Saturday 16 December 2017

PRESS MEET- SATTA PANCHAYAT- பத்திரிகையாளர் சந்திப்பு - 16/12/2017 4.30 PM - ( Details)

  பத்திரிகை செய்தி                  16/12/2017

        கூட்டுறவு சங்க நிலவிற்பனையில்
          
ரூ.15 கோடி ஊழல்  
பின்புலத்தில் துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் & சேகர் ரெட்டி..??

சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.. குறைந்த விலைக்கு            விற்கப்பட்ட அரசு நிலத்தை மீட்டு உரிய விலைக்கு விற்க வேண்டும்..
             சட்ட பஞ்சாயத்து இயக்கம் வேண்டுகோள்....

         வேலூர் மாவட்டத்தில் உள்ள "வட ஆற்காடு மாவட்ட முன்னாள் படை வீரர்கள் தச்சு மற்றும் கருமார் தொழிலாளர் கூட்டுறவு சங்கம்" தாரா படவேடு கிராமம் சர்வே எண்.664/2B மற்றும் 665/5-ல் உள்ள87120 சதுர அடி நிலத்தினை 21.10.2014 மக்கள் குரல் நாளிதழில்  விளம்பரப்படுத்தி 30/10/2014 அன்று ஏலம் விடப்பட்டது27.11.2014-ல் கே.வாசு என்பவருக்கு ரூ.9,27,82,800-க்கு விளம்பரப்படுத்தப்பட்ட 40 நாட்களில் கதர் வாரிய கூட்டுறவு சங்க விதிகளையும், வாரிய மற்றும் அரசின் அனுமதியும் பெறாது காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் R.No:1064/2014 பதிவு செய்து கொடுக்கப்பட்டது(27.11.2014 அன்று). விற்பனை செய்யப்பட்டது என்பது அரசு மற்றும் கதர் வாரிய விதிமுறைகளை  மீறி ஒரு தனி நபருக்கு  வழி காட்டுதல்  விலைக்கும்(Guideline Value) குறைவாக விற்பனைசெய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இடத்தை வாங்கிய k.வாசு என்பவர் சேகர் ரெட்டியின் பினாமி என்று சொல்லப்படுகிறது. சேகர் ரெட்டிக்கும் துணை முதலமைச்சர் திரு.oபன்னீர்செல்வத்திற்கும் உள்ள "நல்லுறவுகுறித்து தமிழகம் அறியும்.    இந்த நிலவிற்பனை ஊழலின் பின்புலத்தில் சேகர் ரெட்டியும்.பி.எஸ்அவர்களும் உள்ளனர்.  இவர்கள் கூட்டு சேர்ந்து இந்த ஊழலை செய்துள்ளனர். இதற்கு  சம்மந்தப்பட்ட அரசுஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.

 

  காத்திருப்பில் கிடக்கும் திட்டங்கள்:

  தமிழ்நாடு  மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு உற்பத்தியாளர் கூட்டுறவு சம்மேளனம் தனது ஏக்கர் நிலத்தினை உரிய தீர்மானங்களுடன்  அரசு கைவினைப்பொருட்கள் கைத்தறிதுணி நூல் மற்றும் கதர்துறைக்கு மைய அரசின் மத்திய தொழில் பாதுகாப்பு துறைக்கு விற்பனை செய்யஅனுமதி கோரிபல வருடங்களாக  அரசின் அனுமதி கிடைக்கபெறாது உள்ளது.

மேலும்
 மேற்படி மாநில பனைவெல்ல கூட்டுறவு சம்மேளனத்தின் நிலம் விற்பனை செய்யப்பட்டு கிடைக்கும்தொகையில் தங்களது பணிக்கொடை மற்றும் நிலுவை ஊதியங்களை  பெறலாம் என  சுமார் 100க்குமேற்பட்ட  பனை வெல்ல கூட்டுறவு சம்மேளனம் பணியாளர்கள் ஏங்கி சிரமப்பட்டு கொண்டு உள்ளனர்மேற்படி விஷயம் வருட  கணக்கில் நடவடிக்கையில் இருந்தும்  அதற்கும் விடை கிடைக்காத நிலையில் வேலூர்மாவட்ட முன்னாள் படைவீரர்கள் தச்சு மற்றும் கருமார் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து அரசுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.

  வட ஆற்காடு மாவட்ட முன்னாள் படை வீரர்கள் தச்சு மற்றும் கருமார் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் பல வருடங்களாக எவ்வித உற்பத்தி மற்றும்  விற்பனை மேற்கொள்ளாது செயல்பட்டுவரும் நிலையில் இந்தசங்கத்திற்கு தேர்தல் நடத்தியது சட்டத்திற்கு புறம்பானது.அவசர கதியில் குறைந்த விலைக்கு k.வாசுக்கு 87120 சதுர அடி நிலம் விற்பனை செய்யப்பட்டதில் வாரிய  தலைமை அலுவலக அலுவலரும் வேலூர் உதவிஇயக்குநர் அலுவலக அலுவலரும் ஊழல் செய்துள்ளனர்இத்தகைய செயல் அரசிற்கு இழப்பு ஏற்படுத்தும் என்று தெரிந்தே அரசின் ஒப்புதல் பெறாமல் குறைந்த மதிப்பிற்கு மேற்படி நிலத்தினை விற்பனை செய்ததுஊர்ஜிதம் ஆகிறது.

  தாராபடவேடு அதே சர்வே எண்.665/5-ல் பிளாட் எண்.C63 (880 .அடி) மட்டும் ரூ.23,60,000/-க்கு(23 லட்சம்) விற்பனை செய்யப்பட்டுள்ளது. 880 .அடி நிலம் 23 லட்சத்திற்கு விற்கப்படுகிறது என்றால்.அடி விலை ரூ.2681. இந்த அடிப்படையில் பார்த்தால் விற்பனை செய்யப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் நிலமானது(87120 .அடிஉண்மையில் ரூ.23,35,68720(23கோடிக்கு விற்கப்பட்டிருக்க வேண்டும்அதாவது23 கோடி மதிப்புள்ள நிலம் 9 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதுஅதிலும் ரூ.1கோடி திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது). அரசு அதிகாரிகள் துணையோடுதனிநபர் ஒருவர் ஆதாயம் அடைவதற்காக  அரசுக்கு 15 கோடிஇழப்பு ஏற்பட்டுள்ளது என்பது ஆவணங்களின் அடிப்படையில் தெரியவருகிறது.

  அரசுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் அளித்த புகார்( 20/07/2017)
& 1 கோடி ரூபாய் வாசுவுக்கு திரும்ப வழங்கப்பட்டது 
   அரசு அதிகாரி ஓய்வு பெறும் தேதியில் பணியிடை நீக்கம்

இது
 தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் 20/07/2017 அரசு கைவினைப் பொருட்கள்  கைதறி துணி நூல் மற்றும் கதர் துறையின் செயலாளருக்கு புகார் கொடுத்தது துணை முதலமைச்சர் o.பன்னீர்செல்வம்,சேகர்ரெட்டி இந்த ஊழலில் சம்மந்தபட்டிருப்பதால் நடவடிக்கை எடுக்க  துறை செயலாளர் முன்வரவில்லைபிறகு உயர்நீதிமன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  நீதிமன்றஉத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறையும் துறை செயளாலரும் நடவடிக்கை எடுக்க முன்வந்து குறைந்த விலைக்கு விற்க காரணமான சேகர் ரெட்டியின் நண்பரும் துணை இயக்குனர் கதர் ) A.ரவி அவர்களை31/10/2017 அன்றும்விற்ற பிறகு 1 கோடியை நிலம் வாங்கிய k . வாசுவுக்கே திரும்ப கொடுக்க காரணமான N. நாகராஜன் உதவி இயக்குனர் ( திட்டம் மற்றும் வளர்ச்சி  ) அவர்களை 30/11/2017 அன்றும்ஓய்வு பெறும் தேதியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 

  ஆனால் இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்த, விற்பனை செய்ய அனுமதி வழங்கிய தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் திரு..பாலசந்திரன் I.A.S அவர்கள் மீதும் நிலம் வாங்கியK.வாசு அவர்களுக்கு ரூ1கோடி திரும்ப கொடுக்க அனுமதி வழங்கிய  தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தற்போதைய தலைமை செயல் அலுவர்  திரு . சுடலைகண்ணன் I.A.S  அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் . அதற்கு மூல காரணமான சேகர் ரெட்டி துணை முதலமைச்சர் O.பன்னீர்செல்வம் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட நிலத்தை மீட்டு அரசிடம் சேர்க்க வேண்டும் .பணியிடை நீக்கம் செய்யப்பட்ட A. ரவி துறை இயக்குனர் (கதர்அவர்களையும் N.நாகராஜன் உதவி இயக்குனர்  ( திட்டம் மற்றும் வளர்ச்சி ) இருவரையும் பணி நீக்கம் செய்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் அரசை வலியுறுத்துகிறேன்.                              

                                                                                            சிவ.இளங்கோ,

                                                                                                                                                                                 தலைவர்  , 87545 80270, 87545 80274                                                                          

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


​Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269