Monday, 13 March 2017

Delhi university students press meet.. photo, press release.. காலாவதியான பாடத்திட்டத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.. டெல்லி பல்கலைக்கழக மாணவிகள் கோரிக்கை..


English representation given to School education minister, School education secretary is attached..

Senthil Arumugam, 8754580274

 மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு
  காலாவதியான பாடத்திட்டத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.. காலத்திற்கேற்ற புதிய பாடத்திட்டத்தைக் கொண்டுவர வேண்டும்...

 

           டெல்லி பல்கலைக் கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்கள் தமிழக  

               பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு வேண்டுகோள்...


                                        
பத்திரிகைச் செய்தி ( 13-03-2017 )

 

வணக்கம்,

நாங்கள் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் எங்களுக்கு நேர்ந்த அவமானத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். எங்கள் வகுப்பறையில் "பட்ஜெட்" குறித்தான விவாதம் ஒன்று நடைபெற்றது. அதில், CBSE வழியில் பயின்ற மாணவர்கள் சிறப்பாக பதிலளித்தார்கள். தமிழகத்தில் படித்த எங்களால்(State board) எந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தினால் தமிழக மாணவர்கள் குறித்த அபிப்ராயம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

 

காலத்திற்கேற்ப புதிய பாடப்பகுதிகளைச் சேர்க்காதது, மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை போன்றவையே இதற்குக் காரணம் என்று நாங்கள் உணர்கிறோம்.

மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் நாங்கள் போட்டித்தேர்விற்குச் செல்லும்போதோ, பிற மாநிலங்களுக்குச் சென்று படிக்கும்போதோ எங்களால் CBSE போன்ற பாடத்திட்டத்தில் படித்துவந்தவர்களோடு போட்டியிடமுடியவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

 

இதனைக் கருத்தில்கொண்டும் மாநிலப்பாடத் திட்டத்தில் படிக்கும் எங்கள் தம்பி, தங்கைகளின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டும் உடனடியாக தமிழக பள்ளிக்கல்வித்தரத்தினை மேம்படுத்த வேண்டுகிறோம்.  குறிப்பாக பாடப்பகுதிகளை(Syllabus) காலத்திற்கேற்றவாறு உடனடியாக மாற்றியமைக்க வேண்டுகிறோம். 

 

 

இதுதொடர்பாக கல்வித் துறை அமைச்சர், செயலாளர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனரக அதிகாரிகளைச் சந்தித்து இன்று மனு கொடுத்துள்ளோம். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்கிட்டத்தட்ட ஒருகோடி மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்வி முறை தொடர்பான விவகாரத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.


தேவதர்சினி & ஹனிசா

டெல்லி பல்கலைக்கழக மாணவிகள்...


- ஒருங்கிணைப்பு: சட்ட பஞ்சாயத்து இயக்கம்,

செந்தில் ஆறுமுகம், பொதுச்செயலாளர்  8754580274




Saturday, 11 March 2017

PRESS MEET: Tamil students from Delhi university briefing media after meeting Education Minister...டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் அவமானப்பட்டது ஏன்..? பள்ளிக்கல்வி அமைச்சரை சந்தித்த பின் மாணவர்கள் பேட்டி..

வணக்கம்,

English invite below:

தமிழ் மாணவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் அவமானப்பட்டது ஏன்..?  
மாணவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விவரிக்கின்றனர் 
(பள்ளிக்கல்வி அமைச்சரை சந்தித்து மனுகொடுத்த பின்பு...)

13-03-2017, திங்கள், மதியம் 2 மணி, சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகம், திருவான்மியூர்,
H42/3, West avenue, Kamaraj Nagar, Thiruvanmiyur (Near signal),
Contact: 08800391662(குணா),8754580274,8754580270

PRESS MEET:
Tamil students from Delhi university giving representation to TN School education Minister -  Reg they being insulted in Delhi college - STUDENTS Briefing media after meeting with Minister.  

Date: 13-03-2017(Monday)
Time: 2pm
Venue: Satta Panchayat Iyakkam,
            H42/3, West avenue, Kamaraj Nagar, 
            Thiruvanmiyur (Near signal)

Contact: 08800391662(Guna),8754580274,8754580270

Senthil Arumugam,
General secretary, Satta Panchayat Iyakkam

Tuesday, 7 March 2017

39th Month Report.. 39வது மாத அறிக்கை..


Since inception, satta panchayat iyakkam publishing it's accounts in Internet.
Attached the 39th Month report(for feb2017).  
All the reports can be found in:  http://spiaccounts.blogspot.in/

Senthil Arumugam, General Secretary,Satta Panchayat Iyakkam,
87545-80274,87545-80270

39வது மாத வரவு-செலவு அறிக்கை:

வெளிப்படையான அரசு நிர்வாகத்தை வலியுறுத்தும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் தனது வரவு-செலவுகளை வெளிப்படையாக அறிவிப்பது தார்மீகக் கடமை என்று கருதி, இயக்கம் தொடங்கியதிலிருந்து இன்றுவரையில்(39 மாதங்கள்) வரவு செலவு விவரங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறது.. 

பார்க்க: http://spiaccounts.blogspot.in/

செந்தில் ஆறுமுகம்,
மாநிலப் பொதுச்செயலாளர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274, 8754580270

​

Monday, 6 March 2017

பத்திரிகை செய்தி: "பெண்களுக்கான மாதிரி சட்டமன்றம்" - சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் புதிய முயற்சி..,“Women Model Assembly” - Satta Panchayat Iyakkam’s new Attempt

சட்ட பஞ்சாயத்து இயக்கம் - பத்திரிகை செய்தி - 06-03-2017 ; 

SATTA PANCHAYAT - PRESS RELEASE - 06-03-2017


"Women Model Assembly" - Satta Panchayat Iyakkam's new Attempt" (Detailed English - Press Release can be found below the Tamil Release)

"பெண்களுக்கான மாதிரி சட்டமன்றம்"
- சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் புதிய முயற்சி

மகளிர் தினத்தை முன்னிட்டு சட்ட பஞ்சாயத்து இயக்கம் "பெண்களுக்கான மாதிரி சட்டமன்றம்" என்ற நிகழ்ச்சியை ஞாயிறு (5-மார்ச்-2017) அன்று சென்னை ஆஷா நிவாஸ் சமூக சேவை மையத்தில் ஏற்பாடு செய்து நடத்தியது. பெண்களுக்கு மட்டுமான  இந்த சிறப்பு நிகழ்வில் சுமார் 50 பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். காலை 9 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

 

காலை முதல் பகுதியில் மாதிரி சட்டமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஆராய்ச்சி அணி செயலாளர் மகேஷ் அவர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கி நிகழ்ச்சியை தொடங்கினார். பிறகு கூட்டத்தில் பங்குபெற்றவர்கள் 3 நிலைக்குழுக்களாக பிரிக்கப்பட்டு பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை படித்து தங்களுக்குள் விவாதித்தனர். அதன் பின் சட்டமன்ற கூட்ட பாணியில் முதலமைச்சர், பெண்கள் நல அமைச்சர், எதிர்கட்சி தலைவர் என 3 பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சமூக நல அமைச்சர் சட்டத்தை முன்மொழிய, முதலமைச்சர் வழி மொழிந்தார். அதனை தொடர்ந்து எதிர் கட்சி தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் மசோதாவை எதிர்த்தும், ஆதரித்தும், மசோதாவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியும் பேசினர். இறுதியாக வாக்கெடுப்பு நடைபெற்று பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

இறுதியாக முதலமைச்சர் பாத்திரத்தை ஏற்ற உறுப்பினர் கூறும் பொழுது, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா விரைவில் நிறைவேற வேண்டும் என தனது கருத்தை தெரிவித்தார். சிறப்பு விருந்தினராக பத்திரிகையாளர் ஜெனிஃபர் பங்கேற்று அவரது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

 

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவது குறித்த பயிற்சி அளித்தார் சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ இளங்கோ. பங்கேற்றவர்கள் ஏதேனும் ஒரு துறை சம்பந்தமாக தங்கள் கேள்விகளை தகவல் அறியும் உரிமை விண்ணப்ப வடிவில் தயார் செய்தனர். பாலியல் வன்கொடுமை, போக்குவரத்து நெரிசல் பிரச்சனை, நியாய விலை கடை இருப்பு உள்ளிட்ட பல்வேறு துறை சம்பந்த கேள்விகளை தயார் செய்தனர். இந்த விண்ணப்பங்கள் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் பொது தகவல் அலுவலர்களுக்கு அனுப்பப்படும்.

 

இதை தொடர்ந்து பெண்கள் தொடர்பான சட்டங்கள் குறித்து சிறப்பு விருந்தினர் சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் திருமதி. அசெந்தா மணி பேசினார். பின்னர்  காவல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் திரு. கருணாநிதி அவர்கள் பெண்கள் பிரச்சனை தொடர்பாக காவல்துறை நடைமுறைகள் குறித்து விளக்கினார். பங்கேற்றவர்கள் தங்களது சந்தேங்கங்களை கேட்டு தீர்த்து கொண்டனர்.

 

இயக்கத்தின் பொது செயலாளர் செந்தில் ஆறுமுகம் அவர்களின் இறுதி உரைக்கு பின்  சிறந்த பேச்சாளர்களுக்கு புத்தகங்களும் சான்றிதழ்களும், பங்கு பெற்று அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


இணைப்பில்: நிகழ்வின் படங்கள்..


ஜெய்கணேஷ், மாநில அமைப்புச் செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்

88704-72177



SATTA PANCHAYAT - PRESS RELEASE - 06-03-2017

 

"Women Model Assembly" - Satta Panchayat Iyakkam's new Attempt


On the eve of Women's day, Satta Panchayat Iyakkam Organised a "Model Women Assembly" on Sunday (5th March 2017) at Asha Nivas Social Service Centre, Chennai. About 50 Women participants attended this event which started at 9 AM and lasted till 5 PM.

 

In the Morning session, Women's Reservation bill was discussed in the Model Women Assembly. Satta Panchyat Iyakkam's Research Wing Secretary Mahesh started the session with detailed explanation about Parliamentary & Legislature Procedures. Followed by that, the participants were divided into 3 Standing committees in which the Bill was read and discussed among them. After this, 3 Women Participants were chosen as Chief Minister, Social Welfare Minister & Leader of Opposition. The Social Welfare Minister introduced the bill in Model Assembly which was endorsed by the Chief Minister. Leader of Opposition and other MPs spoke in favor of bill and against the bill citing the deficiencies in it. Finally, voting took place and the bill was passed with Majority members voting in favor of bill.

 

The Participant who played the role of Chief Minister finished by saying that the Women's Reservation bill must come soon in real life. Journalist Jennifer came as a Chief Guest and shared her views on the bill.

 

Post lunch, session on Right to Information and ways to use it was conducted by Satta Panchayat Iyakkam's President Siva Elango. Participants were trained and asked to draft RTI Application. Various participants drafted the applications with questions related to different departments including Women safety, Rape cases, Traffic issues, Ration shops stock availability, etc. SPI will send all these applications to the Public Information Officer of respective departments.

 

Followed by this, Madras High Court lawyer Asentha Mani spoke about Women related laws in India. Retired Superintendent of Police Karunanithi spoke about Police procedures on Women issues. Participants asked various questions in both sessions and clarified their doubts.

 

Closing remarks were given by SPI's General Secretary Senthil Arumugam and finally Books along with Certificates were awarded to best debaters. All participants were given participation certificate.

 

Event photos attached..


Jaiganesh, State Organising Secretary,
Satta Panchayat Iyakkam,

88704-72177 



Thursday, 23 February 2017

PRESS MEET: Reg Police threatning on volunteers of Jallikattu protest.. காவல்துறையின் அச்சுறுத்தலைக் கண்டித்து... நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன் அவர்கள் விசாரணையைத் தொடங்கக் கோரி

RESS MEET: Condemning police threatning on volunteers of Jallikattu protest.. Demanding immediate enquiry by Justice.S.Rajeswaran with the affected youths - A volunteer who was hospitalised by police attack in jallikattu protest also participates and explains how he was threatened.  


24-02-2017, Friday,  Satta Panchayat Iyakkam office(31, south west boag road, T.Nagar), 87545-80270, 87545-80274

பத்திரிகையாளர் சந்திப்பு: 24-02-2017, வெள்ளி, நண்பகல் 12 மணி, சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகம் 87545-80270,87545-80274

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில்  காவல்துறையின் கொடூரத் தாக்குதலால் காயம்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களை, காவல்துறை தொடர்ந்து  அச்சுறுத்தி வருவதைக் கண்டித்து...  போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன் அவர்கள் விசாரணையைத் தொடங்கக் கோரியும்... காவல்துறையின் அச்சுறுத்தலுக்குள்ளான  இளைஞனும் பங்கேற்பு..

சிவ.இளங்கோ, தலைவர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
87545-80270,87545-80274


Thursday, 16 February 2017

PRESS RELEASE: Governor should have put the Assembly on Suspended Animation...ஆளுநர் ஓரிரு மாதங்கள் சட்டசபையை முடக்கி வைத்திருக்க வேண்டும்.

          ENGLISH PRESS RELEAE CAN BE FOUND IN ATTACHMENT
தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருவதால்

ஆளுநர் ஓரிரு மாதங்கள் சட்டசபையை முடக்கி வைத்திருக்க வேண்டும்.

  • எடப்பாடி பழனிசாமி அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பது பெரும்பான்மை மக்களின் கருத்திற்கு எதிரானது

      பத்திரிக்கை செய்தி (16-02-2017) – சட்ட பஞ்சாயத்து இயக்கம்

சொத்து குவிப்பு வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும். அதுவரை சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க தடை விதிக்க வேண்டும். மேலும் MLA அல்லாத ஒருவர் முதல்வராக வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் 06/02/2017 அன்று வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு நாளை 17/02/2017 விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் வரை காத்திருந்து, சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காததற்கு தமிழக மக்கள் சார்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் மேதகு ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருகிறது. ஒரு பக்கம் 124 MLAக்களை கூவத்தூர் நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். கூவத்தூரில் இருந்து தப்பி வந்த சில MLAக்கள் கட்டாயப்படுத்தி அங்கு தங்க வைக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.சரவணன் இது குறித்து காவல்துறையிலும் புகார் தெரிவித்துள்ளார். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல முதலமைச்சர் O.பன்னீர்செல்வம் அவர்களே அவரை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியதாக புகார் கொடுத்துள்ளார். மாநில முதலமைச்சரை மிரட்டி கையெழுத்து போட வைத்து அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளனர். மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதாக முதலமைச்சர் சொல்லும் புகாரை ஒதுக்கி தள்ளிவிடவும் முடியாது. ஏனெனில் சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதிட்ட திரு. ஆச்சார்யா அவர்களையே கடுமையாக மிரட்டிவர்கள் தான் இவர்கள்.

எனவே தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் அசாதாரண சூழலில் யாரையும் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்காமல் சட்டசபையை ஆளுநர் முடக்கி வைத்திருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் அவர்கள் இன்று 16 பிப்ரவரி, திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆட்சி அமைக்குமாறு அழைத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 1 வாரமாக அடைத்துவைக்கப்பட்டு, இப்பொழுது மக்களின் உண்மை கருத்தறியாமல் ஒரு ஆட்சி பதவியேற்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அடைத்து வைக்கப்பட்டுள்ள MLAக்கள் சுதந்திரமாக அவர்கள் தொகுதியில் மக்கள் பணி செய்ய ஆரம்பித்து 1 மாதத்திற்கு பிறகு யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதே சரியான முடிவாக இருந்திருக்கும்.

எந்தக் காரணங்களுக்காக முதலமைச்சராக பதவியேற்க யாரையும் இதுவரை அழைக்காமல் ஆளுநர் அவர்கள் காலம் தாழ்த்தி வந்தாரோ, அந்தக் காரணங்கள் இன்று(எடப்பாடி பழனிச்சாமியை அழைத்ததன் மூலம்) அர்த்தமற்றதாகிவிட்டது. கண்முன்னே நடந்த ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் கண்டுகொள்ளாமல் விட்ட தோடு, அதற்கு மறைமுகமாகத் துணை போனது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள எங்களைப் போன்ற பொது நல அமைப்புகளுக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது.


சிவ.இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 87545-80270, 87545-80274

16-02-2017

Sunday, 12 February 2017

CBI Should probe the possible Illegal activities(Rs.200 Cr) behind the Disproportionate Asset case...சொத்துக்குவிப்பு வழக்கின் பின்புலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சட்ட த்திற்குப் புறம்பான செயல்பாடுகளை(ரூ.200கோடி) சி.பி.ஐ. உடனடியாக விசாரிக்க வேண்டும்.

                                                                    PRESS RELEASE(12/2/2017)

           CBI Should probe the possible Illegal activities
   behind the Disproportionate Asset case
                                                                          Attached the representation given to CBI
                            பத்திரிகை செய்தி( 12/02/2017)

   சொத்துக்குவிப்பு வழக்கின் பின்புலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும்
சட்ட த்திற்குப் புறம்பான செயல்பாடுகளை சி.பி.ஐ. உடனடியாக விசாரிக்க வேண்டும்
.

                                           சி.பி.ஐக்கு கொடுக்கப்பட்ட மனு, இணைப்பில்...


                                               (தமிழில் விரிவான பத்திரிகை செய்தி - கீழே)


Satta Panchayat Iyakkam has been creating awareness and fighting against corruption

continuously. Has exposed many corruption with evidence acquired using Right to Information (RTI).
Because of these works, many people reach us with their evidence and information on various corruption 
issues, requesting us to expose the same. Likewise, we have received some documents recently.

These documents seem to indicate that, In the Disproportionate asset case on former
chief minister Ms.J.Jayalalitha (recently passed away), Sasikala, Illavarasi and Sudhakaran, 
during the appeal hearing in Bengaluru High court, there seem to be some illegal activities happened, 
in influencing the judgement in favour of the accused.

Generally, when we receive documents related to corruption, we publish it only after analyzing the
veracity of the evidence. But since this document involves Chief Minister, Judge - to establish the
authenticity, for us it will take too long. Hence we have submitted this document to Central Bureau of
Investigation (CBI). We submitted this document on 10/02/2017 in-person at the CBI head
office in Delhi and have received acknowledgement for the same(attached). 

We request the CBI to investigate this documents and take appropriate action
quickly. We also request the press to analyse these documents from all perspective and bring the truth.
Satta Panchayat Iyakkam will continue to work on collecting more evidence based on this documents
and will bring it to the notice of CBI and public.

We would like to bring it to notice that the Special Public Prosecutor  B.V.Acharya in the disproportionate 
assets case resigned in August 2012, saying "...he had suffered untold hardship and embarrassment at the
 instance of interested parties". Pressure form interested parties even to former Advocate-General indicates 
the interesting parties has been trying to wield their influence to shape the outcome in their favour in the past too.
It is presumed that these powerful interested parties will fight tooth and nail to get themselves acquitted.
Otherwise, their political future will be in stake. 
Hence, there is a possibility of the above said illegal efforts by the accused.

The Judiciary is the guardian of democracy and we hold judiciary in the highest regards. 
Without the Judiciary's outstanding orders, disclosure of criminal background and assets of candidates & their family
would not have been possible. 
It's imperative that any possible irregularities must be looked into to protect the Judiciary. 

Note: We have also sent a copy of the representation to Chief Justice of India.

Thanks,

Siva Elango,
President, Satta Panchayt Iyakkam
87545-80270, 87545-80274

Attachments:
1. Representation given to CBI(with acknowledgement)  
2. Satta Panchayat executives photo infront of CBI,Delhi after giving representation

       சொத்துக்குவிப்பு வழக்கின் பின்புலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் 
சட்ட த்திற்குப் புறம்பான செயல்பாடுகளை சி.பி.ஐ. உடனடியாக விசாரிக்க வேண்டும்
.

                                                               பத்திரிகை செய்தி( 12/02/2017)

சட்ட பஞ்சாயத்து இயக்கமானது இலஞ்ச ஊழலுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுப் பணிகள், போராட்டங்கள்

நடத்திவருகிறது. பல்வேறு ஊழல்களை தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. 

இயக்கத்தின் இதுபோன்ற செயல்பாடுகளால், 

இலஞ்ச ஊழல் தொடர்பான பல்வேறு தகவல், ஆதாரங்களை பொதுமக்கள், அமைப்புகள் எங்கள் இயக்கத்திற்கு அளித்து அதனை அம்பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்வார்கள். 

அந்த வகையில் சமீபத்தில் எங்களுக்கு சில ஆவணங்கள் கிடைத்தன. இந்த ஆவணங்களானது முதல்வராக இருந்து மறைந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூர் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணையில் விடுதலையானதின் பின்புலத்தில் சட்டவிரோத செயல்பாடுகள்(ரூ.200கோடி பணப்பரிமாற்றம் தொடர்பாக) இருந்தன என்ற பொருள்படும் வகையில் இருக்கிறது.

 

பொதுவாக, ஊழல் தொடர்பாக எங்களின் பார்வைக்குக் கொண்டுவரப்படும் ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்த பின்பே வெளியிடுவோம். ஆனால், இந்த ஆவணங்கள் முதலமைச்சர், நீதிபதி போன்றவர்கள் தொடர்பானது என்பதால் இதன் உண்மைத்தன்மையை நாங்கள் உறுதிப்படுத்த நீண்ட காலம் பிடிக்கும். ஆகவே, இலஞ்ச-ஊழலை விசாரிக்கும் மத்திய அமைப்பான மத்திய புலனாய்வுத் துறையிடம்(CBI)  இந்த ஆவணங்களை சமர்பித்துள்ளோம். 10/02/2017 அன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் எங்களுக்கு வந்த ஆவணங்களை நேரில் கொண்டுசென்று கொடுத்துள்ளோம்(அதற்கான ஒப்புகை(Acknowledgement) வாங்கியுள்ளோம்.)

 

இதுபோன்ற முறைகேடுகள் சாத்தியமா என்று கேள்வி, சந்தேகம் எழலாம். வழக்கிலிருந்து விடுதலையாகாவிட்டால் தங்கள் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று கருதும் அதிகார மற்றும் பணபலமிக்கவர்கள் எப்பாடுபட்டேனும் தங்களை வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்ள முயற்சிப்பார்கள் என்பதற்கு முன்னுதாரணங்கள் இருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அரசின் சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிய B.V.ஆச்சார்யா அவர்கள் வழக்கு நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில்(ஆகஸ்ட் 2012ல்) "...சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடையவர்களால் எல்லையில்லா துன்பங்களையும், சங்கடங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது" என்று சொல்லிவிட்டு இந்த வழக்கிற்காக வாதாடுவதிலிருந்து விலகிய சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். சொத்துக்குவிப்பு வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞருக்கு அழுத்தம் கொடுத்த சம்பந்தப்பட்ட அரசியல் சக்திகள், தங்களை வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்ள எந்தவிதமான சட்டவிரோதச் செயல்பாடுகளிலும் ஈடுபடுவார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

ஜனநாயகத்தை, அரசியல் சாசனத்தின் மாண்புகளைக் காப்பற்றி வருவது நீதிமன்றங்களே. 
அப்படிப்பட்ட நீதிமன்றங்கள் மீதும், நீதி பரிபாலணை மீதும் நாங்கள் உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறோம்.
தேர்தலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள்தான் காரணமாக இருந்திருக்கிறது.
தேர்தலில் போட்டியிடுபவர்களின் குற்றப்பின்னணி, சொத்துவிவரங்களை வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால்தான்
இன்று பஞ்சாயத்துத் தேர்தலிலிருந்து பாராளுமன்றத் தேர்தல்வரை போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின்  குற்றப்பின்னணி, சொத்துவிவரங்களை 
வெளியிடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். தேர்தலில் போட்டியிடுபவர்களின் முழுவிவரங்களை அறிந்துகொள்வதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது என்பதை
உறுதிசெய்தது உச்சநீதிமன்றமே என்பதை நாங்கள் அறிவோம். 

இருந்தபோதிலும், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட செல்வாக்குமிக்க நபர்களின் நெருக்கடி,அழுத்தத்தின் காரணமாக நடந்திருக்க வாய்ப்புள்ள
இந்த சட்டவிரோத செயல்பாடுகள் நீதித்துறையின் மாண்பைக் குலைப்பதாக இருந்துவிடக்கூடாது என்பதே எங்கள் விருப்பம். 

சி.பி.ஐ.யின் தீவிர விசாரணை, ஊடகங்களின் அழுத்தம் இருந்தால் இதுகுறித்த முழு உண்மையை விரைவில் வெளிக்கொண்டுவர முடியும்.
சட்ட பஞ்சாயத்து இயக்கமும் இந்த ஆவணங்கள் குறித்து மேற்படியான தகவலை, ஆதாரங்களை திரட்டி மக்களின் பார்வைக்கு, சி.பி.ஐ.யின் கவனத்திற்குக் கொண்டுவரும். 

ஊழல்வாதிகள், சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் மூலம் நீதியை வளைக்க நினைப்பவர்கள்  யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கை.

குறிப்பு: சிபிஐக்கு கொடுத்த மனுவின் நகலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பியுள்ளோம்.

இணைப்பில்:  
1. டெல்லி, சிபிஐ அலுவலகத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கொடுத்த மனுவின் சாராம்சம்(தமிழில்)  
2. Text of original version in English
3. டெல்லிம் சிபிஐ அலுவலகத்தில் மனுகொடுக்கும் சட்ட பஞ்சாயத்து நிர்வாகிகளின் படம்

சிவ.இளங்கோ,
தலைவர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80270, 87545-80274