Friday 26 October 2018

Reason for Localbody election delay is due to "ORDINANCE PASSED" BY Tamilnadu Government" !! உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளிப்போவதற்குக் காரணம் அதிமுக அரசு பிறப்பித்த அவசரச் சட்டமே(Ordinance) ..!! - சட்ட பஞ்சாயத்து இயக்க பத்திரிகை செய்தி(26-10-2018)


Reason for Localbody election delay is due to "ORDINANCE PASSED BY Tamilnadu Government" !!  
              உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளிப்போவதற்குக் காரணம் 
             அதிமுக அரசு  பிறப்பித்த அவசரச் சட்டமே(Ordinance) ..!! 

சட்ட பஞ்சாயத்து இயக்கம்  -  பத்திரிகைச் செய்தி( 26-10-2018), 87545-80274, 87545-80270

உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவதற்குக் காரணம் அதிமுக அரசு  பிறப்பித்த அவசரச் சட்டமே(Ordinance) காரணம்..!!  உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பிற்கு ஆளான தமிழக அரசு, உச்சநீதிமன்றத்திலும் அசிங்கப்பட்டு தமிழகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்தாமல் இருக்க உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் !!   திங்கட்கிழமை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று அவசரச் சட்டம் இயற்றி உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதைத் தள்ளிப்போடுவதில் காட்டிய "வேகத்தை","சட்ட நுணுக்கத்தை" விரைவாக தேர்தல் நடத்தப்படுவதில் காட்டவேண்டும்.  - சட்ட பஞ்சாயத்து இயக்கம் குற்றச்சாட்டு, கோரிக்கை

மீண்டுமொருமுறை தமிழக அரசின் தலையில் கொட்டியிருக்கிறது உச்சநீதிமன்றம்.  இந்த வாரத்தில் இது இரண்டாவது முறை. லோக் ஆயுக்தா ஏன் இன்னும் அமைக்கப்படவில்லை என்று இரு நாட்களுக்கு முன்னர் தமிழக அரசைக் கேள்விகேட்ட உச்சநீதிமன்றம், இன்று   உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை என்று கேள்வி கேட்டு 4 வாரத்திற்குள் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

2 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத தமிழக அரசு, இதற்குச் சொல்லிவரும் காரணம் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியிலான வார்டு மறுவரையறைகள் முடிக்கப்படவேண்டும் என்பதே. இது பச்சைப் பொய். உடனடியாக தேர்தல் நடத்தப்படாமல் இருக்க அதிமுக கண்டுபிடித்த காரணம்.  பழங்குடியினருக்கு உரிய தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று கூறி திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இக்காரணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த உயர்நீதிமன்றம், தமிழ்நாடு பஞ்சாயத்துராஜ் சட்டம்,1994ல் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றாமல் அவசர கோலத்தில் தேர்தல் நடத்தப்பட்டது சட்டவிதிவீறல் என்ற அடிப்படையில் 04-10-2016 அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை ரத்துசெய்தது. 
கூடவே, குறைபாடுகளைச் சரிசெய்து டிசம்பர் 31,2016க்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கூறியது. 

அதேசமயத்தில்,  2011 மக்கள்தொகை அடிப்படையில்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவேண்டும், அதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடைவிதிக்கவேண்டும் என்று கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் "..எந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படவேண்டும்" என்பதுபோன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடத்தப்படுவதற்கு தடை விதிக்க முடியாது" என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அதாவது, 2011 மக்கள்தொகை அடிப்படையில்தான் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

பிறகு எந்த அடிப்படையில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டுவரையறைகள் முடிந்தபின்புதான் 
தேர்தலை நடத்துவோம் என்று அதிமுக அரசு  தொடர்ந்து சொல்கிறது...?
 
"பிள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும்" வழியை தமிழக அரசு பின்பற்றியது என்றால் மிகையில்லை. ஆம், டிசம்பர் 31,2016க்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன் அவர்களின் உத்தரவைப் பின்பற்றப்படவில்லை, உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிடப்படவேண்டும் என்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 04-09-2017 அன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது(இத் தீர்ப்பில்தான் நவம்பர்17,2017க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்திமுடிக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது) . 04-09-2017அதாவது திங்கட்கிழமையன்று, உயர்நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு ஒரு நாள் முன்னர், அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று(03-09-2017) அவசர,அவசரமாக ஒரு அவசரச் சட்டத்தை(Ordinance) பிறப்பித்தது தமிழக அரசு (TAMIL NADU ORDINANCE No. 4 OF 2017). 

அந்த அவசரச் சட்டத்தில் என்ன சொல்லப்பட்டது? 
5 சட்டங்கள் இந்த அவசரச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டிருந்தது (1. Chennai City Municipal Corporation Act, 1919,  2. The Madurai City Municipal Corporation Act, 1971, 3. The Coimbatore City Municipal Corporation Act, 1981, 4.Tamil Nadu District Municipalities Act, 1920  5. Tamil Nadu Panchayats Act, 1994). 

எதற்காக இந்த 5 சட்டங்கள் திருத்தப்பட்டன ?  
தமிழக அரசு, 2011 மக்கள்தொகை அடிப்படையில்  வார்டு வரையறைகள் முடித்தபின்புதான் தேர்தல் நடத்தமுடியும் என்று தொடர்ந்து "பொய்" சொல்லிவந்தது. ஆனால், இப்போது நடைமுறையில் உள்ள உள்ளாட்சிச் சட்டங்கள் தமிழக அரசின் வாதத்திற்கு எதிராக இருந்தது. தன்னுடைய பொய்வாதத்திற்கு உதவாத சட்டப்பிரிவுகளை நீக்கிவிட்டால், திங்கட்கிழமையன்று(04-09-17) நீதிமன்றத்தில் தப்பித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தது தமிழக அரசு. ஞாயிற்றுக்கிழமையன்று(03-09-17) அவசர அவசரமாக, 5 சட்டங்களைத் திருத்தி அவசரச் சட்டம் இயற்றியது. எடுத்துக்காட்டாக, 12524 கிராமப் பஞ்சாயத்துகள் தொடர்பான திருத்தத்தின் வரிகள் இப்படி இருந்தது.   "...."In the Tamil Nadu Panchayats Act, 1994, sections 28-A, 28-AA and 28-AAA shall be omitted." . அதாவது, பிரிவு 28-A,28-AA,28-AAA ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டது. இந்தப்பிரிவுகளின்படி வார்டு வரையறைகளில் மாற்றம் ஏதும் செய்யாமல், இப்போதுள்ள வார்டு வரையறைகளின் படியே தேர்தல் நடத்தலாம் என்பதுதான்..!!  

ஆக, இப்போது இருக்கும் சட்டத்தின்படி, எந்த மாற்றமும் வார்டுகளில் செய்யவேண்டியதில்லை. ஆனால், தமிழக அரசிற்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் விருப்பமில்லை. இரட்டை இலை  சின்னம் கிடைத்தபின்னும், ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியான அதிமுக தோற்றது. எனவே, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்க அதிமுக அரசால் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த "பொய்யை" நியாயப்படுத்த ஒரு அவசரச்சட்டம் இயற்றப்பட்டது. பின்னர், 04-09-2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி அவர்கள் முன்பு நடைபெற்ற வாதத்தில் "...தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியுள்ளதால், எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது. உடனடியாகத் தேர்தலை நடத்த முடியாது" என்று மாநிலத் தேர்தல் ஆணையம் வாதிட்டது. (ஆனாலும், இவ்வாதங்களை ஏற்காமல், நவம்பர்17,2017க்குள் தேர்தலை நடத்துங்கள் என்று இந்திரா பேனர்ஜி அவர்கள் உத்தரவிட்டார் என்பது வேறு விவகாரம்). இது "பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் வேலை"தானே ?

அதிமுக அரசின் அரசியல் காரணங்களுக்காக உள்ளாட்சிச் சட்டத்தைத் திருத்திவிட்டு, நீதிமன்றத்தில் வந்து "... உள்ளாட்சிச் சட்டதிருத்தத்தின்படி, 2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு வரையறைகள் முடிவுற்ற பின்னர்தான் தேர்தல் நடத்தமுடியும்" என்று "சட்ட நுணுக்கம் !?" பேசுகிறது அதிமுக அரசு. 

சரி... விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட என்ன செய்யவேண்டும் ?

1. 2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு வரையறைகள் மாற்றும் பணி விரைவாக முடிக்கப்பட்டு, ஓரிரு மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

2.  2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்து முடிப்பதற்கு நீண்டகாலம் பிடிக்கும் என்று தமிழக அரசு கருதினால், இப்போதுள்ள வார்டு வரையறைகளின் அடிப்படையிலேயே உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் (  03-09-2017 அன்று நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துவிட்டால்,  இப்போதுள்ள வார்டுகளின் அடிப்படையில் தேர்தல் நடத்த சட்டசிக்கல் எதுவும் வராது )

லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவர பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் குரல்கொடுத்த வந்தபோதும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்தான் அச்சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது.  அதேபோல், உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள், பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தியும் தமிழக அரசு அதைச் செய்யவில்லை. இப்போது, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்தான் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டம் இயற்றப்படுவதையும், சட்டங்கள் செயல்படுத்தப்படுவதையும் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும்தான் செய்யும் என்றால், மக்கள் மனதில் எழும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்  "தமிழகத்தில் ஆட்சி எதற்கு..? அரசு எதற்கு...?" 

"மாநில சுயாட்சி"க்காகக் உரத்துக் குரல்கொடுத்த அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருக்கும் ஆளும் அதிமுக அரசு, "கிராம சுயாட்சி"யைத் துச்சமென மதிப்பது கொடுமையிலும் கொடுமை.

உச்சநீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பாக, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவேண்டும் என்று மீண்டுமொருமுறை தமிழக அரசை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
87545-80274, 87545-80270

Tuesday 23 October 2018

SPI Press release - விரைந்து வருவது உணவா? எமனா?

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

பத்திரிகை செய்தி (23-10-2018)
தொடர்புக்கு : 87545 80270 / 88704 72179

விரைந்து வருவது உணவா? எமனா?
செயலிகள் மூலம் உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் சாலை விதிகளை
தொடர்ந்து மீறும் செயலை தடுத்து நிறுத்த காவல்துறையிடம் சட்ட பஞ்சாயத்து
இயக்கம் மனு! 73% உணவு விநியோக ஊழியர்கள் சாலை விதிகளை மீறுகின்றனர் - கள
ஆய்வில் கண்டுபிடிப்பு!!

வீட்டிலிருந்தபடியே கைபேசி மூலம் நமக்கு தேவையான உணவுகளையும் நமக்கு
அருகில் உள்ள உணவகங்களையும் கைபேசியில் காண்பிக்கும்
Swiggy, Zomato, FoodPanda, UberEats மற்றும் பல
நிறுவனங்களின் கைபேசி செயலிகள் உணவு நுகர்வு சந்தையில் ஒரு பெரிய
மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் கிடைத்த
அமோக வரவேற்பை அடுத்து, நகர/மாநகரங்களில் அந்நிறுவனங்கள் தங்களின் சேவையை
விரிவுப்படுத்தி வருகின்றன. நாட்டில் வேலையின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான
இளைஞர்களுக்கு பகுதி நேர/முழு நேர ஊழியர்களாக வேலை பார்க்க ஒரு
வாய்ப்பையும் இந்நிறுவனங்கள் உருவாக்கியிருக்கின்றன. நிறுவனங்கள் -
வாடிக்கையாளர்கள் - அந்நிறுவன ஊழியர்கள் என இத்துறையின் அனைத்து
பங்குதாரர்களுக்கும் பயனடையும் வகையில் தொழில் மாதிரி
அமைக்கப்பட்டுள்ளதால் இத்துறை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது.
உணவு நுகர்வுத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திவரும்
இந்நிறுவனங்கள், உடனடி கவனத்தை ஈர்க்கும் பிரச்சனையையும் கண்டுகொள்ளாமல்
இருக்கிறது.

அவற்றில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட வேண்டியது அந்நிறுவன விநியோகப்
பணியாளர்களின் சாலை விதிமீறல் பிரச்சனைகள். ஹெல்மெட் அணியாமை, Earphone
அணிந்து செல்வது / ஒருவழி சாலையில் பயணிப்பது, Signal களை மதிக்காமல்
அதிவேகமாக செல்வது மற்றும் இதனால் ஏற்படும் விபத்துகள் ஆகியவற்றை நாம்
தினந்தோறும் சாலைகளில் கண்டு வருகிறோம். கடந்த சில மாதங்களாக
இப்பிரச்னையின் வீரியம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உணவு விநியோக
ஊழியர்கள் தொடர்ந்து சாலை விதிகளை மீறுவதால், பல இடங்களில் மோதல்கள்
மற்றும் சிறு விபத்துகளை தொடர்ந்து காண முடிகிறது. தொடர்ச்சியாக சாலை
விதிகளை உணவு விநியோக ஊழியர்கள் மீறுவதால், மற்ற இளைஞர்களுக்கு தவறான
முன்னுதாரணத்தையும் ஏற்படுத்துகிறது. இப்பிரச்சனையால் பெரிய விபத்துகள்
ஏற்படும் முன் தகுந்த நேரத்தில் தடுக்க வேண்டுமென சட்ட பஞ்சாயத்து
இயக்கம் முயற்சி செய்து வருகிறது.

இயக்க தன்னார்வலர்கள் ஐந்து பேர் இணைந்து வேளச்சேரி மற்றும் OMR சாலையில்
ஏற்படும் விதிமீறல் எண்ணிக்கை மற்றும் புகைப்பட ஆதாரங்களை களப்பணி மூலம்
சேகரித்து மேற்கூறிய நிறுவங்களின் twitter முகவரியில் புகார்
அளிக்கப்பட்டது. 73% உணவு விநியோக ஊழியர்கள் ஏதாவது ஒரு வகையில் சாலை
விதிகளை மீறுவதை கள ஆய்வு உறுதிப்படுத்தியது. இணையவாசிகள் மத்தியில்
வெளிப்படையாக புகார் கூறியதும் உடனடியாக தங்கள் நிறுவன ஊழியர்களிடம்
அறிவுறுத்துவதாக பதிலளித்ததோடு இந்நிறுவங்கள் நிறுத்திக்கொண்டன.
அந்நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த எந்த
நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை மாநகர காவல் துறை ஆணையர்
திரு.விஸ்வநாதன் அவர்களுக்கு கடந்த 22/10/2018 அன்று புகார் மனு ஒன்று
அனுப்பப்பட்டுள்ளது. விபத்துகளின் விகிதம் அதிகமுள்ள தெற்கு சென்னை
ஆணையர் மற்றும் காவல்துறை ஆய்வாளர்களை நேரில் சந்தித்து மனு
அளிக்கப்பட்டுள்ளது. (மனுவின் நகல் இணைக்கப்பட்டுள்ளது).

மேலும், விநியோகப் பணியாளர்களுக்கும் அந்தந்த நிறுவனங்களுக்கும் தகுந்த
அறிவுரை மற்றும் எச்சரிக்கையை போக்குவரத்து காவலர்கள் வழங்க உத்தரவிடவும்
கோரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, விநியோகப் பணியாளர்களை மருத்துவமனையில்
விபத்து பிரிவிற்கு நேரில் அழைத்து சென்று விதிமீறலால் ஏற்படும் தேவையற்ற
இன்னல்கள் குறித்து நேரடியாக விளக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது போன்ற புது பிரச்சனைகளை கையாள மோட்டார் வாகன சட்டத்தில் தகுந்த
திருத்தங்கள் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்து வைத்தோம்.

இயக்கத்தின் சார்பாக Swiggy நிறுவனத்திற்கும் நேரில் சென்று அவர்களின்
விநியோகப் பணியாளர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க கூறியுள்ளோம். (மனு
இணைக்கப்பட்டுள்ளது) மேலும், Order செய்யப்பட்ட 30 நிமிடத்திற்குள் உணவு
பண்டங்களை விநியோகிக்க வேண்டுமென உள்ள எதிர்பார்ப்பை போக்குவரத்து
நெரிசலை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கவேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டுள்ளோம். விநியோகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள்
பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற் போல் வணிக மாதிரியை
அமைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

காவல்துறையும் Swiggy மற்றும் பிற நிறுவனங்களும் விநியோகப் பணியாளர்கள்
சாலைகளில் விதிமீறலின்றி பயணிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க உடனடியாக
ஆவண செய்யவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

செந்தில் ஆறுமுகம்
பொது செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்


ENGLISH VERSION:

Restaurant search and food delivery applications like Swiggy, Zomato,
FoodPanda, UberEats etc. have created a revolution in the food
industry by providing a user friendly app-based food ordering and by
delivering food at the doorstep. These platforms have created
thousands of job opportunities to the employment-deprived youth of the
country. After the phenomenal success of the delivery service in the
metropolitan cities, the companies have begun to penetrate the tier 2
and tier 3 cities. As the market size of these companies grow larger
day by day, it creates a win-win situation for the consumers, delivery
boys and entrepreneurs. That being said, however, there is a looming
problem that needs to be addressed!

To make more incentives and get better ratings, delivery boys violate
traffic rules at ease. Needless to say, the issue multiplies during
the peak hours. This in turn creates a huge havoc in the roads, widely
noticed in the past few months. Not wearing helmets, riding with
headphones, violating one-ways, overspeeding and jumping signals have
become the new norm for these delivery boys. Face-offs between
delivery boys and riders and minor accidents has become a part of the
day to day life in Chennai. Before the rate and the degree of
accidents sky-rocket because of the issue, Satta Panchayat Iyakkam
(SPI) wants the timely addressal of the issue.

A team of 5 members from SPI conducted a field study to collect the
violation rate and photos in the Velachery and OMR areas. It was found
out that atleast 73% of the delivery boys violate the traffic rules in
someway in our field survey. With these evidences and ground work, SPI
issued complaints via twitter to the delivery apps in order to address
the issue. Though Swiggy's twitter team was lightening quick to
respond there were no changes made in the field, as one could still
observe Swiggy's team violating the traffic rules. So, We escalated
the issue to the Chennai Police and has lodged a number of complaints
and petitions to the Chennai Police on the same, on 22nd October 2018.
SPI has also sent a copy of the complaint letter (attached herewith)
to Mr. A.K. Vishwanathan, Commissioner of Police, Chennai,.

SPI has requested the Traffic Police to issue strong orders to the
violating delivery companies and delivery boys so that they will not
violate the rules. We have also asked the City Police to take the
delivery boys to the accident wards in hospitals to emphasize on the
serious repercussions of traffic violation. We have also asked the
Police officials to draft the new rules and regulations for the
industry and requested them to make necessary changes in the Motor
vehicle act 1988 to deal the habitual offenders.

SPI also met with the Swiggy Team to appraise them on the dangers of
violating traffic rules. SPI requested them to set the customer
expectations right so that delivery boys will not be under unnecessary
pressure that leads to such dangerous violations. SPI also suggested
to relax the 30 minutes delivery window so that the delivery boys will
have ample time for delivery. SPI volunteers to conduct awareness
sessions among the delivery boys from time to time to create awareness
on the impact these acts will have on precious lives.

Satta Panchayat Iyakkam requests the Chennai City Police and the
Chennai Traffic Cops to take necessary actions to the control the
menace, the delivery boys have been creating in the past few months.
SPI also wants the Swiggy and other food delivery companies to alter
their work culture for a larger good.

Senthil Arumugam
General Secretary, Satta Panchayat Iyakkam


COPY OF SPI'S COMPLAINT TO SWIGGY

22/10/2018
Chennai
FROM:
A.Jai Ganesh
Secretary, Satta Panchayat Iyakkam
Kamaraj Nagar, Thiruvanmiyur, Chennai

To
The General Manager - Swiggy
LBR Towers, Tenampet
Chennai


SUBJECT: Repeated Traffic rule violations and Dangerous driving by
Swiggy Delivery boys

Respected Sir,

We are extremely happy and proud that Swiggy has revolutionized the
food industry in the country. Satta Panchayat Iyakkam heartily
congratulates Swiggy for its profound achievements and for employing
thousands of youths who were devoid of jobs and careers.

In order to make more incentives, Swiggy delivery boys have begun to
violate traffic rules and this has become a "New Normal" for past few
days. On our field survey, We could witness at least 10 traffic
violations by Swiggy delivery boys in 30 minutes. Not wearing Helmets,
Using headphones while driving, Overspeeding, Taking wrong routes are
the violations that Delivery boys do consistently. Though we
understand the nature of the Job, these violations cannot be tolerated
and is hazardous to the common public. Tamilnadu has witnessed 7719
deaths due to road accidents in 2018 and there are high chances that
Swiggy aggravates this number in the near future. Lives of the
delivery boys and vehicle riders are more important than making
incentives.

We made few complaints in Twitter for Swiggy's corrective actions.
However there has been no change in delivery boy's attitude even after
that. Hence, We kindly request you to take immediate necessary steps
to ensure that delivery boys don't violate the traffic rules. We
sincerely believe that Swiggy will take a stern action on the above
issue before a disaster happens.


Thanks
Jai Ganesh



COPY OF SPI'S COMPLAINT TO CHENNAI POLICE OFFICIALS

22/10/2018
சென்னை

அனுப்புநர்:
அ.ஜெய் கணேஷ்
மாநில அமைப்பு செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
காமராஜ் நகர், திருவான்மியூர், சென்னை -600041

பெறுநர்:
1) திரு. AK. விஸ்வநாதன்
கமிஷனர், சென்னை

2) திரு.சாரங்கன் IPS
கமிஷனர், சென்னை (தெற்கு)

3) திரு.சாமிநாதன்
துணை கமிஷனர், சென்னை போக்குவரத்து (தெற்கு)

4) Mr. Sasankh Sai IPS
துணை கமிஷனர், அடையார்

5) திரு.சுதாகர்
இணை ஆணையர் , சென்னை

6) காவல்துறை ஆய்வாளர்
துரைப்பாக்கம், சென்னை


பொருள்: Online Food delivery சேவைகளில் உள்ள நிறுவனங்களின் விநோயகப்
பணியாளர்களுக்கான போக்குவரத்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கிட வேண்டி

இணையத்தளம் மற்றும் Mobile Application-கள் மூலம் பலதரப்பட்ட சேவைகள்
இக்காலத்தில் கிடைத்து வருகிறது. அதில், சமீபத்திய வரவானவை Online Food
Delivery சேவைகள். நாம் இருக்கும் இடத்திற்கு கேட்கும் உணவுகளை குறுகிய
நேரத்தில் எடுத்து வந்து சேர்க்கின்றனர். இந்த சேவைகளை
வாடிக்கையாளர்களுக்கு விரைவாக அளிக்க தனியார் நிறுவனங்கள் Delivery
Boys(விநியோகப் பணியாளர்கள்) என்ற பெயரில் இளைஞர்களை பணியில் அமர்த்தி
செயல்பட்டு வருகின்றன.
வாடிக்கையாளர்களின் தேவைகளை Mobile Application மூலம் ஏற்கும்
நிறுவனங்கள், அந்நிறுவனங்களுக்கு அந்தந்த பகுதிகளில் பணியாற்றும்
விநியோகப் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து, குறிப்பிட்ட நேரத்திற்குள்
Delivery செய்யப்படும் என வாடிக்கையாளர்களுக்கும் தகவல்
தெரிவிக்கப்படுகிறது. அதிக விநியோகம் செய்தால் கூடுதல் ஊக்கத்தொகை
தரப்படுவதால், விநியோக பணியாளர்கள் சாலை விதிகளை மதிக்க மறுக்கின்றனர்.
அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக விநியோகப் பணியாளர்கள் பின்வரும் செயல்களில்
ஈடுபடுவதை தினமும் காண முடிகிறது.
1) விரைவாக Delivery செய்ய இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணிப்பது.
2) சாலையின் எதிர்திசையில் அதிவேகமாக பயணிப்பது. (சமீபத்தில் வேளச்சேரி
மேம்பாலத்தில் தவறான திசையில் பயணிப்பதை காண முடிந்தது)
3) செல்போன்-ஐ பயன்படுத்திக்கொண்டு வாகனம் ஓட்டுவது
4) ஹெல்மெட் அணியாமல் ஹெட்போன் உடன் வாகனம் ஓட்டுவது
5) சிக்னல், யூ டர்ன் மற்றும் மற்ற சாலை விதிகளை புறக்கணிப்பது
மேற்கூறிய சாலைசட்ட விதிமீறல்கள் தினம் நூற்றுக்கணக்கில் நடந்துவருவதை
சென்னை மாநகரில் தொடர்ந்து காணமுடிகிறது. குறிப்பாக, மென்பொருள்
நிறுவனங்கள், கல்லூரிகள் அதிகம் உள்ள OMR மற்றும் ECR நெடுஞ்சாலைகளில்
இது போன்ற செயல்களை அதிகமாக காண முடிகிறது. இச்சாலைகளில் விபத்துகளும்
கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன. எடுத்துகாட்டாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம்
தேதி மாலை துரைப்பாக்கம் பகுதியில் எதிர் திசையில் வந்த Swiggy நிறுவன
விநியோகப் பணியாளர், என் நண்பர் ஒருவர் மீதி மோதி விபத்துக்குள்ளாக
நேரிட்டது. அந்த இடத்தில் வயதான நபரோ அல்ல பெண்களோ பயணிக்க
நேரிட்டிருந்தால் அது பெரிய விபத்தாகியிருக்ககூடும். இது போன்ற சாலை
விதிமீறல்கள் தினம் நடப்பதால், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது.
அது தவிர, விநியோக பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு
பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இவற்றை பொதுமக்கள் மற்றும் விநியோகப் பணியாளர்கள் நலன் கருதி
உடனடியாக தடுத்திட ஆவன செய்ய ஏதுவாக தங்களின் மேலான கவனத்திற்கு
கொண்டுவருகிறேன். நோய்களை விட சாலை விபத்துகளே தமிழ்நாட்டில் 2018இல்
(ஜூலை வரை. 7256 பலி) அதிக உயிர்களை காவு வாங்கிருக்கிறது என்பதயும்
குறிப்பிட விரும்புகிறேன்.இதை பரிசீலித்து Swiggy, Uber Eats, Zomato
மற்றும் இத்துறையில் இயங்கும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு தகுந்த வழிகாட்டு
நெறிமுறைகளை காவல்துறை சார்பில் அளிக்க வழிவகை செய்யுமாறு வேண்டுகிறேன்.
பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன் காவல்துறை தகுந்த நடவடிக்கைகளை
எடுக்கும் என்று நம்புகிறேன்.


இப்படிக்கு,
அ.ஜெய் கணேஷ்

TWITTER COMPLAINT LINKS

https://twitter.com/Rangaprasad_KPR/status/1037548756923604993?s=19

https://twitter.com/Rangaprasad_KPR/status/1052835337502777344?s=19