Friday 30 October 2015

சமூக ஆர்வலர் கோவன் கைது..... தமிழக அரசிற்கு,காவல் துறைக்கு நன்றி...இன்னும் பலரைக் கைது செய்ய வேண்டுகிறோம்.

சட்ட பஞ்சாயத்து இயக்க செய்தி வெளியீடு(30-10-2015)

"டாஸ்மாக் மூடு பாடல்" சமூக ஆர்வலர் கோவன் கைது..... 

 தமிழக அரசிற்கு, காவல் துறைக்கு நன்றி... இன்னும் பலரைக் கைது செய்ய வேண்டுகிறோம்.

"மூடு டாஸ்மாக்கை மூடு" என்ற பிரபல டாஸ்மாக் எதிர்ப்பு பாடலைப் பாடிய சமூக ஆர்வலர் கோவன் இன்று அதிகாலை திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான கருத்துரிமையின் கழுத்துநெறிக்கும் செயலாகத்தான் இதனைப் பார்க்கிறோம். மேலும், டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்கள், அமைப்புகளுக்கு தமிழக அரசு விடுக்கும் மறைமுக எச்சரிக்கை இது. இனிவரும் காலங்களில், போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு இதுபோன்ற திடீர் கைது, சிறைவாசம் பரிசாக அளிக்கப்படும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்தக் கைது.

கோவன் அவர்களின் கைதுக்குக் காரணமான பாடல் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது, பகிரப்பட்டுள்ளது என்பதே, மக்கள் கருத்தின் பிரதிபலிப்பாக இப்பாடல் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. டாஸ்மாக் மூடப்படவேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் விருப்பம், கருத்து. 

இந்த சூழலில் பாடியரைக் கைது செய்துள்ளார்கள். பாடியவரைக் கைது செய்யலாம்; சிறையில் அடைக்கலாம். ஆனால், அவர் மக்களிடம் பரப்பிய கருத்தை..?   பாடலைக் கேட்டவர்களை, பார்த்தவர்களையும் கைது செய்யுமா அரசு..?

தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகள் திறந்து மக்களைச் சீரழிக்கும் "மக்கள் துரோக" செயலுக்கு எதிராக குரல் கொடுப்பது "தேசத் துரோக" குற்றமா..? 

டாஸ்மாக் எதிர்ப்புப் போரளிகளின் வாயை மூடும் செயலை விடுத்து, டாஸ்மாக்கை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட பஞ்சாயத்து இயக்க முகநூலில் , இப்பாடலைப் பாருங்கள்.. பகிருங்கள் என்று பகிரங்கமாக நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். ஏராளமான அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் "மூடு டாஸ்மாக்கை" பாடலை தொடர்ந்து பகிர்ந்து வண்ணம் உள்ளனர். இதுவரை, இப்பாடலைப் பார்க்காத பல ஆயிரம்பேர், இப்போது தேடித்தேடி பார்க்கின்றனர். 

இறுதியாக, தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
 "டாஸ்மாக்" குறித்த விவாதத்தை மீண்டும் பரந்துபட்ட மக்களிடம் விவாதப் பொருளாக்கியதற்காக...

இன்னும் பல டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளைக் கைது செய்யுங்கள்.

போராளிகள் படும் தற்காலிகத் துன்பங்கள்... டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடட்டும்.

செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274

Friday 9 October 2015

Sep-2015 Accounts of Satta Panchayat ... சட்ட பஞ்சாயத்தின் செப்2015 வரவு-செலவு விவரங்கள்...

Sir,

We, Satta Panchayat Iyakkam(SPI) fights against Corruption and Demands Transparency in Governance. 
To "Walk the Talk", we publish our accounts on 5th of every month in facebook and website(since launch of SPI). You can see the accounts of last 24 months @  http://www.tamil.sattam.org/expenses .
We will continue to fight against Corruption & Liquor. Expecting your continued support.

Note: Accounts of September 2015 is attached.

Thanks,
Senthil Arumugam,
General Secretary, Satta Panchayat Iyakkam,
8754580274

ஊடக ஆசிரியர்கள், நிருபர்களுக்கு வணக்கம்,

வெளிப்படையான அரசு நிர்வாகத்தை வலியுறுத்தும் சட்ட பஞ்சாயத்து  இயக்கம், தனது வரவு செலவுகளை வெளிப்படையாக வெளியிடுவதைத் தார்மீகக் கடமையாகக் கருதுகிறது.
மேலும், எங்களுக்கு நன்கொடை அளிக்கும் ஒவ்வொரு ஆர்வலர்களுக்கும் தங்களது நன்கொடை எப்படி செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமையும் இருக்கிறது.

இந்த அடிப்படையில், கடந்த 24 மாதங்களாக(இயக்கம் துவங்கியதிலிருந்து இதுநாள் வரை) ஒவ்வொரு மாதமும் இயக்கத்தின் வரவு-செலவுகளை முகநூலில்,இணையத்தில் வெளியிட்டுள்ளோம்( http://www.tamil.sattam.org/expenses )

இலஞ்ச-ஊழலற்ற வெளிப்படையான அரசு நிர்வாகத்தை கொண்டுவரவும், மதுவிலக்கை வலியுறுத்தியும் எங்கள் போராட்டங்கள் தொடரும்.  ஊடகங்கள், தங்கள் ஆதரவை தொடர்ந்து தர வேண்டுகிறோம்.

செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274




Thursday 1 October 2015

2016 தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிப்போம்..நாளை பிரச்சாரம் துவக்கம்.. People should defeat ADMK in 2016 Election...

To the editor:

On 33rd day of relay fast, Satta Panchayat Iyakkam resolved to campaign against ADMK, the only main stream party in TN which has not yet accepted Liquor Prohibition Policy. Hence, we are kicking off election campaign tomorrow(02-10-2015, 8am, In MADURAI WEST Assembly Constituency) requesting people NOT to VOTE for ADMK. But vote for any party which already assured prohibition.

Senthil Arumugam, State General Secretary,
Satta Panchayat Iyakkam






மதுவிலக்கு கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் 33வது நாளன்று(25.09.15) நாம் அறிவித்தபடி, பிரச்சாரத்தை நாளை துவங்குகிறோம். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை வீடு வீடாய்ப் பிரச்சாரம் துவங்குகிறது ( காளவாசல், ஜெர்மன் ஹோட்டல் அருகே) . தொடர்புக்கு: அண்ணாத்துரை( 8754588222 )


காந்தியவாதி சசிபெருமாளின் உயிர் தியாகம், மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து மதுக்கடைகளை மூடாத அ.தி.மு.க.வை. வரும் சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்போம்; தோற்கடிப்போம்.

குறிப்பு: இப்பிரச்சாரத்தின்போது "மதுக்கடைக்குப் பூட்டு ; அதற்கு உங்கள் ஓட்டு" என்ற ஸ்டிக்கர் ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒட்டப்படும். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, மதுக்கடைகளை மூட வாக்குறுதி அளித்திருக்கும் கட்சிகளில் தங்களுக்குப் பிடித்தமான ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

தொடர்புக்கு: அண்ணாத்துரை( 8754588222 )

செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
87545-80274