Wednesday 30 May 2018

SPI Press Release | அமைக்க மறந்துவிட்ட மத்திய அரசு! கேட்க மறந்துவிட்ட தமிழக அரசு!!

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

பத்திரிகை செய்தி (31-05-2018)

தொடர்புக்கு : 87545 80270 / 88704 72179

 

அமைக்க மறந்துவிட்ட மத்திய அரசு! கேட்க மறந்துவிட்ட தமிழக அரசு!!

 

200 ஆண்டு கால காவிரி பிரச்சனைக்கு, மே 18 அன்று உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்து ஒட்டுமொத்த தமிழினமே நிம்மதி பெருமூச்சு விட்டது. ஆனால் தமிழகத்திற்கு மீண்டும் ஒரு மாபெரும் அநீதியை இழைக்க மத்திய அரசு காத்து கிடைக்கிறது.

 

மே 18 அன்று காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்த உச்சநீதிமன்றம், கடைசிக்கு முந்திய பத்தியில் பின்வரும் உத்தரவை பிறப்பித்து இருந்தது.

 

20. In view of the above, we dispose of all the I.As., M.As. and the contempt petitions by this common order, on accepting the assurance given on behalf of the Union of India that the draft scheme will be taken to its logical end in accordance with law, with utmost dispatch. We hope and trust that the draft scheme reproduced in paragraph 12 above, is notified in the Official Gazette and given effect to with promptitude before the onset of the impending monsoon.

 

அதாவது, உச்சநீதிமன்ற தீர்ப்பை தர்க்கமான முடிவிற்கு மத்திய அரசு எடுத்து செல்லவேண்டும் என்றும், வரவிருக்கும் பருவமழை காலத்திற்கு முன்பு வரைவு திட்டத்தை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறது.

 

பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1ஆம் தேதி துவங்கும். இந்தாண்டு  மே 27ஆம் தேதியே துவங்கிவிட்டதாக மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இது தவிர, இந்தியாவில் நீராண்டு என்பது ஜூன்1 - மே 31 வரை  எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஜூன் 12ஆம் தேடி மேட்டூர் அணையை திறக்கவேண்டுமானால், மேலாண்மை ஆணையத்தை இந்நேரம் அமைத்திருக்கவேண்டும். ஆனால் ஜூன் 1இற்குள்  ஆணையம் அமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இப்பிரச்சனையை பற்றி எந்த கட்சிகளும் தமிழ்நாட்டில் பேசாதது மிகுந்த ஆச்சர்யம் அளிக்கிறது.

 

மேலாண்மை வாரியத்தை விரைந்து  அமைக்காமல் மெத்தனப்போக்கை கடைபிடித்துவரும் மத்திய பாஜக அரசையும், மாநில உரிமைகளை நிலைநாட்ட தவறிவிட்ட ஆளும் அதிமுக அரசையும் இயக்கம் மிக கடுமையாக கண்டிக்கிறது.தமிழ்நாட்டின் பொறுமையை மேலும் சோதிக்காமல் உச்சநீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, தமிழகத்திற்கு  அதன் நியாயமான உரிமைகளை பெற்று தருவதற்கு மத்திய அரசு ஆவண செய்யவேண்டும். 

 

செந்தில் ஆறுமுகம்,               

       பொது செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

KEY POINTS IN ENGLISH:

 

The union government of India is trying to betray the people of India once again by willfully defaulting the deadline given by the Supreme court of India to constitute the Kaveri river management authority. As per SC order, The authority has to be constituted before June 1,2018. The integrity of the Indian nation will be subjected to severe stress if the central government fails to act as per the Honourable SC's direction. SPI strongly urges the central govenment to constitute the authority within tomorrow. SPI also condemns the state government as it has failed to put pressure on Central government.


                                                                                                         


 


Tuesday 29 May 2018

Environment day: Article by Gurudev Sri Sri Ravi Shankar

Dear Editor,

5th June is celebrated as World Environment Day. This day is the most important day for encouraging worldwide awareness and action for the protection of our environment. It has grown to become a global platform for public outreach that is widely celebrated in over 100 countries.

We are sharing an article by Gurudev Sri Sri Ravi Shankar where he talks about de - polluting our thoughts and emotions as a means to a better Society. i am sure you will find this interesting for your readers.

Thank you for your constant support!

Best regards,

Rajalakshmi

9884017767
-------

Recognize that you are a part of the Environment
Gurudev Sri Sri Ravi Shankar


Today is World Environment Day. Environment is not just the plants, trees, and mountains but we also are a part of the environment. How we think and how we feel affect the environment and the people around us. And so, caring for each other and seeing that we are all happy is an integral part of caring for the environment. When we are stressed and unhappy, we pollute our environment.
If you just sit with a person who is angry or negative for 10 minutes, when you walk away from them, you also carry a little bit of their negativity with you. When you spend a little time with those who are happy (for example, with little
kids), when you move away from there, you carry their joy with you. We pollute the environment not only physically but mentally and emotionally as well. Today, pollution in the environment is caused due to negative emotions such as anger, mistrust, greed, jealousy, and so on. If the mind is polluted with negativity, how can the environment be clean? Happiness is intimately related to the environment.
We are all born happy – every child is born happy and emits happiness, but in the course of growing up, education, and dealing with people all around, somewhere we lose the purity and serenity that we were all born with. We need to get back to our true nature, which is innocence, simplicity, and honesty. Then we will be truly caring towards the environment.

This World Environment Day, Care for the Environment with these Simple Steps:

1) Tackle Stress, Anger, and Frustration Better – It does not mean that you should not get angry but whenever anger comes, it should not stay for more than a little while in the mind. Then, it's not pollution. But when anger stays for a long time in your mind, it creates pollution.

2) Get rid of the Emotional Garbage – Deal smartly with mistrust, hatred, complaints, or any other negative feelings that you are harboring. Start a new chapter with enthusiasm and naturalness.

3) Make Meditation a Part of Your Life. The best way to purify vibrations is through meditation. Meditation transforms negative vibes into positive vibes. It transforms hatred to love, frustration to confidence, despair to hope, and ignorance to intuition. Who wouldn't want this?

4) Feel more confident and have faith that only the best will happen to you.

5) Take part in some form of artistic or cultural activity. Another way to purify vibrations is by engaging in some form of performing art—singing, dancing, and so on—not just sitting and watching but participating.

6) Serve! Reach out to the people who are in need and serve them. Take a break from thinking "what about me, what about me?" and switch to "what can I do, how can I help? How can I contribute to this world?".

These intentions can change our vibes and keep us much happier. A happy state of mind free from negativity is crucial towards a pollution-free environment.

Tamil:

நீங்கள் சுற்றுச்சூழலின் ஒரு பகுதியாக இருப்பதை கண்டறியுங்கள்
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
இன்று உலக சுற்றுச்சூழல் தினம். சுற்றுச்சூழல் என்பது தாவரங்கள், மரங்கள், மலைகள்
மட்டுமல்ல, நாமும் சுற்றுச்சூழலின் ஒரு பகுதியாகவே இருக்கிறோம். நமது எண்ணங்களும்
நாம் எவ்வாறு உணர்கிறோம் என்பதும் சுற்றுச்சூழலையும், நம்மைச் சுற்றியுள்ள மக்களையும்
பாதிக்கும். எனவே, ஒருவரையொருவர் ஆதரித்து நாம் அனைவரும் சந்தோஷமாக இருப்பது
என்பது சுற்றுச் சூழலைக் கவனிப்பதில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். நாம் அழுத்தத்து
டனும் மகிழ்ச்சியற்றும் இருக்கும் போது, ​​நமது சூழலை மாசுபடுத்துகிறோம்.
10 நிமிடங்களுக்கு கோபம் அல்லது எதிர்மறையாக உள்ள ஒரு நபருடன் அமர்ந்தால் , அவர்
களை விட்டு விலகும் போது, ​​உங்களுடன் எதிர்மறையின் ஒரு சிறிய பகுதியை நீங்கள்
எடுத்துச் செல்கிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களோடு சிறிது நேரத்தை செலவிடும் போது
(உதாரணமாக, சிறிய குழந்தைகளுடன்), நீங்கள் அங்கிருந்து வெளியேறும் நிலையில், ​​அவர்
களது மகிழ்ச்சியை உங்களுடன் எடுத்துச் செல்கிறீர்கள்.
சுற்றுச்சூழலை உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் மாசு
படுத்துகிறோம். இன்று, கோபம், அவநம்பிக்கை, பேராசை, பொறாமை போன்ற பல
எதிர்மறை உணர்வுகளால் சூழலில் மாசுபாடு ஏற்படுகிறது. மனம் எதிர் மறைகளால் மாசு
பட்டிருந்தால் சூழல் எவ்வாறு சூழல் சுத்தமாக இருக்கும்? மகிழ்ச்சியானது சூழ்நிலைக்கு
மிகவும் நெருக்கமாக இருக்கின்றது.
நாம் அனைவரும் சந்தோஷமாக பிறந்தவர்கள் - ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியுடன்
பிறந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது, ஆனால் வளரும்போது , ​​கல்வி, மற்றும் மக்களை
கையாள்வது, ஆகியவற்றில் எங்கேயோ நாம் நம்முடன் பிறந்த தூய்மையையும் அமைதி
யையும் இழந்து விடுகிறோம். குற்ற மற்ற, எளிமையான , நேர்மையான நமது உண்மை
இயல்புக்கு நாம் திரும்ப வேண்டும். அப்போதுதான் நாம் உண்மையிலேயே சூழலை
ஆதரிக்கிறோம்.
இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில்,இந்த எளிய வழிமுறைகளுடன் சுற்றுச்சூழல்
பாதுகாப்போம்.
1. மன அழுத்தம், கோபம், மற்றும் ஏமாற்றம் ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டும்.
நீங்கள் கோபப்படக் கூடாது என்று பொருள் இல்லை, ஆனால் கோபம் வரும்
போதெல்லாம் மனதில் சிறிது நேரத்திற்கு மேல் அது தங்கக் கூடாது. அப்போது அது
மாசு அல்ல. ஆனால் கோபம் உங்கள் மனதில் நீண்ட காலமாக தங்கி இருக்கும்போது,
​​அது மாசுபாட்டை உருவாக்குகிறது.
2. உணர்ச்சிமயமான குப்பைகளை அகற்றவும் - நீங்கள் நம்பிக்கையின்மை வெறுப்பு
புகார்கள், அல்லது வேறு எந்த எதிர்மறையான உணர்ச்சிகளையும் யுக்தியுடன்
கையாளுங்கள். உற்சாகம் மற்றும் இயல்பைக் கொண்ட ஒரு புதிய அத்தியாயத்தைத்
துவக்குங்கள்.
3. தியானத்தை வாழ்க்கையின் ஓர் பகுதியாக்குங்கள். உங்கள் அதிர்வுகளை சுத்திகரிக்க
சிறந்த வழி தியானம். தியானம் எதிர்மறை அதிர்வுகளை நேர்மறை அதிர்வுகளாக
மாற்றியமைக்கிறது. இது வெறுப்புணர்வை அன்பு, விரக்தியை நம்பிக்கை, மனக்
கசப்பை நன்மை என நம்பும் உணர்வு மற்றும் அறியாமையை உள்ளுணர்வு என
மாற்றியமைக்கிறது. யார் தான் இதை விரும்பமாட்டார்கள்?
4. மேலும் , உங்களுக்கு சிறந்தது மட்டுமே எப்போதும் நடக்கும் என்று நம்பிக்கையுடன்
இருங்கள்
5. கலை அல்லது கலாச்சார நடவடிக்கைகளின் பங்கேற்றுக் கொள்ளுங்கள். அதிர்வு
களைச் சுத்திகரிக்க மற்றொரு வழி கலை: பாடல், நடனம் போன்றவற்றில் ஈடு

படுங்கள். உட்கார்ந்து மட்டும் பார்த்துக், கொண்டிராமல் அவற்றில் கலந்து பங்கேற்க
வேண்டும்.
6. தொண்டாற்றுங்கள் ! தேவையுள்ள மக்களுக்கு சேவை செய்யுங்கள். தன்னைப்
பற்றியே, எனக்கு என்ன ஆகும்?, என்ன ஆகும்?" என்ற சிந்தனையிலிருந்து ஒரு
இடைவெளி எடுத்து "நான் என்ன செய்ய முடியும், எப்படி நான் உதவ முடியும்? இந்த
உலகத்துக்கு நான் எவ்வாறு பங்களிக்க முடியும்?" என்று சிந்தித்து செயல் படத்
துவங்குங்கள்.


Monday 28 May 2018

SPI Press Release | தமிழக சட்டமன்றத்தில் நிலைக்குழுக்களை உடனடியாக அமைக்கவேண்டும்!

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

பத்திரிகை செய்தி (28-05-2018)

தொடர்புக்கு : 87545 80270 / 88704 72179

 

தமிழக சட்டமன்றத்தில் நிலைக்குழுக்களை உடனடியாக அமைக்கவேண்டும்!

நிலைக்குழுக்களை உடனே அமைக்க வேண்டும்  -  நேரடி ஒளிபரப்பு வேண்டும் - லோக் ஆயுக்தா -மதுவிலக்கு- சேவை பெறும் உரிமைச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் - மே 29 சட்டமன்றம் கூடும் நிலையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை.

 

பாராளுமன்றம்  மற்றும்  மாநில சட்டமன்றங்கள் இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. பாரம்பரியம் மிக்க தமிழக சட்டமன்றம் இன்று வெறும் சம்பிரதாய சடங்காக மட்டுமே நடைபெற்று வருகிறது. 51 வருடமாக தமிழகத்தை ஆண்டு வரும் இருபெரும் திராவிட கட்சிகள், சட்டமன்ற செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல அதிக அளவில் முயற்சிகள் எடுக்கவில்லை. காலத்திற்கேற்ப சட்டமன்ற நெறிமுறைகளை மேம்படுத்தினால் மட்டுமே, சட்டமன்றம் அதன் முக்கியத்துவத்தை தக்கவைத்து கொள்ள முடியும்.

 

ஜனநாயகத்தின் கோயிலாக போற்றப்படவேண்டிய சட்டமன்றத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், சட்டமன்ற நடவடிக்கைகளில் பரிணாம வளர்ச்சி ஏற்படுத்துவதற்கும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் பல முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. சட்டமன்றம் கூடும் போதேல்லாம், சட்டமன்றத்தில் இருக்கும் குறைகளை இயக்கம் சுட்டி காட்ட தவறுவதில்லை. ஆனால் ஆளும் அதிமுக அரசு "செவிடன் காதில் சங்கு ஊதியது போல்" இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆட்சியை காப்பாற்றிக்கொள்வது மட்டுமே தங்களின் தலையாய கடமையாக வைத்துக்கொண்டு பெரும்பான்மையில்லாத மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த தொடரில் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான மசோதாக்கள், சட்டமன்ற சீர்திருத்தங்கள், கடந்த கால தவறுகளை இயக்கம் கோடிட்டு காட்ட விரும்புகிறது. மே 29 அன்று கூடி, ஒரு மாத காலம் நடக்க இருக்கும் சட்டமன்ற கூட்ட தொடரிலாவது ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இணைந்து தவறுகளை திருத்தி கொண்டு புரட்சிகரமான சீர்திருத்தங்களை அமல்படுத்தி தங்களுடைய சட்டமன்ற கடமையை சரிவர மேற்கொள்ளவேண்டும் என்று இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

 

பாராளுமன்றத்தில் உள்ளது போல் துறைவாரியாக நிலைகுழுக்களை அமைக்க 

வேண்டும்:

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பெரும்பான்மையான சட்டங்கள், அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய நிலைக்குழுக்கள் தீர்க்கமாக ஆராய்ந்த பிறகு தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிறது. அரசியல் லாபங்களுக்காக எதிர்க்கட்சிகள் வெளியில் எதிர்த்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து நிலைக்குழுவில் சட்டத்தை ஆராய்ந்து திருத்திய பிறகே, அந்த மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகிறது. துறைவாரியாக நிலைக்குழுக்கள் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த நிலைக்குழுக்கள் தேர்ந்த ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது. 

 

தமிழக சட்டமன்றம் 70 ஆண்டுகளாக இயங்கி வந்தாலும், இந்த உள்கட்டமைப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை. தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையான சட்டங்கள்  எந்த விவாதமின்றி  பெயரளவிற்கு மட்டுமே நிறைவேற்றப்படுகிறது. சட்டங்களை விவாதித்து, தேவையான திருத்தங்களை மேற்கொண்ட பிறகு மட்டுமே மசோதாக்கள்  நிறைவேற்றவேண்டும். 

 

சட்டமன்றம் 90 நாட்கள் கூடவேண்டும்:

இந்திய அரசியலமைப்பு சாசனத்தை மறுசீராய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் நாராயண ராவ் கமிட்டி (2000), மாநில சட்டமன்றங்கள் 90 நாட்கள் , ராஜ்ய சபை 100 நாட்கள் மற்றும் லோக் சபை 120 நாட்கள் இயங்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. ஆனால் தமிழக சட்டசபை சராசரியாக வருடத்திற்கு 35 நாட்கள்  மட்டுமே இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் போராட்டமே இல்லாத நாட்கள் இல்லை என்று இருக்கும் நிலையில், சட்டமன்றம் பரிந்துரைக்கப்பட்ட நாட்களை விட அதிகமாக கூட வேண்டும்.

 

2015இல் தமிழக சட்டசபை கூடிய நாட்கள் : 28

2016இல் தமிழக சட்டசபை கூடிய நாட்கள் : 35

2017இல் தமிழக சட்டசபை கூடிய நாட்கள் : 37

 

2004இல் வெறும் 16 நாட்கள் மட்டுமே தமிழக சட்டமன்றம் கூடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய பாராளுமன்றம் பொதுவாக காலை 11 முதல் மாலை 6 மணி வரை இயங்குகிறது.

ஆனால் தமிழக சட்டமன்றம் காலை 10 முதல் 1 மணி வரையே இயங்குகிறது. நடக்கும் விவாதங்களிலும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், "தகுந்த நடவடிக்கைகள்/முடிவுகளை அரசு எடுக்கும்" என்று கூறிவிட்டு அமர்ந்து விடுகிறார்கள். அந்த முடிவுகளை எடுப்பதற்கும் தெரிவிப்பதற்கும் தான் சட்டமன்றம் உள்ளது என்பதை ஆளும் அரசு உணர வேண்டும். நீட், காவேரி, கதிராமங்கலம், ஸ்டெர்லைட், முல்லைப்பெரியாறு போன்ற தமிழகத்தின் ஜீவாதார பிரச்னைகளை எதிர்கட்சியுடன் விவாதித்து தீர்க்கமான முடிவுகளையும் கொள்கைகளையும் வெளிக்கொணர வேண்டும். ஒவ்வொரு முறையும் MLAக்களின் சம்பளத்தை உயர்த்தும்பொழுது, மக்கள் முகம் சுழிக்காத வகையில் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் அமையவேண்டும்.

 

தேவையின்றி 110வது விதியை பயன்படுத்தக்கூடாது:

போர் காலங்களில் அல்லது இக்கட்டான சூழ்நிலையில் அல்லது விவாதம் செய்ய நேரம் இல்லாத நிலையில் மட்டுமே 110வது விதியை பயன்படுத்த வேண்டும். மறைந்த முன்னாள் ஜெயலலிதா சட்டசபையில் பேசினாலே 110வது விதியின் கீழ் பேசும் போக்கை கடைபிடித்தார். பல விமர்சனங்களுக்கு உள்ளான போதும், சபை மாண்பை குறைக்கும் வகையில் விதிகளுக்கு எதிராக செயல்பட்டார். அவ்வழியை எக்காரணத்திற்காகவும் தற்பொழுது உள்ள அதிமுக அரசு பின்பற்ற கூடாது. தவறான முன்னதாரணத்தை ஏற்படுத்தக்கூடிய வரலாற்று பிழையை அரசு செய்ய கூடாது.

 

சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுகோள்:

பாராளுமன்றத்தை போல் தமிழக சட்டசபை நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று சில காலங்களாகவே தொடர்ந்து கோரிக்கை வைத்தும், தமிழக அரசு செவிசாய்க்காமல் இருக்கிறது. 2012இல் இது சம்பந்தமாக தொடரப்பட்ட பொது நல வழக்கில், ஜெயலலிதா தலைமையிலான அரசு, அரசின் நிதி பற்றாக்குறையால் நேரடி ஒளிபரப்புக்கு ஆகும் 60 கோடியை ஏற்க முடியாது என்று தெரிவித்தது. 

ஆளும் அதிமுக அரசு தங்களுடைய  ஒற்றுமையை நிரூபிக்கவும் அரசியல் காரணங்களுக்காகவும், எதற்கும்  உபயோகம் இல்லாத எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை 200 கோடி ரூபாயில் நடத்தி வருகிறது. எம்ஜிஆரின் 100வது பிறந்த நாளுக்காக சட்டசபை நிகழ்வுகளை  நேரடி ஒளிபரப்பு செய்ய அந்த பணத்தை ஒதுக்கி இருந்தால், தமிழகமே ஆளும் அரசை பாராட்டி இருக்கும். ஆனால் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்தியதால், எம்ஜிஆர் நினைவு நாளில் ஆர்கே நகர் தேர்தலில் ஆளும் அதிமுக அரசு மண்ணை கவ்வியது.

 

எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்த பொழுது, அவரது தொலைக்காட்சி கேப்டன் டிவி மூலமாக  இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராக இருப்பதாக கூறிய பின்னும் தமிழக அரசு அக்கோரிக்கையை பரிசீலிக்கவில்லை. அரசின் ஆளுமையையும், அமைச்சர்களின் திறமைகளையும், உறுப்பினர்களின் வாதத்திறனையும் குறைவாக இருப்பதினால் அரசு அஞ்சுகிறதா? அண்டை மாநிலமான ஆந்திராவில் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கர்நாடகாவில் தனியார் தொலைக்காட்சிகள் அனுமதிக்கப்படுகிறது. இன்னும் எளிமையாக இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் அல்லது தூர்தர்ஷன் பொதிகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கலாம். ஜனநாயகத்தின் கருவாக செயல்படும் சட்டசபையிலே வெளிப்படைத்தன்மை இல்லை என்பது வருத்தற்குரிய செய்தி. இனிமேலும் அற்ப காரணங்களை காரணம் காட்டி காலம் தாழ்த்தாமல் ஜனநாயகத்தை வலிமைப்படுத்த உடனடியாக சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

 

எதற்கும் உபயோகம் இல்லாத சட்டமன்ற இணையத்தளம்:

தமிழக சட்டமன்றத்தின் இணையத்தளமானது எந்த ஒரு தகவலையும் எளிதில் பெற முடியாத வண்ணம் மிகவும் மோசமாக உள்ளது. அதனையும் தமிழக அரசு கருத்தில் கொண்டு மேம்படுத்த வேண்டும். சட்டமன்றத்தின் இணையத்தளம் மிக மோசமான நிலையில் உள்ளது. கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய  வேண்டும். உறுப்பினர்களின் வருகை பதிவு, அணைத்து மசோதாக்கள் மற்றும் சட்டமன்றம் தொடர்பான தகவல்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய உடனடியாக ஆவண செய்ய வேண்டும். 

 

மது ஒழிப்பு, லோக் ஆயுக்தா, சேவை பெரும் உரிமை சட்டடை உடனடியாக நிறைவேற்றவேண்டும்:

படிப்படியாக மது விலக்கு கொண்டு வருவோம் என்று கூறிய அதிமுக அரசு, அரசியல் நெருக்கடி அல்லது தேர்தல் வரும் நேரங்களில் மட்டுமே மது விலக்கு பற்றி அறிவிப்பு வெளியிடுகிறது. மது வாழ்விற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில், வருடத்திற்கு 10% கடைகள் மூடப்படும் என்று அறிவித்து உள்ளார்கள். அது போல் எப்படி மது விலக்கை அமல்படுத்தப்போகிறோம் என்பதை தமிழக அரசு அறிவிக்க  வேண்டும். லோக் ஆயுக்தா, சேவை பெறும் உரிமை சட்டம் போன்ற சட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று  சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உச்சநீதிமன்றம் பலமுறை கண்டித்தபிறகும், ஆளும் அரசு  8 ஆண்டுகளாக இந்த சட்டங்களை கண்டுகொள்ளாமல்  இருக்கிறது. நடைபெறும் தொடரிலாவது அரசு இச்சட்டங்களை  நிறைவேற்ற வேண்டும். இது போன்ற உன்னதமான சட்டங்களை நிறைவேற்றினால் ஆளும் அதிமுக அரசை வரலாறு நினைவுகூறும். 

 

சட்டமன்றத்தில் நடக்கும் ஊழல் முறைகேடுகள்:

சட்டமன்றத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் ஜெனெரேட்டர்க்கு அரசு இமாலய தொகையை (தண்ணீருக்கு 5 லட்சம், ஜெனெரேட்டர்க்கு 42 லட்சம்) செலவழித்து வருகிறது. அம்மாவின் அரசே, அம்மா குடிநீரை பயன்படுத்தாமல் தண்ணீர்க்கு பல லட்சங்கள் செலவழிப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஜெனெரேட்டரை வாங்காமல், வாடகைக்கு எடுத்து "காமன்வெல்த்" ஊழலை தமிழகத்தில் செய்து வருகிறார்கள். அரசு ஜெனெரேட்டர்க்காக வாடகை எடுக்கும் தொகை, ஜெனெரேட்டரின் கொள்முதல் விலையை விட அதிகமாக இருக்கிறது.

 

5.95 கோடி வாக்காளர்களின் பிரதிநிதியாக செயல்படும் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புணர்ச்சியை புரிந்து கொண்டு செயல்படவேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளத்தை 105000 உயர்த்தும் தீர்மானத்தை அரை மணி நேரத்தில் கருத்தொற்றுமையுடன் நிறைவேற்ற முடிந்த அரசுக்கு, உன்னதமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள அக்கறை இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்த போக்கை மாற்றிக்கொள்ளாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளை அரசு தொடர்ந்தால், மீண்டும் சட்டமன்றத்தில் கால்வைக்கமுடியாத நிலையை மக்கள் ஏற்படுத்துவார்கள் என்பதை நினைவூட்டிக்கொள்ள விரும்புகிறோம்.

 

 

செந்தில் ஆறுமுகம், 

    பொது செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம் 

                                                                                                                   Contact Number: 88704 72179

 

                                                                                  

 

KEY POINTS IN ENGLISH:

 

·         Tamilnadu assembly is set to convene on 29 May to transact its business. Though TN legislature has a rich heritage, the evolution of the assembly and its procedure hasnt happened in last 51 years. 

·         There is an urgent need to have quality research and scrutiny of laws through departmental standing committees which doesnt exist in TN assembly. 

·         On an average, TN assembly convenes only for 35 days per year which is very less when compared with the Justice Narayana Rao committees recommendation.

·         Late CM Jayalalitha extensively used 110 rule to announce which is anti democratic. The present government shouldnt follow the wrong example set by her.

·         To make the legislative process more transparent and meaningful, happenings of the assembly has to be live telecasted.

·         Long pending bills and announcements like Lok Ayukta, Alcohol prohibition and Right to service acts needs to be passed in the current session.

·         Generators for Tamilnadu assembly are being rented out at the price which is costlier than the original price of the generator itself.


Tuesday 15 May 2018

காவிரி மேலாண்மை வாரியமா..? பா.ஜ.க. நாட்டாண்மை வாரியமா…? - சட்ட பஞ்சாயத்து இயக்கம் - பத்திரிகை செய்தி 15-05-2018

காவிரி மேலாண்மை  வாரியமா..?  
பா.ஜ.க. நாட்டாண்மை வாரியமா…?

 சட்ட பஞ்சாயத்து இயக்கம் பத்திரிகை செய்தி ( 15-05-2018 )

                                      87545-80274, 87545-80270

 

-          வரைவு ஆவணம் மேலாண்மை வாரியத்தின் தன்னாட்சியைப் பறிக்கிறது.

-          மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசின் கை ஒங்குவதற்கு வழிவகுக்கும் பிரிவுகள் 3.14, 3.18(பக்கம்9)  நீக்கப்படவேண்டும்


 

காவிரி மேலாண்மை வாரியத்தை "மேலாண்மை" செய்யும் "சூப்பர் மேலாண்மை வாரியமாக" மத்திய பா.ஜ.க அரசு இருக்க விரும்புவது நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு ஆவணத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. ( வரைவு ஆவணத்தின் பிரிவு 3,  பக்கம் 9:  பத்தி: 14.  If the authority finds that any Government of the party states namely Tamilnadu, Kerala, Karnataka and Union Territory of Pondicherry do not co-operate in implementing the decision/direction of the Tribunal, it can seek the help of the Central Government, ******whose decision in the matter will be final and binding on all parties concerned. *****)

 

2007 இறுதித் தீர்ப்பில் இருந்த வரிகள் இதுதான். "…..If the Board finds that either Government of the party States namely Tamil Nadu, Kerala, Karnataka and Union Territory of Pondicherry do not co-operate in implementing the decision/direction of the Tribunal, it can seek the help of the Central Government." (  பக்கம் 235, காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு(2007) )

2007 தீர்ப்பு, 2018 வரைவு ஆவணம் இரண்டிலும் உள்ள  கடைசி வரிகளைக் கவனியுங்கள்.  மத்திய அரசின் "நாட்டண்மை" போக்கு நன்கு தெரியும்.

2007 தீர்ப்பில் சொல்லப்பட்டது என்னவென்றால், வாரியத்தின் தீர்ப்பை மாநிலங்கள் ஏற்காவிட்டால் வாரியமானது மத்திய அரசின் உதவியைக் கோரலாம் என்பதுதான்.

ஆனால், நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், "… வாரியத்தின் தீர்ப்பை மாநிலங்கள் ஏற்காவிட்டால் வாரியமானது மத்திய அரசின் உதவியைக் கோரலாம் என்றும் அப்படிக் கோரும் பட்சத்தில் அப்பிரச்னையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கு உண்டு என்றும் அந்த முடிவிற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கட்டுப்படவேண்டும்" என்றும் உள்ளது.

எளிமையாகப் புரிவதற்காக ஒரு எடுத்துக்காட்டு :

மேலாண்மை வாரியம் ஜீன்12 அன்று குறிப்பிட்ட டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்குத் தரவேண்டும் என்று உத்தரவிடுகிறது. தண்ணீரைத் திறக்க கர்நாடகம் மறுக்கிறது.

இப்படி ஒரு சூழ்நிலையில், பிரச்சனையைத் தீர்க்க மேலாண்மை வாரியம் மத்திய அரசின் உதவியை நாடினால், நேற்று மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு ஆவணப்படி பார்த்தால்  "… ஜீன்12 தானே தண்ணீர் திறக்கணும், 2019 அல்லது 2020 ஜீன்12க்கு தண்ணீர் திறந்துகொள்ளலாம்" என்று மேலாண்மை வாரிய அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிடுவதற்கு அதிகாரம் உள்ளது.

இதுபோதாது என்று, "… மேலாண்மை வாரியமானது மத்திய அரசு  அவ்வப்போது இடும் கட்டளைகளை ஏற்றுநடக்கவேண்டும்" என்று பொத்தாம் பொதுவாக பொடிவைத்துச் சொல்கிறது வரைவு ஆவணத்தின் பிரிவு 3,  பக்கம் 9:  பத்தி: 18. ( …18. The authority shall comply with any other directions that the central Government may provide time to time ). இதெல்லாம் 2007 இறுதித்தீர்ப்பில் சொல்லப்படாத வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

காவிரி மேலாண்மை வாரியத்தை, பா.ஜ.க. நாட்டாண்மை வாரியமாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் பிரிவுகள் 3.14, 3.18(வரைவு ஆவணத்தில்)  நீக்கப்பட்டு 2007ல் காவிரி தீர்ப்பாயம் கொடுத்த இறுதித் தீர்ப்பில் உள்ள வரிகள் சேர்க்கப்படவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோருகிறது.


"..தான் இட்டதே கட்டளை, தான் சொல்வதே சாசனம்" என்று இருக்கவேண்டும் என்ற மத்திய அரசின் நாட்டாண்மை நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டு தமிழக அரசு செயல்படவேண்டும்.

என்ன செய்யவேண்டும் தமிழக அரசு ?  மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசின் கை ஓங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் 2007 இறுதித் தீர்ப்பில் உள்ளது போன்று மேலாண்மை வாரியம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் அழுத்தமாக வாதத்தை முன்வைக்க வேண்டும்.

செந்தில் ஆறுமுகம், 
பொதுச்செயலாளர்,  சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80274, 87545-80270

Monday 7 May 2018

SPI PR | விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் நலன் கருதி, உடனடியாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கவேண்டும்! | 07 May 2018

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

பத்திரிகை செய்தி (07-05-2018)

தொடர்புக்கு : 87545 80270 / 87545 80274

 

விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் நலன் கருதி, உடனடியாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கவேண்டும்!

19 லட்ச அரசு ஊழியர்களின் 80000 கோடி செலவிடுவதால், மக்கள் நல திட்டங்களுக்காக 6000 கோடி மட்டுமே அரசு செலவிடுகிறது.


Tamilnadu government has openly publicized and accepted the truth that only 6% of SOTR(States own tax revenue) is being spent for peoples welfare and 70% of SOTR goes to TN government employees salary and pension. Satta Panchyat Iyakkam has been pointing out this macro economic point for more than 1 year and strongly demanded the government (In October 2017) not to accept the 7th pay commission recommendations. As government is spending 6% of SOTR for 7 Crore people, Tamilnadu government needs to do staff rationalization immediately. To increase the capital expenditure and spend more for common people's welfare schemes, SPI urges the government to reduce the salary of Government employees till the desired performance output is achieved.



தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்தை அக்டோபர் 2017இல், 20% வரை உயர்த்தியபொழுதே சட்ட பஞ்சாயத்து இயக்கம் கடுமையாக எதிர்த்தது என்பது அனைவரும் அறிந்ததே. 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஏற்று அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தினால், அரசுக்கு கூடுதலாக 14179 கோடி செலவாகும் என்றும் விவசாயிகள் & மக்கள் நல பணிகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் என்று அரசை கடுமையாக எச்சரித்தோம். செவிடன் காதில் சங்கு ஊதியது போல், பொருளாதாரத்தை பற்றி கவலைப்படாமல் கண்மூடித்தனமாக ஊழியர்களின் சம்பளத்தை அரசு உயர்த்தியது. இதனால் ஏற்பட்டு இருக்கும் நிதிச்சுமையை சமாளிக்க முடியாததனால், மாநில அரசின் பட்ஜெட்டில் இருந்து வெறும் 6% நிதி மட்டுமே மக்கள் நல பணிகளுக்காக அரசு செலவிடுகிறது என்று அரசே இன்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இருக்கிறது. (விளம்பரம் கீழே படமாக இணைக்கப்பட்டுள்ளது)

 

19 லட்ச அரசு ஊழியர்களுக்கு - 85%, 7 கோடி சாமானிய மக்களுக்கு - 15%.

மீன்வள மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள பத்திரிகை விளம்பரத்தில் 19 லட்ச ஊழியர்களின் சம்பளத்திற்காக  (12 லட்சம் அரசு ஊழியர்கள் + 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள்) 70% செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் 2017 சம்பள உயர்வுக்கு பிறகு இத்தொகை 80% தாண்டிவிட்டது. 

 

தமிழக அரசின் சொந்த நிதி வருவாய் (A) (2017-18)

93975 Crore

அரசு ஊழியர்களின் சம்பளம்(B)

45006 Crore

ஓய்வூதியம் (C)

20397 Crore

சம்பள உயர்வு (D)

14179 Crores

மொத்தம் (E) (E=B+C+D)

79582 Crores

Percentage (E/A)

85%

 

கடும் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் தமிழக அரசு விவசாய காப்பீடு தொகையை செலுத்தாததால், 2015இல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் காப்பீடை தர மறுத்தன. 2015இல் பயிர் காப்பீடு செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு தொகை ஜூலை 2017இல் தான் கிடைத்தது.  விவசாயிகள் தங்கள் அடுத்த வேலை உணவிற்காக போராடி கொண்டு இருந்த வேளையில் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான காப்பீடை 2 வருடம் இழுத்தடித்து தந்தது குறிப்பிடத்தக்கது. 1200 கோடி வறட்சி நிவாரணம் விவசாயிகள் வழங்க முடியாது என்று தமிழக அரசு தமிழக விவசாயிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு (2017இல்) செய்தபொழுது, அரசு ஊழியர்களுக்கு மட்டும் எப்படி 14179 கோடி சம்பள உயர்வு கொடுக்கமுடிந்தது?

 

சொந்த வருவாயில் 94% மேல் சம்பளத்திற்கும் வட்டிக்கும் போய்விட்டால், மக்கள் நல திட்டங்களுக்கும் மற்ற பணிகளுக்கும் வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிந்தும் மூர்க்கத்தனமான முடிவை எடுத்த அரசை என்ன சொல்வது? அரசு ஊழியர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததாலும், அவர்களின் வாக்கு வங்கியை தக்கவைத்து கொள்வதற்காக சாமானிய தமிழக மக்களை ஏமாற்றுவது சரியா?

 

அரசு ஊழியர்கள் சம்பள குறைப்பு சீர்திருத்த கமிட்டி:

தேவை இல்லாத அரசு பணியிடங்களை நீக்கவும், அரசு ஊழியர்களின் சம்பளத்தால் ஏற்படும் நிதிச்சுமையை கட்டுப்படுத்த ஆதி சேஷய்யா தலைமையிலான கமிட்டி அமைக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன் அரசு அறிவித்து இருந்தது. அறிவிப்பு வெளிவந்து 3 மாத காலமாகியும் அக்கமிட்டி இதுவரை அமைக்கப்படவில்லை. இக்கமிட்டியை உடனடியாக அமைத்து, அடுத்த நிதியாண்டிற்குள் தேவையில்லாத அரசு பணிகளை நீக்கி, அரசு ஊழியர்களின் சம்பளம் சொந்த வருவாயில் 50%க்குள் இருக்கும்படி அரசு பார்த்துக்கொள்ளவேண்டும். 2022ற்கு பிறகு நிர்வாக செலவிற்காக மாநில அரசின் சொந்த வரி வருவாயில் 25% மிகாமல் இருக்கவேண்டும் என்று புது சட்டம் கொண்டுவரவேண்டும். 

 

செயற்திறனுக்கேற்ப சம்பளம்: 

இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து அரசு அதிகாரிகளின் லஞ்ச-லாவண்யங்களை தொடர்ந்து வெளிக்கொணர்ந்து வருகிறோம். அதிகாரவர்க்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசியல்வாதிகளில் ஒரு பைசா கூட ஊழல் செய்யமுடியாது என்பதே யதார்த்த நிலை. பணி நிரந்தரத்துடன் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு, சாமானிய மக்களிடம் லஞ்சம் வாங்குவதால் அரசு ஊழியர்கள் மேல் மக்கள் கடும்கோபத்தில் உள்ளனர். வெறும் 5 அரசு பள்ளி மாணவர்கள் (சராசரியாக வருடத்திற்கு 10 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர்கிறார்கள்) மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருக்கிற இந்த அவலநிலையில் ஆசிரியர்கள் வானளாவிய சம்பளம் பெறுவது ஏற்றுக்கொள்ளமுடியாது.

 

மத்திய அரசின் ஊதிய குழுவின் பரிந்துரைகளையும்  நிராகரித்திவிட்டு செயற்திறனுக்கேற்ப சம்பளம் (performance based appraisal system and people satisfaction index) என்ற கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தி இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழவேண்டும். சிறப்பாக செயற்படும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஊழியர்களை விட 10% அதிகமாக ஊதியம் தரலாம்.

 

வறட்சியினால் கடும் நெருக்கடியை சந்தித்துவரும் விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களின் நிலையை கருத்தில்கொண்டு, வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த அரசு ஊழியர்களின் சம்பளத்தை உடனடியாக குறைக்கவேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசு ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டால், அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு ஊழியர்கள் தங்களை திருத்திக்கொள்ளாவிட்டால், அரசு பணிகளை அவுட்சோர்ஸ்

செய்ய தமிழக அரசு தயங்கக்கூடாது.



 

                   

                                                                               சிவ.இளங்கோ

தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

                                          Contact Number : 87545 80270 / 87545 80274