Sir,
Attached :
our detailed affidavit(50+ pages) in Supreme Court - reg sasikala Sewaring in ceremony
our detailed affidavit(50+ pages) in Supreme Court - reg sasikala Sewaring in ceremony
and
Our latest Representation(dt 08-02-2017) to President of India, Governor,Chief Justice of India
Senthil Arumugam, General Secretary, Satta Panchayat Iyakkam, 87545-80274, 87545-80270
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி உள்ள சூழல், விவசாயிகள் தற்கொலை போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டிய தமிழக அரசு நிர்வாகத்தின் கவனம் அனைத்தையும் தன்னுடைய
பதவிப்பிரமாணத்திற்காக, முதலமைச்சர் நாற்காலியில் அமரவேண்டும் என்ற சுயநலத்திற்காகவும் சீரழித்துவருவது தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலே காணாத புதுவகையான "அரசியல் அசிங்கம்".
இன்னும் ஒருவாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் சிறைக்கு அனுப்பப்படவும் வாய்ப்புள்ள சசிகலா அவர்கள் அவசர அவசரமாக முதல்வர் நாற்காலியில் அமர ஆசைப்படுவது ஏன்..? சிறைக்குச் செல்லும்போது முதலமைச்சராக இருந்தால் சிறப்பு சலுகைகள், பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்காகவா..?
இதுவரை ஒரு பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகூட வகிக்காத சசிகலா அவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவைப் பெற்ற முதல்வர் பன்னீர் செல்வத்தையே மிரட்டுகிறார் என்றால்;
காவல்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதல்வரையே மிரட்டுகிறார் என்றால்... சசிகலா அவர்கள் முதல்வர் ஆகிவிட்டால் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துவிடும் என்பது நிச்சயம். அரசு கஜனா சூறையாடப்படும் என்பது உறுதி..
ஆகவே, சட்ட பஞ்சாயத்து இயக்கம் சசிகலாவை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்துவைக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இந்த வழக்கு எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரலாம்(நாளையே கூட வரலாம்..)
இந்த வழக்கு எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரலாம்(நாளையே கூட வரலாம்..)
ஆகவே, பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலும்(மிரட்டி வாங்கப்பட்ட) சசிகலாவை முதல்வராக அறிவிக்கக்கூடாது என்று ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் இன்று மனு ஒன்றை அனுப்பியுள்ளோம்.
செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
8754580274, 8754580274
No comments:
Post a Comment