Friday 24 July 2020

15வது மத்திய நிதிக்குழுவின் ஊரக உள்ளாட்சிகளுக்கான அடிப்படை மானிய நிதி

*15வது மத்திய நிதிக்குழுவின் ஊரக உள்ளாட்சிகளுக்கான அடிப்படை மானிய நிதி குறித்து அறிந்து கொள்வோம்!*
24.07.2020, தன்னாட்சி

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். மத்திய தொகுப்பு நிதியிலிருந்து, ஒன்றிய அரசின் பணிகளுக்காகவும், மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களின் பணிகளுக்காகவும், நிதியைப் பகிர்ந்தளிப்பது பற்றிய பரிந்துரைகளை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் மத்திய நிதிக்குழு (Central Finance Commission) வழங்கிவருகிறது.

கடந்த காலத்தில், ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் மட்டுமே நிதிப் பகிர்வு நடந்துவந்த நிலையில், 1995 ஆம் ஆண்டு தொடங்கி, பத்தாவது மத்திய நிதிக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில், உள்ளாட்சி அரசாங்கங்களுக்கும் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. நம் நாட்டின் குடியரசுத் தலைவரால் அமைக்கப்பட்ட இந்த நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே, நாமெல்லாம் செலுத்துகிற வரிகளால் கிடைக்கும் ஒட்டுமொத்த நிதியை, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் பிரித்துக் கொள்கின்றன.

அந்த வகையில், தற்போது 2020 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டுகளுக்கான நிதி பகிர்வு பற்றிய பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட 15வது மத்திய நிதிக்குழு, 2020 - 21 நிதியாண்டுக்கான பரிந்துரைகளை மட்டும் தற்போது வழங்கியுள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த நிதியாண்டு (2020-21) முதல் உள்ளாட்சிகளுக்கு நிதி வழங்கப்படும்.

*உள்ளாட்சிகளுக்கான 15வது நிதிக்குழு பரிந்துரைகள்*

நகர்ப்புற உள்ளாட்சிகள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. கிராமப்புற உள்ளாட்சிகளில். கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி ஆகிய மூன்று நிலை ஊராட்சிகளுக்கும் இந்நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த நிதியாண்டில் தமிழக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியானது சுமார் 3607 கோடி ரூபாய்.
*அடிப்படை மானியம் (Basic Grant) மற்றும் குறிப்பிட்ட பணிகளுக்கான மானியம் (Tied Grant)*

இந்தத் தொகை சரிபாதியாகப் பிரிக்கப்பட்டு அடிப்படை மானியம் மற்றும் குறிப்பிட்ட பணிகளுக்கான மானியமாக வழங்கப்படுகிறது. அடிப்படை மானியத்தை உள்ளாட்சிகள் தங்களின் வளர்ச்சிக்காக தாங்களே திட்டமிட்டுச் செலவு செய்து கொள்ளலாம். ஆனால் இந்நிதியினை ஊழியர்களுக்கான சம்பளம் அல்லது நிர்வாகச் செலவுகளுக்கு (Salary or Establishment Expenditure) பயன்படுத்தக்கூடாது.

அடிப்படை நிதியினை (Basic Grant), மக்கள் கிராமசபையில் தீர்மானிக்கிற பணிகளுக்கும் பயன்படுத்தலாம் என்பது நாம் இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

குறிப்பிட்ட பணிகளுக்கான மானிய நிதியை,
*சுகாதாரம் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலைக்கான பணிகள்
*குடிநீர் விநியோகம், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி
ஆகிய பணிகளுக்காக மட்டும் செலவு செய்ய வேண்டும். இந்த இரு இனங்கள் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட பணிகளுக்கான மானிய நிதியில் 50% ஒதுக்கிப் பயன்படுத்த வேண்டும்.

இவற்றில் ஏதாவது ஒரு இனத்திற்கான பணி ஏற்கனவே முழுவதும் பூர்த்தியாகி இருந்தால், அடுத்த இனத்திற்கான பணிகளை எடுத்துச் செய்யலாம் என்பது தெளிவாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட பணிகளுக்கான நிதியை மேற்கண்ட பணிகளுக்கு மட்டுமே செலவிட முடியும். அடிப்படை மானிய நிதியைப் போன்று செலவிட முடியாது.

குறிப்பிட்ட பணிகளுக்கான மானிய நிதி, ஏற்கனவே ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ள சுகாதாரம் மற்றும் குடிநீர் திட்டங்களான தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் அபியான் ஆகியவற்றோடு இணைத்துச் செலவிடப்பட வேண்டும். குறிப்பாக இந்த மானிய நிதியில் புதிய ஆதாரங்களை உருவாக்குவதோடு, ஏற்கனவே உள்ள நீர்வழங்கல் மற்றும் சுகாதாரம் சார்ந்த கட்டமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுது நீக்குதல் பணிகளையும் மேற்கொள்ளலாம்.

*தமிழக அரசின் அரசாணை*
மத்திய நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை (அரசாணை நிலை எண்: 116 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள்: 25.06.2020), கிராம ஊராட்சிகளுக்கு இந்த நிதியாண்டில் (2020-21) வழங்கப்பட்டுள்ள மொத்தத் தொகையான ரூ. 1803.5 கோடியை முறையே மாவட்ட ஊராட்சிகள் (5%) ஊராட்சி ஒன்றியங்கள் (15%) மற்றும் கிராம ஊராட்சிகள் (80%) என பிரித்து வழங்குகின்றது. நாம் இங்கே மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த நிதி அனைத்தும் அடிப்படை மானிய நிதியாகும். குறிப்பிட்டப் பணிகளுக்கான நிதி அல்ல.

மத்திய நிதி அமைச்சகம் 17.06.2020 அன்று இந்த நிதி ஆண்டுக்கான (2020-21), தமிழகத்தின் மூன்றடுக்கு கிராம ஊராட்சிகளுக்கும் வழங்க வேண்டிய மொத்த மானிய நிதியில் முதல் தவணையாக 901.75 கோடியை விடுவித்துள்ளது. இதில்,
* 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 721.4 கோடி
* 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ. 135.2625 கோடி
* 36 மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.45.0875 கோடி
வழங்கப்பட வேண்டும். இந்த நிதியனைத்தும் அடிப்படை மானிய நிதி. மத்திய அரசு இந்த நிதியை விடுவித்த நாளிலிருந்து (அதாவது 17.06.2020), 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு இந்த நிதி விடுவிக்கப்பட்டு இருக்கவேண்டும். அவ்வாறு வழங்கப்படாமல் இருந்தால், மாநில அரசு வரையறுக்கப்பட்ட வட்டியையும் ஊராட்சிகளுக்குச் செலுத்த வேண்டியிருக்கும்.

*அடிப்படை மானிய நிதி, அடிப்படை உரிமை!*

மேற்குறிப்பிட்டுள்ள நிதிப் பகிர்வு சம்பந்தமான விவரங்களை நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், மாவட்டப் பெருந்தலைவர் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் ஆகியோர் விரிவாக இது பற்றி அறிந்து கொண்டு நம் மக்களுக்கான நிதி முறையாகச் செலவிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த அடிப்படை மானிய நிதியை, மத்திய நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் செலவு செய்வதற்கு முழு சுதந்தரமும், அதிகாரமும் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு உண்டு. முறையான தீர்மானங்களை இயற்றி கிராமசபை ஒப்புதலைப் பெற்று பணிகளைச் செய்யலாம். இதில் ஒப்பந்ததாரர்கள் தலையிடவோ, துறை ரீதியான தலையீட்டினையோ ஊராட்சி தலைவர்களோ, வார்டு உறுப்பினர்களோ கிராம மக்களோ அனுமதிக்கவே கூடாது. இது ஊராட்சி மக்களுக்கான நிதி. அடிப்படை மானியம் என்பது ஊராட்சியின் அடிப்படை உரிமை. அதை விட்டுக் கொடுத்து விடக்கூடாது.

தேவையற்ற தலையீடு இல்லாமல் ஊராட்சிகளின் சுதந்தரத்தைப் பறி கொடுக்காமல், மேற்குறிப்பிட்டுள்ள மத்தியநிதிக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் தமிழக அரசாணையின் தகவல்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு, இந்த அடிப்படை மானிய நிதியை அதன் நோக்கங்களை அடைவதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்துவோம்.

உள்ளாட்சியில் நல்லாட்சிக்கானப் பணியில் உங்களுடன், 'தன்னாட்சி' எப்போதும் இணைந்திருக்கும்.

மிக்க அன்புடன்,
க.சரவணன்
தலைவர்
97512 37734

எஸ்.நந்தகுமார்
பொதுச் செயலாளர்
90032 32058

தன்னாட்சி
உள்ளாட்சி உங்களாட்சி
69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-600001.
thannatchi@gmail.com / 94457 00758

Wednesday 22 July 2020

Art of Living -World wide Kanda Sashti KavachamParayanam-26-Jul-2020


Dear Editor,


Art of Living -World wide Kanda Sashti Kavacham Parayanam-26-Jul-2020  6 P.M to 6:30 P.M

Press Release

 

 

1 to 2 Crore Chants of Valour, Strength, and Protection

 

22 July 2020, Chennai: 1 to 2 Crore Tamilians across the world are set to chant the Kanda Sashti Kavacham on 26th July 6 pm onwards, along with the global spiritual master and humanitarian Gurudev Sri Sri Ravi Shankar. 

 

Kanda Sashti Kavacham Parayanam which is part of every Tamil household is devotionally chanted in daily prayers is also believed to invoke valor, give mental strength, and protect people (kavacham). Taking meditative attention to different parts of the body enlivens and heals the body. 

 

Gurudev had given a call on November 15, 2019, to chant the Kanda Sashti Kavacham, which evoked a huge response in Tamil Nadu. These chants are powerful and help calm down the human nervous system, reduce anxiety, and boost immunity.

 

On the auspicious occasion of Aadi (Kanda) Sashti on 26th July, 2020 Gurudev has initiated a mass chanting event where crores of people from Singapore, Sri Lanka, Malaysia, Middle East, Europe, United States and other nations with Tamil speaking populations across the world will participate, making it one of the largest congregations ever to chant the Kanda Sashti Kavacham in such large numbers. 

 

Many esteemed organizations including Religious Leaders and Mutts, Spiritual Organizations, Murugan Devotees Associations, Kavadi Groups, Padayatra Groups, Council of Sanyasis, Grama Pujaris Council, Tamil Sangams from round the World, Renowned Temples, Educational Institutions, Women Micro Entrepreneurs Groups will be joining to chant the Kanda Sashti Kavacham.

 

This historical program will see the participation of 1 to 2 Crore people from around the world chanting the Kanda Sashti Kavacham together.  People can watch the program in Gurudev Sri Sri Ravishankar's social media channels live -

 

Facebook Live

bit.ly/FBKavacham

 

YouTube Live

bit.ly/YTKavacham 

 

 

 

Colours TV Tamil will deliver a special program to mark the occasion and will be telecast from 5:30 pm and will telecast this Kanda Sashti Kavacham chanting (deferred) live.  Voot, Chanakya News YouTube Channel and Behindwoods are also interested to webcast this program live.  Many Bhakti Channels across the Country and local Cable TV channels will also telecast the program live.

 

Mass chanting and meditation have been found very beneficial for activation of the vagus nerve, also known as the wellness nerve in the body. Researchers from MIT, University of California, and Harvard University have also published a paper explaining the anti-inflammatory benefits of yogic practices and meditation.

Thanking you,

Sd/-

Yours sincerely,

Srinivasan Krishnan

Media Coordinator - TN

Mobile: 94441 11587
Email: tn@artoflivingabc.org


 

Press Release

 

வீரம், வலிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முதல் 2 கோடி மக்கள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்கின்றனர் 

22 
ஜூலை 2020, சென்னை: உலக ஆன்மீகத் தலைவர் மற்றும்மனித நேயர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் உலகெங்கிலும் இருந்து முதல் 2 கோடி தமிழர்கள் கந்த சஷ்டி கவசம் பாராயணம்  செய்யவிருக்கின்றனர்.   இந்த கந்த சஷ்டி கவச மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. மேலும் மனித நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், பதட்டத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. 

ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் ஒரு பகுதியாக, தினசரி பிரார்த்தனைகளில் பக்தியுடன் கந்த சஷ்டி கவசம்  பாராயணம்  செய்யப்படுகிறது. மேலும் அது வீரம், மற்றும் மன வலிமையை அளித்து மக்களைப் பாதுகாக்கும் கவசம் என்று நம்பப்படுகிறது. உடலின் வெவ்வேறு பகுதிகளில் தியானம் மூலம் கவனம் செலுத்துவது உடலை உயிர்ப்பிக்கிறது மற்றும் குணப்படுத்துகிறது. 

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் 2019 நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தில் கந்த சஷ்டி  கவசம் பாராயணம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.அது தமிழகத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.  ஜூலை 26ஆம் தேதி புனிதமான ஆடி (கந்த) சஷ்டியின் போது  குருதேவ் மாபெரும் அளவில் பாராயணம் செய்வதற்கு வழிநடத்த  முன்வந்துள்ளார்.இதில் சிங்கப்பூர், இலங்கை, மலேசியாமத்திய கிழக்கு நாடுகள்ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் தமிழ் மொழி பேசும் மக்கள் கொண்ட பிற நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் இக்கந்த சஷ்டி பாராயணத்தில் பங்கேற்கவிருக்கின்றனர்.  

உலகிலுள்ள பல்வேறு மதிப்பிற்குரிய மதத் தலைவர்கள்  மற்றும் நிறுவனங்கள், ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்கள், தமிழ் சங்கங்கள், முருகர் பக்தி பேரவைகள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள், ஹிந்து நிறுவனங்கள், கிராமப் பூஜாரிகள்பேரவை, துறவியர் சங்கம், கோயில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெண்கள் சிறு தொழில் முனைவோர் சங்கங்கள் இந்த கந்த சஷ்டிகவசம் மகா பாராயணத்தில்  உற்சாகமாக பங்கு பெறுகின்றனர்.   இது மிகப் பிரம்மாண்டமான பிரார்த்தனைக் கூட்டமாகத் திகழவிருக்கின்றது.   

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் 1 முதல் 2 கோடி மக்கள் உலகெங்கிலும் இருந்து பங்கு பெற்று கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்வார்கள்.  குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் முன்னிலையில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சி கீழிருக்கும் சமூக ஊடக சேனல்கள் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும் -

Facebook Live

bit.ly/FBKavacham

 

YouTube Live

bit.ly/YTKavacham 

 

இந்நகழ்வை குறிக்கும் வகையில் கலர்ஸ் டிவி தமிழ் சேனல் ஜூலை 26 அன்று மாலை 5:30 மணியிலிருந்து சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்ப  இருக்கின்றது.  இதில் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்களின் கந்த சஷ்டி கவசம் மகா பாராயணம் நேரலை இடம் பெரும்.  வூட், சாணக்யா நியூஸ், Behindwoods ஆகிய சமூக ஊடக சேனல்கள் நேரலையாக ஒளிபரப்ப ஆர்வம் காட்டியுள்ளன.  இந்தியாவிலுள்ள பல்வேறு பக்தி சேனல்கள்  மற்றும் உள்ளூர் கேபிள் ஆப்பரேட்டர்கள் நேரலையாக ஒளிபரப்ப உள்ளனர்.  


உடலில் உள்ள ஆரோக்கிய நரம்பு என்றும் அழைக்கப்படும் வேகஸ் நரம்பு நல்ல முறையில் செயல்படுவதற்கு கூட்டுப்பாராயணமும்  தியானமும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன.  எம்ஐடி, கலிபோர்னியா பல்கலைக்கழகம்மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், யோகாசனங்கள் மற்றும் தியானம்ஆகியவை அழற்சி எதிர்ப்புத்  திறன்களை அதிகரிக்கும் நன்மைகளை விளக்கி ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.  

Thanking you,

Sd/-

Yours sincerely,

Srinivasan Krishnan

Media Coordinator - TN

Mobile: 94441 11587
Email: tn@artoflivingabc.org


 

Saturday 4 July 2020

Launch of first social media app , made in INDIA by Honorable Vice President of India on 5th July 2020

Dear Editor,

India's very own super app, Elyments app - a social networking app at its core is being launched by the Honorable Vice President of India Shri. Venkaiah Naidu in the presence of Gurudev Sri Sri Ravi Shankar, humanitarian & founder of the Art of Living on 5th July, 2020 at 12 PM. 

Given below is the Press Release . Also attached is the press invite of the event. 
 


With Warm Regards
Srinivasan
Tamilnadu Media Co-Ordinator
The Art Of Living
Mobile : +91 9444111587
----------------------

Elyments - the first social media super-app made in India to be launched by the Honorable Vice President of India on 5th July, 2020

4th July 2020, Bengaluru: India has more than 500 million social media users. Yet most of these platforms are owned by companies incorporated outside India, which has spun a debate about privacy of data and data ownership. At such a time, inspired by Gurudev Sri Sri Ravi Shankar, more than 1000 IT professionals have come together to create the homegrown Elyments app, the first social media super-app, made in India.

The app will be launched on 5th July by the Honorable Vice President of India, Sh. M Venkaiah Naidu in the presence of Gurudev Sri Sri Ravi Shankar, humanitarian & founder of the Art of Living. The launch will be graced by dignitaries including Swami Ramdev, Founder, Patanjali Yogpeeth; Ayodhya Rami Reddy, Rajya Sabha MP; Suresh Prabhu, formerly the Minister of Commerce & Industry and Civil Aviation; R.Pandiarajan, Minister, Tamil RV Deshpande, former Minister of Revenue, Government of Karnataka; Ashok P Hinduja, Chairman Hinduja Group of Companies (India); G M Rao, Founder Chairman GM Group; Sajjan Jindal, Chairman & Managing Director, JSW group.

From day one, Elyments has been built keeping user's privacy in mind, as a primary concern. The nation's top privacy professionals have been guiding the design of the product. Data of users is stored in India and user's data will never be shared with a third party without user's explicit consent. 

The app will also be available in more than 8 Indian languages. 

Elyments' vision is to combine the features of popular social media apps and present it on a single unified app. Terms which have become second nature to social media users - contacts, friends, followers - have all been brought together in Elyments. 

Elyments allows users to stay in touch through a vibrant feed, seamless free audio/video calls and private/group chats. *#ElymentsSuperApp* comes as a relief to netizens who have been put off by continuous censorship on other popular sites. Elyments promises to be an unbiased platform that embraces open conversations among people of different schools of thoughts.

The app has been crowd-tested extensively by more than a 1000 people for several months. Close to 200,000 people have already downloaded and are using the app. 

In weeks to come, Elyments also plans to launch :
• Audio/ Video conference calls
• Secure payments via Elyments Pay
• Public profiles who users can Follow/Subscribe
• Curated commerce platform to promote Indian brands
• Regional voice commands

Elyments is a unique app in terms of size and vision. The journey has begun. On 5th July, Elyments will be launched on all App Stores and Google Play Stores across the world.

#ElymentsSuperApp

Warm Regards
Srinivasan
Tamilnadu Media Co-Ordinator
The Art Of Living, Tamilnadu
Mobile : +91 9444111587



Virus-free. www.avg.com