Saturday, 29 August 2015

Press Meet Invite : Date,Time: Aug 30, Sunday, 12:30pm Venue: Satta Panchayat Office, T,Nagar


PRESS MEET INVITE:

Date,Time: Aug 30, Sunday, 12:30pm
Venue: Satta Panchayat Office, T,Nagar
           ( 31, south west boag road, T.Nagar)
Contact: 8754580270 ( siva elango )

Subject:


 - Releasing statistical data of public referendum conducted by SPI.
   The Question asked to public is:  "In 2016 Election Whether you will vote for the Party which will bring Prohibition or you will vote for the party to whom you regularly vote" 

 - Announcing next course of action plan on 7th Day of fasting demanding liquor prohibition announcement in Assembly

Siva Elango,
President, Satta Panchayat Iyakkam,
8754580270

பத்திரிகையாளர் சந்திப்பு:
நாள், நேரம்: ஆகஸ்ட் 30, மதியம் 12:30 மணி
இடம்:சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகம், தி.நகர்
           31, தென்மேற்கு போக் சாலை, தி.நகர்

பொருள்:
- "2016-சட்ட மன்றத் தேர்தலில் மதுவிலக்கை அறிவிக்கும் கட்சிக்கு வாக்களிப்பீர்களா..? அல்லது எப்போதும் ஓட்டுப்போடும் கட்சிக்கே வாக்களிப்பீர்களா என்று பொதுமக்களிடம் நடத்திய கருத்துகணிப்பின் முடிவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியீடு( வாக்குச்சீட்டை இணைத்துள்ளோம்)

- சட்டசபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி 7வது நாளாகத் தொடரும்  உண்ணாவிரதத்தின் அடுத்தகட்ட போரட்டம் குறித்த அறிவிப்பு

சிவ.இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
8754580270



நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269

​Satta Panchayat Iyakkam

|  31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Join Us : join.sattam.orgDonate Online : donate.sattam.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath

To Register for Monthly Contribution and become a SPI Pillar : 1001.sattam.org

Other Contact:

SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
Google Groups : spimembers@googlegroups.com

Friday, 28 August 2015

Fwd: Today DAY 5 - Fasting Continues.. Demanding Liquor Prohibition

Press Release: Day 5 ( Aug 28,2015)


- Today, 5th day of fasting continued demanding liquor prohibition announcement in Assembly

- Satta Panchayat General secretary Senthil Arumugam and Varaagi Sithar both are going on fast for last 5 days.
  Today medical checkup was done for them.

- On behalf of Congress Party Thiru.Americai Narayayan came to extend his party support.

- When we were doing public referendum, Thanthi TV covered it and asked public opinion

- Fast will be continued tomorrow

Siva Elango,
President,
Satta Panchayat Iyakkam, 8754580270








Thursday, 27 August 2015

Day 4 Fasting - by Satta Panchayat.. Press Release

Satta Panchayat Press Release:


Today(Aug 27), Day 4 of fasting demanding Liquor prohibition announcement in Assembly continued by Satta Panchayat Iyakkam. Satta Panchayat general secretary Senthil Arumugam and Varaagi Sithar both going on fast for last 4 days..

Siva Elango, President
Satta Panchayat Iyakkam, 8754580270

இன்று(ஆக 27) சட்ட சபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் 4வது நாளாக உண்ணாவிரதம் போராட்டத்தை தொடர்ந்தது. சட்ட பஞ்சாயத்து இயக்க செயலாளர் செந்தில் ஆறுமுகம், வராஹி சித்தர் ஆகிய இருவர் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.

சிவ.இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
8754580270 







Wednesday, 26 August 2015

ஓட்டெடுப்பு விவரங்கள்..3rd Day Fasting for Prohibition: - 3வது நாள் உண்ணாவிரதம் -

To the Editor:


3rd Day fasting continued by Satta Panchayat Iyakkam(SPI) demanding Liquor Prohibition. SPI General Secretary Senthil Arumugam, State Secretary Jaiganesh, Varaahi Sithar continue fast. Today evening we conducted a public referendum asking people whether they will "Vote for party which close TASMAC shops" OR "they will continue to vote asusual irrespective of TASMAC issue" .Totally 64 voted polled. Except 4 votes all other 60 votes favored for party which will close TASMAC shops.. Photos attached.. Tomorrow, Fast will continue for the 4th day.

Siva Elango,
President, Satta Panchayat, 8754580270

   
ஆசிரியர் அவர்களுக்கு,
சட்ட சபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி 3ம் நாள் உண்ணாவிரதத்தை சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்தது. இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாநில செயலாளர் ஜெய்கணேஷ், வராஹி சித்தர் ஆகியோர் 3வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர். இன்றைய மாலை நிகழ்வில் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினோம். 64 பேர் வாக்களித்தனர். 60 பேர் "டாஸ்மாக்கை மூடும் கட்சிக்கே வாக்களிப்போம்" என்று வாக்களித்தனர். 4 பேர் "எப்போதும் ஓட்டுப்போடும் கட்சிக்கே வாக்களிப்போன்" என்று ஓட்டுப்போட்டனர்.

4 வது நாளாக நாளையும் உண்ணாவிரதம் தொடர்கிறது..

சிவ இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580270









Day 3 உண்ணாவிரதம் - சட்டசபையில் மதுவிலக்கு அறிவிக்க கோரி


பத்திரிக்கை அழைப்பு செய்தி

நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பை வெளியிடவேண்டும் என வலியுறுத்தி சட்ட பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப்பில் 3ம்நாள் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்றது. சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாநிலச் செயலாளர் ஜெய்கணேஷ், வராஹி சித்தர் ஆகியோர் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். 

3வது நாளான இன்று மாலை 5.30 மணிக்கு, வருகின்ற சட்டமன்ற தேர்தலில்  மதுவிலக்கு பிரச்சனையின் முக்கிய பங்கை கணக்கிடும் வகையில் பொதுமக்களின் இடையே வாக்கெடுப்பு  நடைபெற உள்ளது. இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் டாஸ்மாக் கடையை மூடும் கட்சிக்கு வாக்களிப்பார்களா அல்லது எப்பொழுதும் ஓட்டு போடும் கட்சிக்கு வாக்களிப்பார்களா என்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பத்திரிக்கையாளர்கள் இதை பொது மக்களிடம் எடுத்து செல்ல வேண்டுகிறோம்.

To the Editor,

Day 3 of fasting demanding Liquor Prohibition Policy announcement in current Assembly Session continued today. Satta Panchayat Iyakkam(SPI) General Secretary Senthil Arumugam, SPI State Secretary Jaiganesh, Varaahi Sithar continued 3rd day fast. Members of various social organisation came in person and gave support.

Today evening, Satta Panchyat will hold a opinion poll to guage the importance of liquor prohibition issue in the upcoming assembly election.Common people will be requested to vote on whether they are going to vote for the party that promises liquor prohibition or the same party that they usually vote for. We request the med cover the event

(Photos attached).

Time: 5.30 Pm

Location: In front of Satta Panchayat Office, No 31, South West Boag Road, T.Nagar, Chennai - 17

நன்றி,
சிவ.இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580270

Tuesday, 25 August 2015

Day 2 Fasting Photos..2ம்நாள் உண்ணாவிரதம்.. தீப ஒளி ஏற்றிப் போராட்டம்..

தமிழ் அறிக்கை கீழே:


To the Editor,

Day 2 of fasting demanding Liquor Prohibition Policy announcement in current Assembly Session continued today. Satta Panchayat Iyakkam(SPI) General Secretary Senthil Arumugam, SPI State Secretary Jaiganesh, Varaahi Sithar, Kumbakonam Ayubkhan continued 2nd day fast. Members of various social organisation came in person and gave support. In the evening we lit lamps in the fasting venue depicting the darkness created in families due to liquor.
(Photos attached).

Siva Elango, President, SPI, 8754580270

மதுவால் இருண்டுபோன தமிழகத்திற்கு மதுவிலக்கு என்னும் வெளிச்சம் வரவேண்டி...  தீப ஒளி ஏற்றிப் போராட்டம்.. 2ம் நாள் உண்ணாவிரதப் போராட்ட நிகழ்வுகள்...

நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பை வெளியிடவேண்டும் என வலியுறுத்தி சட்ட பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப்பில் 2ம்நாள் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்றது. சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாநிலச் செயலாளர் ஜெய்கணேஷ், வராஹி சித்தர், அயூப்கான் ஆகியோர் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அறப்போர் இயக்கம், தோழன் அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

மதுவால் இருண்ட தமிழகத்திற்கு மதுவிலக்கு ஒளி கிடைக்க வேண்டி என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றுவரும் இடத்திற்கு முன்பு உள்ள சாலையின் முன்பாக தீப ஒளி விளக்குகள் ஏற்றி இன்று போராட்டம் நடத்தினோம்.

படங்கள் இணைக்கப்பட்டுள்ளன...

நன்றி,
சிவ.இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580270







Monday, 24 August 2015

சட்டசபையில் மதுவிலக்கை அறிவிக்கக்கோரி - தொடர் உண்ணாவிரதம்

சட்டசபையில் மதுவிலக்கை அறிவிக்கக்கோரி தொடர் உண்ணாவிரதம்: நாள்:1 
                     

Satta Panchayat Iyakkam (SPI) started its 'indefinite fast' today Aug 24 demanding Govt to announce Liquor Prohibition in the current assembly session. The fast was kick started by December 3 Movement President Mr.Deepak Nathan. It is to be noted that December 3 Movement were undergoing indefinite fast for the same demand.


SPI's General Secretary Senthil Arumugam, Secretary Jaiganesh, Kallidaikurichi varaki sithar & Kumbakonam Ayub Khan are undertaking indefinite fast and many supporting this cause. It is to be noted that Kallidaikurichi varaki sithar has also taken 'vow of silence'.


Arappor Iyakkam, Loksatta Party, Students Youth Social Movement, Gandhiya Makkal Iyakkam and Welfare Party of India lent their support today to the fast.


We invite other Social Activists and Anti Liquor Activists to take part and support this noble cause.


டாஸ்மாக் சில்லறை விற்பனை தொடங்கிய 2003ல் ரூ.3639 கோடியாக இருந்த சாராய வருவாய் 2016ல் 30 ஆயிரம் கோடி ரூபாயைத் தொடவுள்ளது. அரசிற்கு வருமானம் பெருகப்பெருக, ஏழைக்குடும்பங்களில் வறுமை பெருகியது; பெண்கள் மீதான வன்முறை பெருகியது; குழந்தைகளின் படிப்பு பாழாகியது; இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்தது. "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய மூத்தகுடி" என்ற பெயர் பெற்ற தமிழ்ச்சமுதாயம் இன்று "சாராய சமுதாயமாகிப்" போகியுள்ளது.

காந்தியவாதி
சசிபெருமாள் மரணம், அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் நடந்த உணர்ச்சிமிகு மதுஒழிப்புப் போராட்டங்கள், குறிப்பாக உடல் அவதிகளையும் பொறுத்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நடத்திய 16 நாள் தொடர் போராட்டம்  எதையும் தமிழக அரசு கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

இந்த சூழ்நிலையில் நாளை சட்டமன்றம் கூட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மதுவிலக்கை அறிவிக்க வேண்டும் என்று கோரி சட்ட பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப்பில் இன்று(24.08.2015) காலை 6 மணிக்கு "தொடர் உண்ணாவிரதம்"  துவங்கியுள்ளோம்.

 

 

மதுவிலக்கு கோரி போராடிய  டிசம்பர் 3 இயக்க(மாற்றுத்திறனாளிக்கான இயக்கம்) தலைவர் தீபக் அவர்கள் இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார்.

மாணவர் இளைஞர் சமுதாய இயக்கம்
(SYSM), இளைய தலைமுறை இயக்கம் ஆகிய இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளோடு இணைந்து உண்ணாவிரதம் துவங்கியுள்ளது.

சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாநில செயலாளர் ஜெய்கணேஷ், கல்லிடைக்குறிச்சி வராகி சித்தர், கும்பகோணம் அயூப்கான் ஆகியோர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

 

இதில் கல்லிடைக்குறிச்சி வராகி சித்தர் அவர்கள் உண்ணாவிரதத்துடன் மௌன விரதமும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மாநில மதுஒழிப்பு அணி ஒருங்கிணைப்பாளரும், தென்மண்டல ஒருங்கிணைப்பாளருமான அண்ணாத்துரை அவர்கள் இந்த உண்ணாவிரதத்திற்கு தலைமையேற்று வழிநடத்துகிறார். ( உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளவர்கள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

 

இன்றைய உண்ணாவிரத்திற்கு மாணவர் இளைஞர் சமுதாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவச்சந்திரன், லோக்சத்தா கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் ஜெகதீஸ்வரன், காந்திய மக்கள் கட்சியின் தங்கவேல், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் மற்றும் வெல்ஃபர் பார்ட்டி இந்தியாவின் தேசிய செயலாளர் சுப்ரமணி, மூத்த பத்திரிகையாளர்கள் T.N.கோபாலன், சாவித்திரி கண்ணன் ஆகியோர் நேரில் வந்து ஆதரவளித்தனர்.


மதுஒழிப்பு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களை இந்த தொடர் உண்ணாவிரதத்தில் பங்கேற்க அழைக்கிறோம்.

கோடிக்கணக்கான மக்களின் ஓட்டுக்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்த ஆளுங்கட்சி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை "மதுவிலக்கு" என்பதை உணர்ந்து மதுவிலக்கை நடைபெறவுள்ள சட்டமன்றத் தொடரிலேயே அறிவிக்க வலியுறுத்துகிறோம்.

குறிப்பு: நாளை(ஆக 25 அன்று) மாலை 5 மணிக்கு மதுவால் இருண்டுகிடக்கும் தமிழகத்தில் மதுவிலக்கு என்னும் ஒளி ஏற்றப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு அருகில் விளக்கு ஏற்ற இருக்கிறோம்.

தொடர்புக்கு
: 87545-80270, 87545-88222

                                                 சிவ.இளங்கோ,
                                                                                 தலைவர்
     



Sunday, 23 August 2015

Tomorrow(Aug24) 6am, Satta Panchayat Starts "CONTINUOS FAST" Demanding "Liquor Prohibition" Announcement in Assembly..சட்டசபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி தொடர் உண்ணாவிரதம்...

தமிழ் அறிக்கை: கீழே

To the Editor:

With Satta Panchayat Iyakkam(SPI) Coordination , Tomorrow Aug 24, 6am, we are starting a "Continuous Fast" demanding Liquor Prohibition announcement in upcoming Assembly session. SPI Team, Representatives of "Students Youth Social Movement(SYSM), Ilaya Thalaimurai Iyakkam takes part in the fast.

Deepak, President of "Dec 3 Movement"(for Physically challenged) who went on 16 days fasting for prohibition initiates the fast.

Fasting venue:
31, south west boag Road, T.Nagar. Contact: 8754580270,8754580274

Siva elango, President, Satta Panchayat Iyakkam

ஆசிரியர் அவர்களுக்கு,

காந்தியவாதி சசிபெருமாள் மரணம், அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் நடந்த உணர்ச்சிமிகு போராட்டங்கள் எதையும் தமிழக அரசு கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் நாளை சட்டமன்றம் கூட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மதுவிலக்கை அறிவிக்க வேண்டும் என்று கோரி சட்ட பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப்பில் ச.ப.இ.நிர்வாகிகள், மாணவர்-இளைஞர் இயக்க பிரதிநிதிகள், இளைய தலைமுறை இயக்கப் பிரதிநிதிகள் "தொடர் உண்ணாவிரதம்" மேற்கொள்ள உள்ளனர்.

இந்த உண்ணாவிரதம் நாளை(ஆக 24) காலை 6 மணிக்கு, சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகத்தில்( 31, தென்மேற்கு போக் சாலை, தி.நகர்) தொடங்கவுள்ளது.

மதுவிலக்கு கோரி 16நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து  போராடிய  டிசம்பர் 3 இயக்க(மாற்றுத்திறனாளிக்காக) தலைவர் தீபக் அவர்கள் இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைக்கிறார்.


மதுஒழிப்பு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களை இந்த தொடர் உண்ணாவிரதத்தில் பங்கேற்க அழைக்கிறோம்.

தொடர்புக்கு: 8754580270, 8754580274

சிவ.இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

Monday, 17 August 2015

Siddha Mupperu Vizha (16-08-2015) - Press meet

Respected Sir/Madam,

Please find enclosed details which contains Press meet  materials and links of the Siddha Maruthuva Mupperu Vizha  photos.

http://siddhamd.com/images/photos/IMG_0099.JPG
http://siddhamd.com/images/photos/IMG_0103.JPG
http://siddhamd.com/images/photos/IMG_0125.JPG
http://siddhamd.com/images/photos/IMG_0127.JPG
http://siddhamd.com/images/photos/IMG_1937.JPG
http://siddhamd.com/images/photos/IMG_1945.JPG
http://siddhamd.com/images/photos/IMG_0149.JPG
http://siddhamd.com/images/photos/IMG_0164.JPG
http://siddhamd.com/images/photos/IMG_0177.JPG

and also attached the news covered by our medias:

Links:




Regards,
Organizing Committee,
Siddha Mupperu Vizha.

Contact: 
Mr. A.Suresh, 98844 11637
Dr. P.Selva Shanmugam, 98948 28968

Wednesday, 12 August 2015

Invitation for Siddha Meppuru Vizha Grand Function and Press meet

அன்புடையீர் வணக்கம்,

சித்த மருத்துவ முப்பெரு விழாவிற்கு உங்களைக் கலந்து கொள்ள அழைப்பதில் மகிழ்வடைகிறோம்.

தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் முக்கியமானது மருத்துவக்கலை. 10000 ஆண்டுகளுக்கு முன்பே உருவனதாகக் கருதப்பட்டும் சித்த மருத்துவக்கலை இடைவிடாமல் பல நூற்றாண்டுகள் மனித இனத்திற்கு பயன்பட்டுக் கொண்டுள்ளது என்பது அதன் தனிச்சிறப்பு.

சித்த மருத்துவத்தில் மருந்திற்காக  பயன்படுத்தப்படும் பொருட்களும் நோய் கணிப்பிற்கான  எளிய முறைகளும் வாழ்வியல் முறைகளும் நலமான, இன்பமான  வாழ்விற்கு மட்டுமல்லாது  தனி குடும்ப பொருளாதாரத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நன்மை உண்டாக்குபவை. 

புதிய பல நோய்கள் பரவி வருவதும் அவை இக்கால அறிவியலுக்கு பெரும் சவாலாக இருப்பதும் நாம் அறிந்தது. இக்காலகட்டதில் சித்த மருத்துவத்தின் பயன்பாடு பரவலாக்கப் படுவது அவசியமாகிறது. 

நல வாழ்வு, அமைதி, பேரின்ப வாழ்வு இவைகளை மக்கள் அடைய வைப்பதற்கு  சித்த மருத்துவத்தின் பங்கு மிகவும் அவசியம்.

அதற்கவே உலக சித்த மருத்துவ அறக்கட்டளை (World Siddha Trust) உருவாக்கப்படுகின்றது. 

www.SiddhaMD.com  என்கிற இணைய தளம் அனைத்து சித்த மருத்துவர்களினைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய ஒரு வலைத்தளம். சித்த மருத்துவம் சார்ந்த முக்கியத் தகவல்களை இந்தத் தளத்தில் பெறலாம். 

நலம் காக்கும் சித்த மருத்துவம் என்கிற புத்தகம் நோய் இல்லாமல் வாழும் சித்தர்களின் வழி முறைகளை எளிய முறையில் மக்களுக்குக் கற்றுத்தரும்.

சமூக முன்னேற்றம் மட்டுமே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்படும் இந்த முப்பெரு விழாவினை மக்களுக்கு முறையாக சிறப்பாக எடுத்துச்சொல்ல வேண்டியது நம் கடமை. சமூகத்தின் உயிர் துடிப்பாய் இயங்கிக்கொண்டுள்ள ஊடகங்கள் இச்செயலை சிறப்பாக செய்யும் என்கிற தீர்க்கமான நம்பிக்கை விழாகுழுவினருக்கு உண்டு. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை உங்கள் ஊடகத்தின் வாயிலாக மக்களுக்குத் தெரியப்படுத்துமாறு விழாக்குழு அன்போடு கேட்டுக்கொள்கிறது.

இந்த விழா தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு (Press meet) ஒன்று  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது விழாவிற்கு முன்பாக அதாவது 16.08.15  ஞாயிறு மாலை.3.30 மணிக்கு விழா அரங்கிலேயே நடக்கும். அச்சமயம் தாங்கள் கலந்து கொள்ளவும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் உங்களை அன்போடு அழைக்கிறோம்.

அன்று இரவு நல்ல சோறு அமைப்பினர் வழங்கும் நமது பாரம்பரிய உணவு விருந்திலும் கலந்து கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம்.

நன்றி.
இப்படிக்கு,
விழாக் குழுவினர்.

தொடர்பிற்கு:
அ. சுரேஷ், 98844 11637
மருத்துவர். ப. செல்வ சண்முகம், 98948 28968



Respected Sir/Madam,

We are pleased to invite you for the “Siddha Mupperu Vizha”.

Siddha system of Medicine is an ancient medical system of the world. Distinctiveness of this system has been in continuous service to the humanity for more than 5000 years. Usage of a Siddha way of life leads not only to healthy life, but also to strengthen the economy of families and also the country.

The important goals of the society are healthy life, peace, wisdom and bliss. Siddha system provides a right way to the society to achieve the aforesaid goals.

The World Siddha Trust is inaugurated on that day. The main aim is to improve the health status of the society through Siddha, the easiest way of life. On that day we also planned to inaugurate www.SiddhaMD.com. This is going to be an important website for Siddha system of medicine. We release a book, Nalam Kakkum Siddha Maruthuvam (Siddha system for Healthy life) on that day.

Improvement of the society in all facets is one of the main aims for all media. We trust that your media is going to disseminate this news effectively.

On that day we are planning to conduct a Press meet in the same Venue (16.8.2015, Sunday  – 3.30 PM). Kindly attend the Press meet, Functions and also the Dinner with our traditional foods (Nalla Soru organization).

Please find attached invitation.

Thank you.

Regards,
Reception Committee,
Siddha Mupperu Vizha.

Contact:
Mr. A.Suresh, 98844 11637
Dr. P.Selva Shanmugam, 98948 28968

Press Invite: TASMAC Research Report Release... "டாஸ்மாக் - தமிழ்நாட்டின் பேரிடர்” - ஆய்வறிக்கை வெளியீடு”

ஆசிரியர் அவர்களுக்கு,

 

"டாஸ்மாக் - தமிழ்நாட்டின் பேரிடர்" - ஆய்வறிக்கை வெளியீடு" 
       -மகசூல் இயக்கம்
& சட்ட பஞ்சாயத்து இயக்கம்

புள்ளியல் முறைப்படி, வீடு வீடாக நடத்தப்பட்ட களஆய்வு முடிவுகளின் தொகுப்பு இது.

-- தமிழ்நாட்டில் குடிப்பவர்களின் எண்ணிக்கை,
 

-- தினமும் எந்த அளவுக்கு குடிக்கிறார்கள், 

-- இதனால் ஏற்படும் சமூக சீர்கேடுகள், பொருளாதார இழப்பு

-- மதுவிலக்கு குறித்து மக்களின் விருப்பம் 

 

என இவை அனைத்தும் ஆய்வில் வெளிவந்துள்ளது.


இந்த நிகழ்வில் பத்திரிக்கையாளர் ஞானி
ஓய்வுபெற்ற துணை வேந்தர் வசந்தி தேவி, ஓய்வுபெற்ற IAS அதிகாரி தேவசகாயம். ஐ.ஏ.எஸ்(ஓய்வு), மற்றும் மனித உரிமை வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று ஆய்வை வெளியிட உள்ளனர்.

ஊடகங்களும் பத்திரிக்கைகளும் இந்த நிகழ்வில் பங்கேற்று மக்களுக்கு எடுத்து செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.

 

We welcome you for the release of Research and fact finding report on Socio Economic Issues due to TASMAC, Tomorrow Thursday, 13/8/2015 at 4.15 PM at ICSA, Egmore. The study also covered in detail about the addiction levels in TamilNadu and people's opinion on the TASMAC issue.


Devasagayam.IAS(Rtd), Dr.VasanthiDevi-Educationist, Journalist Gnani & Lawyer-Activist Sudha Ramalingam Participates.

 

இடம் : ICSA, No 107பாந்தியன் சாலை, எக்மோர் (எக்மோர் மியுசியம் எதிரில்)

நாள் : 13/8/2015வியாழன்

நேரம் : 4.15 PM

 

நன்றி

Jayaram Venkatesan ( Magasool Trust)

ஜெயராம் வெங்கடேசன் (மகசூல் இயக்கம்)

CT: 9841894700

Senthil Arumugam,( Satta panchayat Iyakkam)
செந்தில் ஆறுமுகம் (சட்ட பஞ்சாயத்து இயக்கம்)

CT: 8754580274

 



PRESS RELEASE: ”வாசுவும் சரவணனும்" படத்திற்கு கேளிக்கைவரி விலக்கு அளிக்கக் கூடாது” ..Entertainment Tax Exemption Should not be given to the film "Vaasuvum Saravananum" FILM..

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

English version can be found below Tamil version...

"வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க" படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கக்கூடாது என்று கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் வணிகவரித்துறை செயலாளருக்கு மனு அனுப்பியுள்ளது. கடிதத்தின் நகல், எந்தெந்தப் படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கலாம் என்பது குறித்த அரசாணை நகல் ஆகியவற்றை இணைத்துள்ளோம். 

இதுபோன்ற வரிவிலக்கு கொடுப்பதால் அரசிற்கு பலநூறு கோடிகள் வரி இழப்பு ஏற்படுகிறது (1997ல் ரூ.109 கோடியாக இருந்த கேளிக்கை வரிவருவாய் 10 ஆண்டுகள் கழித்து 2007ல் ரூ.16 கோடியாக குறைந்துள்ளது)

சமூக நலன் கருதி இக்கருத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். ( மேலும் விவரங்களுக்கு: http://closetasmac.blogspot.in )

செந்தில் ஆறுமுகம், பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274

Entertainment Tax Exemption Should not be given to the film "Vaasuvum Saravananum" FILM..
                                              -- Satta Panchayat Iyakkam sends representation to Commercial Tax Department

Satta Panchayat Iyakkam(SPI) Sent representation to the Secretary of Commercial Tax department requesting to NOT give Entertainment Tax exemption to the film "Vaasuvum Saravananum Onna Padichavanga". ( Citing the criteria listed in GO : 002 dt 03.01.2012). 

GO Copy and our representation is attached.. For details: http://closetasmac.blogspot.in ). It is to be noted that, due to tax exemptions to films entertainment tax revenue to govt got reduced a lot. To put it in numbers, In 1997, entertainment tax revenue to TN is : Rs.109 Cr. After 10 yrs, it should have raised to 5 times or more.. But it stands at Rs.16 cr..!! ) . We are not against a particular film. The logic needs to be applied on all Tamil films. Exceptional films only given Tax exemption, not all films..

Senthil Arumugam,
General Secretary,
Satta Panchayat Iyakkam, 8754580274

Tuesday, 11 August 2015

”வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க”(V.S.O.P) திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கக்கூடாது...

11-08-2015

அனுப்புனர்:

செந்தில் ஆறுமுகம், பொதுச்செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
31,தென்மேற்கு போக் சாலை, சென்னை-600017
87545-80274, 87545-80270

பெறுநர்:
செயலாளர், வணிகவரித்துறை & பதிவுத்துறை, தலைமைச் செயலகம்,
சென்னை-600009

வணக்கம்,
பொருள்: ”வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க”(V.S.O.P) திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கக்கூடாது என்று கோரி…

பார்வை: வணிக வரித்துறை, பதிவுத்துறை அரசாணை(நிலை) எண்:002 (03.01.2012 தேதியிட்டது)

எங்கள் இயக்கம் இலஞ்ச-ஊழல் ஒழிப்பு, மதுஒழிப்பிற்காகச் செயல்பட்டு வருகிறது. நாங்கள்,

மதுவிலக்கு கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். தற்போது தமிழகமெங்கும்

மதுவிலக்கு கோரி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில்

வருகிற 14.08.2015 அன்று வெளியாகவுள்ள “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க”

திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மதுப்பழக்கத்தை மேலும் தூண்டுவதாக உள்ளது

என்பதை அறிந்து இம்மனுவை அனுப்புகிறோம்.



V.S.O.P. என்பது ஒரு மதுபான வகையின் பெயர் என்று தெரிந்திருந்தும் இப்படத்தின் சுருக்கப்பெயர்

V.S.O.P என்று வருவதற்கு ஏதுவாக ”வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க”(VSOP) என்று

பெயர் வைத்துள்ளார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும்போது இப்படம் மதுபான

உற்பத்தியாளர்களின் நிதியுதவியாலும், தூண்டுதலாலும் எடுக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம்

எழுகிறது.


படத்திலுள்ள பாடல் வரிகளில்: “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க.. ஊரிலுள்ள பாரில்
எல்லாம்
சேர்ந்தே குடிச்சவங்க”  என்று வருகிறது. நட்பு – மகிழ்ச்சி – படிப்பு  இவை அனைத்தையும்

“குடிப்பழக்கத்தோடு” தொடர்புபடுத்தும்விதமான கட்சிகள் நிறைய உள்ளன.

பீர் குடித்துவிட்டு இளம் கதாநாயகர்கள் இருவரும் “மகிழ்ந்திரு” என்று சொல்லும் காட்சி,

தமிழக இளைஞர்களை மகிழ்ச்சியை நோக்கியல்ல, மரணத்தை நோக்கியே

அழைத்துச்செல்லும்.


இதுபோன்ற படங்களுக்கு “U” சான்றிதழ் அளித்ததே தவறானது என்பது எங்கள் வாதம்.
(

இயக்குனர் விஜயகுமார் அவர்கள் இயக்கிய “பரபரப்பான விற்பனையில் சரக்கு” என்ற மதுஒழிப்பை

வலியுறுத்தும் படத்தில் மதுக்காட்சிகள் கூடுதலாக இருக்கிறது என்பதால் “A” சான்றிதழ்

கொடுத்துள்ளார்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.)



இளைஞர்கள், மாணவர்களைச் சீரழிக்கும் இதுபோன்ற படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து

விலக்கு (Entertainment Tax Exemption) அளிக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
வணிக

வரித்துறை, பதிவுத்துறை அரசாணை(நிலை) எண்:002
(03.01.2012) எந்தெந்தப் படங்களுக்கு

கேளிக்கை வரிவிலக்கு அளிக்கலாம் என்று விதிமுறைகளைப் பட்டியலிடுகிறது. இதில்

விதி எண்
2.2 “……திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ்மொழி மற்றும்

பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்
.” என்கிறது.  இப்படத்தின்

தலைப்பு, காட்சிகள், வசனங்கள் தமிழ் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதைவிட

சீரழிக்கும் பணியையே செய்கிறது. ஆகவே, நீங்கள் வகுத்துவைத்துள்ள

சட்டவிதிமுறைகளின் அடிப்படையில் பார்த்தாலும் இப்படத்திற்கு வரிவிலக்கு
அளிக்கமுடியாது.



விழிப்புணர்வளிக்கும் படங்களைத் தவிர வேறு எந்தப்படங்களுக்கும் கேளிக்கை

வரிவிலக்கு அளிக்கக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. இருந்தபோதும், தற்போது

தாங்கள் சிலவிதிமுறைகளைப் பின்பற்றி திரைப்படங்களுக்கு வரிவிலக்கு

அளித்துவருகிறீர்கள். அந்த விதிமுறைகளை மீறும் எந்தப்படங்களுக்கும் வரிவிலக்கு

அளிக்கக்கூடாது என்பதே எங்கள் வேண்டுகோள்.



”வாசுவும்
 சரவணனும் ஒண்ணா படிச்சவங்க “ (V.S.O.P) படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு 

அளிக்கக்கூடாது என்றும், ஏற்கனவே வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தால் அதை ரத்து

செய்யவேண்டும் என்றும் கோருகிறோம்.
உங்கள் முடிவு, வருங்காலத்தில் திரைப்படம்

எடுப்பவர்கள் மதுப்பழக்கத்தை ஊக்குவிக்குமாறு காட்சிகள் வைப்பதற்கு
தயக்கத்தை

ஏற்படுத்த வேண்டும். மதுக்காட்சிகள் வைத்தால் வரிவிலக்கு கிடைக்காது என்ற அச்சத்தை

ஏற்படுத்த வேண்டும். பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றால், கண்டிப்பாக மதுக்காட்சிகளை

தவிர்த்துவிடுவார்கள்.



எங்கள் கோரிக்கை என்பது இந்தக் குறிப்பிட்ட படத்திற்கு எதிரானது மட்டுமல்ல, இனிவரும்
அனைத்துப் படங்களுக்கும் சேர்த்துத்தான். V.S.O.P. படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாக

இருப்பதால் இதுகுறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டுகிறோம்.


தமிழகத்தில் தற்போது பெரும்பாலான அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், பெண்கள்

அமைப்புகள், மாணவர்-இளைஞர் அமைப்புகள் மதுவிற்கு எதிராகப் போராடி வருகின்றன.

அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்னையைக் கொண்டுசென்று, அனைத்துக் கட்சிகள்,

அமைப்புகளையும் இக்கருத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறோம்.

தார்மீக அடிப்படையிலும், சட்ட ரீதியிலும் நியாயமான எங்கள் கோரிக்கையை பரிசீலித்து

மதுப்பழக்கத்தைத் தூண்டும்
VSOP போன்ற படங்களுக்கு வரிவிலக்கு தரப்படக்கூடாது. எங்கள்

கோரிக்கை ஏற்கப்படாவிடில் மதுஒழிப்பு இயக்கங்கள் மற்றும் பிற அமைப்புகளோடு கலந்துபேசி

போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.


மேலும், மதுப்பழக்கத்தை தூண்டும் படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது
வணிக வரித்துறை,

பதிவுத்துறை அரசாணையில்(எண்:002 (03.01.2012)
) வகுத்துள்ள விதிமுறைகளுக்கு முரணானது

என்பதால் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.


மதுவிலக்குப் போராட்டம், பற்றி எரியும் பிரச்னையாக உள்ள சூழ்நிலையில் நீங்கள் நல்ல முடிவு

எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி.


                                                                           செந்தில் ஆறுமுகம்,
                                                                               
பொதுச்செயலாளர்
நகல்:

1. வணிகவரித்துறை அமைச்சர்  2. நிதித்துறை செயலாளர்
3. தலைமைச் செயலாளர்  4. முதலமைச்சர்  5. அனைத்து ஊடகங்கள்












Protest Invite: ”ஜால்ரா அடிக்கும்” போராட்டம் - Protest infront of State Info Commission...

ஆசிரியர் அவர்களுக்கு / To the Editor:


Protest infront of State Info Commission, Teynampet, Tomorrow(Aug 12), 4pm, to condemn undemocratic appointment of State info Commissioners... "Jalra Protest"..  Contact: 8754580270, 8754580274, Satta Panchayat Iyakkam

Senthil Arumugam, General Secretary, Satta Panchayat Iyakkam

சட்டத்தை மீறி அரசுக்கு சாதகமாக செயல்படுபவர்களையே மாநில தகவல் ஆணையர்களாக நியமிக்கும் தமிழக அரசின் சர்வாதிகாரப்போக்கைக் கண்டித்து "ஜால்ரா அடிக்கும் போராட்டம்"

இடம்: மாநில தகவல் ஆணையம் முன்பாக, தேனாம்பேட்டை
நாள்: 12-08-2015(புதன்) , மாலை 4 மணி
தொடர்புக்கு: 8754580270, 8754580274

செந்தில் ஆறுமுகம், பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்




Sunday, 2 August 2015

திமுகவின் சாராய தொழிற்சாலைகளும் மதுவிலக்கு அறிவிப்பும்

திமுகவின் சாராய தொழிற்சாலைகளும் மதுவிலக்கு அறிவிப்பும்

திமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அறிவிக்கப்படும் என்று கூறிவிட்டு அதை தயாரிக்கும் குழுவின் தலைவராக டி.ஆர்.பாலுவை நியமிப்பது மிகவும் ஒரு வேடிக்கையான வேதனையான நிகழ்ச்சி. அவரது குடும்பம் நடத்தும் #கோல்டன்_வாட்ஸ் சாராய தொழிற்சாலை கடந்த 3 வருடங்களில் சுமார் 1664 கோடி பெறுமான சாராயத்தை டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்துள்ளது. இந்த சாராய தொழிற்சாலை வருமானம் பாதிக்கப்படாமல் எப்படி மதுவிலக்கு கொள்கை தீட்டலாம் என்று தானே இவர் யோசிப்பார்.
நீங்கள் என்ன சொன்னாலும் மக்கள் நம்பிவிடுவார்கள் என்பது அந்தக்காலம். தமிழக அரசு உடனடியாக மதுவிலக்கு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் திமுக தங்கள் கட்சிக்கு நெருக்கமானவர்கள் நடத்தும் தொழிற்சாலைகளில் இருந்து இனி ஒரு சொட்டு சாராயம் கூட டாஸ்மாக் கடைகளுக்கு விற்க மாட்டோம் என்று அறிவிப்பார்களா?



டி.ஆர்.பாலுவின் குடும்ப தொழிற்சாலை தவிர
திமுகவின் ஜெகத்த்ரட்சகனுக்கு சொந்தமான #எலைட் (2444 கோடி),
கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான படத்தின் தயாரிப்பாளர் ஜெயமுருகனின் #எஸ்_என்_ஜே (3892),
திமுகவுக்கு நெருக்கமான காரைக்காலை சேர்ந்த வாசுதேவனுக்கு சொந்தமான #கால்ஸ் (3777 கோடி),
திமுக ஆட்சியில் தென்னை விவசாயிகள் நல வாரியத் துணைத் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் தரணிபதியின்#இம்பெரியல் (1591 கோடி) ஆகிய 4 தொழிற்சாலைகள் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 11704 கோடி சாராயம் விற்பனை செய்துள்ளனர்.

தமிழக மக்கள் சாராயத்தால் எண்ணற்ற துன்பம் அடைகிறார்கள் என்று கவலைப்படும் திமுக தலைமை இன்றே அவர்கள் கட்சிக்கு நெருக்கமான சாராய தொழிற்சாலைகளில் இருந்து விற்கப்படும் சாராயத்தை நிறுத்தினால் கடைகளில் பற்றாக்குறை ஏற்ப்பட்டு அனேக கடைகளை மூட வேண்டிய நிலை வருமே !
மேலும் பல்வேறு கட்சிகள் இன்று மக்கள் மனநிலை அறிந்து டாஸ்மாக் முற்றுகை போராட்டங்கள் நடத்தும் போது திமுக மட்டும் ஏன் வெறும் அறிக்கை போர் நடத்திக்கொண்டு இருக்கிறது? கடைகளை முற்றுகையிட்டால் தங்கள் தொழிற்சாலை வருமானம் பாதிக்கப்படும் என்பதாலா?

பதில் சொல்லுமா திமுக தலைமை?
தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு என்ற வெற்று கோஷத்தை நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை என்பது மட்டும் 100 சதவிகிதம் நிச்சயம்.