Friday 24 November 2017

ஊடக வெளியீடு - நாளை நவ 25 மாலை 6 மணி முதல் 'காத்திருப்பு போராட்டம்' - கூவம் ஓரம் வாழும் பாடிக்குப்பம் மக்களுக்கு மாற்று வீடுகளுக்கான கோரிக்கை போராட்டங்கள்

நேற்று நடந்த அம்மனிடம் முறையிடும் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. ஆனால் இதற்கான தீர்வு இந்த நொடி வரை வரவில்லை.

பிரச்சனை 

கூவம் சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கூவம் ஓரம் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த 14,500 குடும்பங்களை காலி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுவரை சுமார் 6000 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான செம்மன்சேரி, பெரும்பாக்கம், கூடப்பாக்கம், நாவலூர் ஒரகடம் (படப்பை அருகே) மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் மறு குடியமர்த்தப்படுகிறார்கள்.

இதில் பாடிக்குப்பத்தில் சுமார் 300 குடும்பங்கள். காலி செய்யப்படும் எல்லா மக்களுக்கும் இருக்கும் துன்பங்கள் இவர்களுக்கும் இருந்தாலும், இவர்கள் கூவத்தை விட்டு காலி செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஒரு சின்ன தேடல் செய்தோம். குடிசை மாற்று வாரியத்திற்கு பாடிக்குப்பம் பகுதிக்கு அருகில் வேறு ஏதேனும் வீடுகள் உண்டா என்ற தேடல் அது. அந்த தேடலுக்கான காரணம் - பாடிக்குப்பம் பகுதியில் காலி செய்யப்படும் வீடுகளி பெரும்பாலானவர்கள் கோயம்பேடு சந்தையை நம்பி பிழைப்பவர்கள். காலை 3 மணிக்கு காய்கறி, பூ வாங்கி விற்பனை செய்பவர்கள். இவர்களை பெரும்பாக்கம் அனுப்பினால்?

எங்களின் தேடல் வெற்றிகரமாக அமைந்தது. 
பாடிக்குப்பத்தில் இருந்து 20 நிமிட தொலைவில் அத்திப்பட்டு என்ற இடத்தில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 1472 வீடுகள் 2015 கட்டி முடிக்கப்பட்டு (கட்டப்பட்டது ICF கக்கன்ஜி நகர் பகுதியில் இருக்கும் 396 குடும்பங்களுக்காக என்று சொல்லப்பட்டாலும், இதுவரை அவர்களும் குடியேறவில்லை - அவர்கள் குடியேறினாலும் மீதம் 1076 வீடுகள் காலியாக உள்ளது) இதுவரை திறக்கப்படாமல் உள்ளது என்று தெரிந்துகொண்டோம்.

உடனடியாக த.கு.மா.வா மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு (31.07.2017) மனு வழங்கினோம். பதில் இல்லை. மீண்டும் த.கு.மா.வா, துணை முதல்வர், இன்னும் பிற சம்பந்தப்பட்ட துறைகளுக்கு 05.10.2017 மனு வழங்கினோம். மீண்டும் பதில் இல்லை. இப்பொழுது இடிக்க வந்துவிட்டார்கள். 1 வாரத்திற்கு அதனை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளோம். 
-------------------------------------

முதலில் சொன்னதுபோல் மீண்டும் எங்களுக்கான பதில் கிடைக்காததால் நாளை மாலை முதல் 'காத்திருப்பு போராட்டம்' துவக்க முடிவு செய்துள்ளோம். யாருக்கும் தொந்தரவு இல்லாமல், எங்கள் இடத்திலேயே நாளை முதல் போராட்டம் துவங்கும். இதற்கான தனி நபர், சமூக செயற்பாட்டாளர்கள், முகநூல் பக்கங்கள், மக்கள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடக நண்பர்களின் ஆதரவை வேண்டுகிறோம்.

காத்திருப்பு போராட்டம்

நடைபெறும் இடம் - அங்காளம்மன் கோயில் தெரு, பாடிக்குப்பம்.
துவங்கும் நாள் - 25.11.2017 மாலை 6 மணி
தொடர்பு - ஜெகதீஸ்வரன், சமூக செயற்பாட்டாளர், 9791050512

நன்றி.

2017-11-23 13:17 GMT+05:30 Jagadheeswaran D <djagadhees@gmail.com>:
ஊடக வெளியீடு  (23-நவ-17)

அம்மனிடம் முறையிடும் போராட்டம்

வணக்கம்,
கூவம் ஓரம் பாடிக்குப்பம் பகுதியில் வாழும் 300 குடும்பங்களுக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 'அத்திப்பட்டில்' மாற்று  வீடுகள் வேண்டி நாம் மனு வழங்கியிருந்ததையும், அந்த மனு மீது எந்த துறையும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாதது குறித்தும் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்.

மீண்டும் அரசு அதிகாரிகளோ, அரசாங்கமோ எங்கள் கோரிக்கையை செவியில் வாங்கிக்கொள்ள தயாராக இல்லை. அரசங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில் இன்று பாடிகுப்பம் பகுதியில் அமைந்திருக்கும் 'அங்காள பரமேஸ்வரி அம்மனிடம்' இது குறித்து முறையிட முடிவு செய்துள்ளோம். 

அம்மனிடம் முறையிடும் 

இடம் - அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம், பாடிகுப்பம்
நாள் - இன்று நவ 23
நேரம் - மாலை 6.30 மணி
தொடர்பு - ஜெகதீஸ்வரன், 9791050512

அது குறித்து செய்தி சேகரிக்கவும், மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

- ஜெகதீஸ்வரன்,
சமூக செயற்பாட்டாளர்
9791050512

2017-11-21 10:04 GMT+05:30 Jagadheeswaran D <djagadhees@gmail.com>:

ஊடக வெளியீடு  (21-நவ-17)

கூவம் ஓரம் வாழும் பாடிக்குப்பம் மக்களுக்கு மாற்று வீடுகளுக்கான இன்று முதல் கோரிக்கை போராட்டங்கள்

கூவம் ஓரம் வாழும் மக்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தபடுவது குறித்து தாங்கள் அறிந்திருப்பீர்கள். பாடிக்குப்பம் பகுதி கோயம்பேடு சந்தைக்கு அருகில் இருக்கும் பகுதி (வார்டு - 93). இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலனவர்கள் கோயம்பேடு சந்தையில் அதிகாலை 3 மணி முதல் வேலை செய்பவர்கள். இன்னும் சிலர் அருகில் இருக்கும் வீடுகளில் பணியாளாக வேலை செய்பவர்கள். எடுக்கப்படும் வீடுகளில் வசிக்கும் பலர் இதே இடத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களுடைய வாழ்வாதாரம் இந்த பகுதியை நம்பியே இருந்து வருகிறது. இந்த இடத்தை விட்டுப்போவது அவர்களுக்கு உயிர் வலி. என்னுடைய அப்துல் கலாம் அறிவகம் - அங்கு வசிப்பவர்களுக்கான நூலகமாகவும், மாணவ மாணவிகளுக்கான டியூசன் மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

கூவம் சீரமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லைஆனால் எங்கள் வாழ்வாதாரத்தை அழித்து அது நடத்தப்பட வேண்டுமா என்பதே எங்கள் கேள்விஎங்களுக்கான மாற்று வீடுகள் பெரும்பாக்கம் பகுதியில் வழங்கப்படும் என தெரிந்துகொண்ட பின்னர் எங்கள் தேடலின் மூலம் பாடிகுப்பம் பகுதிக்கு ஓரளவு அருகில் இருக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 'அத்திப்பட்டில்' 1400 வீடுகள் கட்டப்பட்டிருப்பது தெரிந்துகொண்டோம். உடனடியாக 31.07.2017 அன்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு மனு அளித்தோம். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால், மீண்டும் 05.10.2017 அன்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கும், 10.10.2017  அன்று துணை முதல்வர், தலைமை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர், பொதுப்பணி துறை செயலாளர் மற்றும்  சென்னை பெருநகராட்சி ஆணையரை சந்தித்து பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கையொப்பங்களுடன் இணைத்து மனு வழங்கினோம். அனைவரும் எங்களுக்கு உதவி செய்வதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாளை முதல் வீடுகளை இடிப்பது துவங்கும் என்று எங்களுக்கு நேற்று (20.11.2017) தெரிவிக்கப்பட்டது. எங்கள் மனு  மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் சந்தித்த அதிகாரிகள் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான அத்திப்பட்டை எங்களுக்கு ஒதுக்குவதில் சிக்கல்கள் இல்லை என்றே தெரிவித்தனர்.  ஆனால் நாளை முதல் வீடுகள் இடிக்கப்படும் என்பது பேரதிர்ச்சியாக உள்ளது.

எங்களுடைய மனுவிற்கான பதில் வராத காரணத்தால் எங்களால் மாற்று இடங்களுக்கு செல்ல முடியாது. இதற்கான போராட்டங்கள் இன்று முதல் துவங்கும். அது குறித்து செய்தி சேகரிக்கவும், மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பு : கோரிக்கை மனுக்கள்

- ஜெகதீஸ்வரன்,
சமூக செயற்பாட்டாளர்
9791050512

--

Wednesday 22 November 2017

ஊடக வெளியீடு - அம்மனிடம் முறையிடும் போராட்டம் - இன்று 23 நவ மாலை 6.30 மணி - கூவம் ஓரம் வாழும் பாடிக்குப்பம் மக்களுக்கு மாற்று வீடுகளுக்கான கோரிக்கை போராட்டங்கள்

Monday 20 November 2017

ஊடக வெளியீடு - கூவம் ஓரம் வாழும் பாடிக்குப்பம் மக்களுக்கு மாற்று வீடுகளுக்கான கோரிக்கை போராட்டங்கள்

Tuesday 7 November 2017

Media invite - Kashmir reconciliation meeting at Art of Living International center

The time has come for Kashmir to move from…

…guns and bullets to garlands and bouquets

…hatred, revenge and divisions to love, forgiveness and reconciliation... 

Dear Editor,

In a first-of-its-kind initiative to bridge the mistrust, heal the hearts, and bring about a reconciliation among people who have directly suffered in the long-drawn conflict in Jammu & Kashmir, The Art of Living is hosting a historic event on 10th November 2017 in Bengaluru.

Paigam-e-Mohabbat (Message of Love) will bring together family members of slain militants, families of victims of cross-firing from all parts of Kashmir and families of defence and security personnel from across the country who have been martyred in the Valley.

An initiative of Gurudev Sri Sri Ravi Shankar, founder of the Art of Living, the gathering is being hailed as a landmark beginning to foster the spirit of love, forgiveness and reconciliation, and is likely to play a historic role in creating an ecosystem for peace-building in the troubled Valley.

We have the pleasure of inviting you to this unique event, and be part of the vision of ushering in peace, progress, prosperity and harmony in Jammu & Kashmir. A gathering of over 25,000 peace-loving people will be there to lend their support to the initiative.  

Date: 10th November 2017

Time: 5.00 pm to 7.30 pm

Venue: The Art of Living International Centre

21st KM Kannakapura Road, Udayapura, Bengaluru

RSVP: Sreekumar Nair - 9019255553

            Sujeet Singh -   8147616875

--
Warm Regards,
Rajalakshmi
Art of Living Bureau of Communication
Ph - 9884017767