Friday 26 July 2019

SPI PR - லஞ்சம் கேட்ட VAO கைது - 26 July 2019

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

பத்திரிகை செய்தி (26-07-2019)

தொடர்பு எண்கள் :  88704 72177 / 87545 88222

லஞ்சம் கேட்ட VAO கைது

வீடியோ ஆதாரத்துடன் லஞ்சஒழிப்புத்துறையிடம் பிடித்து கொடுத்தது சட்ட பஞ்சாயத்து இயக்கம்.

 

லஞ்சம் ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட  சட்ட பஞ்சாயத்து இயக்கம், தமிழ்நாட்டில் நடக்கும் பல லஞ்ச-ஊழல் முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்திவருகிறது. அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி கிராமத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை பற்றி, லஞ்ச ஒழிப்புதுறையிடம் இயக்கத்தின் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இயக்கத்தின் புகாரின் அடிப்படையில், இன்று (26-07-2019) லஞ்ச ஒழிப்புத்துறை கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

திண்டுக்கல் மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர் சுப்பிரமணி  குடும்பத்தினர்ஜூன்  மாதத்தில், திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி கிராமத்தில் நிலம் வாங்கியுள்ளனர். 26 ஜூன்  2019 அன்று குஜிலியம்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்த பிறகு, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக (2 இடங்கள்) 27 ஜூன் 2019 அன்று கரிக்காலி கிராம நிர்வாக அலுவலர் துரைராஜை அணுகியுள்ளனர். ஒரு பட்டா பெயர் மாற்றத்திற்கு 6000 ரூபாய் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர், மொத்தம் 12000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்துதரமுடியும் என்று வெளிப்படையாக லஞ்சம் கேட்டுள்ளார்.

 

இதை தொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறையிடம் இயக்கத்தின் அமைப்பு செயலாளர் ஜெய் கணேஷ் மற்றும் சுப்பிரமணி சென்று முறையிட்டபொழுது (10-7-2019), வீடியோ ஆதாரம் வேண்டும் என்று லஞ்சஒழிப்புத்துறை கேட்டது. ஜூலை 12,2019அன்று மீண்டும் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று பட்டா மாறுதல் செய்ய கேட்டபொழுது, லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காது என்று தெளிவாக கூறியதை வீடியோ எடுக்கப்பட்டது. மேலும், உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்றும், பேரம் பேசி கடைசியாக 8000 ரூபாய் பெற்றுக்கொண்டு பட்டா பெயர்மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டார். இதை வீடியோ ஆதாராமாக லஞ்சஒழிப்புத்துறையிடம் கொடுத்த பிறகு நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தனர்.

 

லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் (Inspector Geetha – 8300005091 & DSP Nagarajan – 9498145647) இன்று மதியம் 2 மணி (26-07-2019) அளவில் கிராம நிர்வாக அலுவலரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலருக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தரவேண்டும் என்று இயக்கத்தின் சார்பாக லஞ்சஒழிப்புத்துறையை கேட்டுக்கொள்கிறோம். மேலும், இயக்க உறுப்பினர் சுப்பிரமணிக்கு உடனடியாக பட்டா பெயர் மாற்றும் செய்துதரவேண்டும் என்றும் இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

 

அ.ஜெய் கணேஷ்

மாநில அமைப்பு செயலாளர்

தொடர்பு எண் : 88704 72177


Friday 5 July 2019

சிகாகோவில் நடைபெறும் பெட்னா மாநாட்டில் தமிழியக்கம் பதிப்பித்த தமிழ்ப் பெயர்களின்  நூலை  தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்டார்.  

ஊடக அன்பர்களுக்கு வணக்கம்,

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு , அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32-வது  தமிழ் விழா மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா  ஆகியவை  அமெரிக்காவின் சிகாகோ நகரில்  மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. நான்கு நாள் நிகழ்ச்சியில் இரண்டாம் நாளான இன்று  வி.ஐ.டி  வேந்தர் மற்றும் தமிழியக்கத்தின் தலைவர் திரு.கோ.விசுவநாதன் அவர்களின் சீரிய முயற்சியில் உருவாகியுள்ள "சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்"  என்ற நூல்  வெளியிடப்பட்டது. 

46000 தனித்தமிழ் பெயர்களைக்  கொண்ட இந்த நூலை  வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் திருமதி.பவள சங்கரி ஆகியோர் தொகுப்பாசிரியர்களாகவும் , தமிழியக்கத்தின் பொருளாளர் புலவர் வே.பதுமனார் அவர்கள் பதிப்பாசிரியராகவும் பங்காற்றி மிகச்செம்மையாக வெளிவந்துள்ள  இந்த நூலை   "தமிழ் வளர்ச்சித்துறை மற்றும்  தொல்லியல்துறை"  அமைச்சர் திரு.  மாஃபா  பாண்டியராஜன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை வட  அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை (பெட்னா) தலைவர் திரு.சுந்தர் குப்புசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் , தொழிலதிபர் திரு.பால் பாண்டியன், ஹார்வார்ட் தமிழ் இருக்கை  மருத்துவர்  சு. சம்பந்தம் , செய்தி வாசிப்பாளர் திருமதி. நிர்மலா பெரியசாமி, எழுத்தாளர் திரு.லேனா தமிழ்வாணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.விடியல் சேகர் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். 

விழாவில் பேசிய தமிழியக்கத்தின் தலைவர் டாக்டர்  கோ.விசுவநாதன் அவர்கள், இன்றைய இளம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதைவிடப் பிறமொழிப் பெயர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகவும் கவலையளிக்கும் செயலாகும்.  ஒருவரது  பெயர் என்பது அந்த மனிதனின் பொருள் பொதிந்த அவனது தனித்துவமான அடையாளமாகும். பிறமொழியில் பொருளற்ற பெயர்களை வைப்பது அடையாளத்தைத் தொலைத்து நிற்கும் நிலையை ஏற்படுத்துகிறது. எனவே இந்த அவலத்தைப் போக்க இந்நூல் பெரிதும் உதவும்  என்று குறிப்பிட்டார். 

விழாவைத் தொகுப்பாசிரியர்  ச.பார்த்தசாரதி நெறிப்படுத்தினார். விழா ஆயத்துப்பணிகளைத்  தமிழியக்கத்தின் மாநிலச்  செயலாளர் மு. சுகுமார்  மேற்கொண்டார்.

 

Thursday 4 July 2019

Press note withdetails about Naganadhi River Restoration Project, Vellore

Dear Editor,

As much as water crisis is a reality it is equally important that we look for a solution to this largely man -made crisis. Recently the PM himself has extolled the public to come together to work towards water conservation. In his Mann ki Baat on June 30th among other projects he also mentioned about 20000 women in Vellore who have worked to bring the dying Naganadhi River back to life and we are happy to share that the project has been planned and executed by the Art of Living River Rejuvenation Project.
 
As a leading NGO The Art of Living has been working since 2013 in water conservation in Karnataka, Tamil Nadu and Maharashtra. The Naganadhi River Rejuvenation Project was initiated in 2014. The impact of four years of work is now visible in the form of augmented ground water supply and the region is sufficient in both drinking water and water for irrigation. This has been possible by the technical input and training provided by the Art of Living hydrological experts and volunteers.
The action plan for the work is drawn by expert hydrologist and geologist of the River Rejuvenation team after the initial survey of the topography using geospatial and satellite technology. Once the action plan gets the approval of the local governing bodied the ground work begins. The people participation is initiated largely by Art of Living teachers and volunteers who go door to door explaining the project and its benefits and enlisting the support of villagers.  They are trained in the technical know how of the construction of boulder checks dams and recharge wells apart from yoga, pranayam and meditation which is the corner stone of all Art of Living programs. In Vellore district the women showed interest in the water conservation work and many came forward in getting the job card under MNREGA. A fine example of public and private partnership the work done under MGNREGA has benefited the job card holders as well the district authorities in showcasing work done under the scheme. The women together have constructed 3500 recharge well which are a 20ft deep and 15 ft long and 6ft wide. No work is hard for them as one of them said that by doing this we leave a legacy for our future generation so we do not find it hard to do labor. Chitra a young villager says, "When I stand back and observe what we have done - all we women - I feel proud of all the hard work done. Working for the river rejuvenation project has transformed the underprivileged wives, mothers and sisters of the region into self-dependent women. The involvement in the projects has given the women in the region a sense of accomplishment, worth and motivation to be further involved in community initiatives. Having found their own footing, they can now move forward confidently to ignite the flame of inspiration in the hearts of other rural women, both in the region and throughout India.

The story of the Vellore women resonated all over the country especially when many parts are reeling under drought and water shortage.

A link to the original story that appeared in TOI


We would be happy to take you to the site and explain our methodology and you can interact with our experts. Do call me at 9884017767 to take this forward.

With best regards,

Rajalakshmi
9884017767
Media Co-ordinator

--
Regards,
Lakshmi
9880043327
Art of Living Bureau of Communication
Art of Living International Centre, Bengaluru