, disclosure of criminal background and assets of candidates & their family
would not have been possible. 
It's imperative that any possible irregularities must be looked into to protect the Judiciary. 

Note: We have also sent a copy of the representation to Chief Justice of India.

Thanks,

Siva Elango,
President, Satta Panchayt Iyakkam
87545-80270, 87545-80274

Attachments:
1. Representation given to CBI(with acknowledgement)  
2. Satta Panchayat executives photo infront of CBI,Delhi after giving representation

       சொத்துக்குவிப்பு வழக்கின் பின்புலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் 
சட்ட த்திற்குப் புறம்பான செயல்பாடுகளை சி.பி.உடனடியாக விசாரிக்க வேண்டும்
.

                                                               பத்திரிகை செய்தி( 12/02/2017)

சட்ட பஞ்சாயத்து இயக்கமானது இலஞ் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுப் பணிகள், போராட்டங்கள்

நடத்திவருகிறது. பல்வேறு ஊழல்களை தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. 

இயக்கத்தின் இதுபோன்ற செயல்பாடுகளால், 

இலஞ்ச ஊழல் தொடர்பான பல்வேறு தகவல், தாரங்களை பொதுமக்கள், அமைப்புகள் எங்கள் இயக்கத்திற்கு அளித்து அதனை அம்பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்வார்கள். 

அந்த வகையில் சமீபத்தில் எங்களுக்கு சில ஆவணங்கள் கிடைத்தனஇந் ஆவணங்களானது முதல்வராக இருந்து மறைந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூர் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணையில் விடுதலையானதின் பின்புலத்தில் சட்டவிரோத செயல்பாடுகள்(ரூ.200கோடி பணப்பரிமாற்றம் தொடர்பாக) இருந்தன என்ற பொருள்படும் வகையில் இருக்கிறது.

 

பொதுவாக, ஊழல் தொடர்பாக எங்களின் பார்வைக்குக் கொண்டுவரப்படும் ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்த பின்பே வெளியிடுவோம். ஆனால், இந்த ஆவணங்கள் முதலமைச்சர், நீதிபதி போன்றவர்கள் தொடர்பானது என்பதால் இதன் உண்மைத்தன்மையை நாங்கள் உறுதிப்படுத்த நீண்ட காலம் பிடிக்கும். ஆகவே, இலஞ்ச-ஊழலை விசாரிக்கும் மத்திய அமைப்பான மத்திய புலனாய்வுத் துறையிடம்(CBI)  இந்த ஆவணங்களை சமர்பித்துள்ளோம். 10/02/2017 அன்று டெல்லியில் உள்ள சி.பி. தலைமை அலுவலகத்தில் எங்களுக்கு வந்த ஆவணங்களை நேரில் கொண்டுசென்று கொடுத்துள்ளோம்(அதற்கான ஒப்புகை(Acknowledgement) வாங்கியுள்ளோம்.)

 

இதுபோன்ற முறைகேடுகள் சாத்தியமா என்று கேள்வி, சந்தேகம் எழலாம். வழக்கிலிருந்து விடுதலையாகாவிட்டால் தங்கள் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று கருதும் அதிகார மற்றும் பணபலமிக்கவர்கள் எப்பாடுபட்டேனும் தங்களை வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்ள முயற்சிப்பார்கள் என்பதற்கு முன்னுதாரணங்கள் இருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அரசின் சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிய B.V.ஆச்சார்யா அவர்கள் வழக்கு நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில்(ஆகஸ்ட் 2012ல்) "...சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடையவர்களால் எல்லையில்லா துன்பங்களையும், சங்கடங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது" என்று சொல்லிவிட்டு இந்த வழக்கிற்காக வாதாடுவதிலிருந்து விலகிய சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். சொத்துக்குவிப்பு வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞருக்கு அழுத்தம் கொடுத்த சம்பந்தப்பட்ட அரசியல் சக்திகள், தங்களை வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்ள எந்தவிதமான சட்டவிரோதச் செயல்பாடுகளிலும் ஈடுபடுவார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

ஜனநாயகத்தை, அரசியல் சாசனத்தின் மாண்புகளைக் காப்பற்றி வருவது நீதிமன்றங்களே. 
அப்படிப்பட்ட நீதிமன்றங்கள் மீதும், நீதி பரிபாலணை மீதும் நாங்கள் உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறோம்.
தேர்தலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள்தான் காரணமாக இருந்திருக்கிறது.
தேர்தலில் போட்டியிடுபவர்களின் குற்றப்பின்னணி, சொத்துவிவரங்களை வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால்தான்
இன்று பஞ்சாயத்துத் தேர்தலிலிருந்து பாராளுமன்றத் தேர்தல்வரை போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின்  குற்றப்பின்னணி, சொத்துவிவரங்களை 
வெளியிடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். தேர்தலில் போட்டியிடுபவர்களின் முழுவிவரங்களை அறிந்துகொள்வதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது என்பதை
உறுதிசெய்தது உச்சநீதிமன்றமே என்பதை நாங்கள் அறிவோம். 

இருந்தபோதிலும், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட செல்வாக்குமிக்க நபர்களின் நெருக்கடி,அழுத்தத்தின் காரணமாக நடந்திருக்க வாய்ப்புள்ள
இந்த சட்டவிரோத செயல்பாடுகள் நீதித்துறையின் மாண்பைக் குலைப்பதாக இருந்துவிடக்கூடாது என்பதே எங்கள் விருப்பம். 

சி.பி.ஐ.யின் தீவிர விசாரணை, ஊடகங்களின் அழுத்தம் இருந்தால் இதுகுறித்த முழு உண்மையை விரைவில் வெளிக்கொண்டுவர முடியும்.
சட்ட பஞ்சாயத்து இயக்கமும் இந்த ஆவணங்கள் குறித்து மேற்படியான தகவலை, ஆதாரங்களை திரட்டி மக்களின் பார்வைக்கு, சி.பி..யின் கவனத்திற்குக் கொண்டுவரும். 

ஊழல்வாதிகள், சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் மூலம் நீதியை வளைக்க நினைப்பவர்கள்  யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கை.

குறிப்பு: சிபிஐக்கு கொடுத்த மனுவின் நகலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பியுள்ளோம்.

இணைப்பில்:  
1. டெல்லி, சிபிஐ அலுவலகத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கொடுத்த மனுவின் சாராம்சம்(தமிழில்)  
2. Text of original version in English
3. டெல்லிம் சிபிஐ அலுவலகத்தில் மனுகொடுக்கும் சட்ட பஞ்சாயத்து நிர்வாகிகளின் படம்

சிவ.இளங்கோ,
தலைவர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80270, 87545-80274

No comments:

Post a Comment