Wednesday 30 May 2018

SPI Press Release | அமைக்க மறந்துவிட்ட மத்திய அரசு! கேட்க மறந்துவிட்ட தமிழக அரசு!!

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

பத்திரிகை செய்தி (31-05-2018)

தொடர்புக்கு : 87545 80270 / 88704 72179

 

அமைக்க மறந்துவிட்ட மத்திய அரசு! கேட்க மறந்துவிட்ட தமிழக அரசு!!

 

200 ஆண்டு கால காவிரி பிரச்சனைக்கு, மே 18 அன்று உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்து ஒட்டுமொத்த தமிழினமே நிம்மதி பெருமூச்சு விட்டது. ஆனால் தமிழகத்திற்கு மீண்டும் ஒரு மாபெரும் அநீதியை இழைக்க மத்திய அரசு காத்து கிடைக்கிறது.

 

மே 18 அன்று காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்த உச்சநீதிமன்றம், கடைசிக்கு முந்திய பத்தியில் பின்வரும் உத்தரவை பிறப்பித்து இருந்தது.

 

20. In view of the above, we dispose of all the I.As., M.As. and the contempt petitions by this common order, on accepting the assurance given on behalf of the Union of India that the draft scheme will be taken to its logical end in accordance with law, with utmost dispatch. We hope and trust that the draft scheme reproduced in paragraph 12 above, is notified in the Official Gazette and given effect to with promptitude before the onset of the impending monsoon.

 

அதாவது, உச்சநீதிமன்ற தீர்ப்பை தர்க்கமான முடிவிற்கு மத்திய அரசு எடுத்து செல்லவேண்டும் என்றும், வரவிருக்கும் பருவமழை காலத்திற்கு முன்பு வரைவு திட்டத்தை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறது.

 

பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1ஆம் தேதி துவங்கும். இந்தாண்டு  மே 27ஆம் தேதியே துவங்கிவிட்டதாக மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இது தவிர, இந்தியாவில் நீராண்டு என்பது ஜூன்1 - மே 31 வரை  எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஜூன் 12ஆம் தேடி மேட்டூர் அணையை திறக்கவேண்டுமானால், மேலாண்மை ஆணையத்தை இந்நேரம் அமைத்திருக்கவேண்டும். ஆனால் ஜூன் 1இற்குள்  ஆணையம் அமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இப்பிரச்சனையை பற்றி எந்த கட்சிகளும் தமிழ்நாட்டில் பேசாதது மிகுந்த ஆச்சர்யம் அளிக்கிறது.

 

மேலாண்மை வாரியத்தை விரைந்து  அமைக்காமல் மெத்தனப்போக்கை கடைபிடித்துவரும் மத்திய பாஜக அரசையும், மாநில உரிமைகளை நிலைநாட்ட தவறிவிட்ட ஆளும் அதிமுக அரசையும் இயக்கம் மிக கடுமையாக கண்டிக்கிறது.தமிழ்நாட்டின் பொறுமையை மேலும் சோதிக்காமல் உச்சநீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, தமிழகத்திற்கு  அதன் நியாயமான உரிமைகளை பெற்று தருவதற்கு மத்திய அரசு ஆவண செய்யவேண்டும். 

 

செந்தில் ஆறுமுகம்,               

       பொது செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

KEY POINTS IN ENGLISH:

 

The union government of India is trying to betray the people of India once again by willfully defaulting the deadline given by the Supreme court of India to constitute the Kaveri river management authority. As per SC order, The authority has to be constituted before June 1,2018. The integrity of the Indian nation will be subjected to severe stress if the central government fails to act as per the Honourable SC's direction. SPI strongly urges the central govenment to constitute the authority within tomorrow. SPI also condemns the state government as it has failed to put pressure on Central government.


                                                                                                         


 


No comments:

Post a Comment