Thursday 10 November 2016

வங்கிகள் அதிகாலை முதல் இரவு வரை இயங்க வேண்டும்....Banks should function from 6am to 10pm...

Satta Panchayat Press Release:  Satta Panchayat demands: Banks should function from 6am to 10pm(atleast for a week) to facilitate exchanged of old notes.
- Senthil Arumugam, General Secretary
Satta Panchayat iyakkam, 87545-80270,87545-80274


                   ரூ.500..ரூ.1000. வரவேற்கிறோம்..
  வங்கிகள் அதிகாலை முதல் இரவு வரை இயங்க வேண்டும்..

                                      சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை...     
                                              
பத்திரிகை செய்தி ( 10-11-2016 )

கறுப்புப் பணத்தையும், போலி நோட்டுகளையும் ஒழிப்பதற்காக தற்போதுள்ள ரூ.500,ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்துள்ளதை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வரவேற்கிறது.
அதே சமயத்தில், ரூ.2000 நோட்டு அறிமுகப்படுத்தப்படுவது சரியான செயல் அல்ல என்று கருதுகிறது.


பிரதமர்
தனது  உரையில், இந்த மாபெரும் நடவடிக்கையால் மக்கள் தற்காலிகமாக சில இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என்றார். உண்மைதான், கிரெடிட் கார்டு, ஆன்லைன் பணப்பரிமாற்ற வழிமுறைகள் போன்றவற்றைப் பயன்படுத்தாத நடுத்தர,அடித்தட்டு மக்களுக்கு அடுத்த ஓரிரு வாரங்களுக்கு கடும் சிரமங்கள் ஏற்படும். கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது இம்முடிவுகளைச் செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள வங்கிகள், தபால் நிலையங்கள் போன்றவைகள் செயல்படும் விதத்திலும் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். கூட்ட நெரிசலைத் தவிர்க்க  வங்கிகள், தபால் நிலையங்கள் எவ்வளவு நேரம் கூடுதலாக வேலை செய்யப்போகிறது என்பது முக்கியம். ஒப்புக்கு ஓரிரு மணி நேரங்கள் கூடுதலாக வேலை செய்தால் கண்டிப்பாக கூட்டத்தை சமாளிக்க முடியாது. குறைந்தபட்சம் அடுத்த ஒருவாரத்திற்காவது காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை வங்கிகள் செயல்படவேண்டும்.(சனி,ஞாயிறன்று வங்கிகள் செயல்படும் என்பது வரவேற்புக்குரியது)

 

அதாவது, மக்கள் தாங்கள் செய்யும் வேலை அல்லது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதிகாலையிலோ அல்லது இரவு நேரத்திலோ ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளும் வசதி செய்துதரப்படவேண்டும். பலகோடி பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகளை, கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் சமூகவிரோதிகளை குறிவைத்து எடுக்கப்படும் இம்முடிவால் வீட்டில் குறைந்தபட்ச பணம் வைத்திருக்கும் அடித்தட்டு,நடுத்தட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் நிலைப்பாடு.

 

இலஞ்ச-ஊழலை ஒழிக்க வேண்டுமெனில் மிகப்பெரும்பாலான பணப்பரிமாற்றங்கள் வங்கிகள் மூலம் நடக்கவேண்டும் என்று விவாதிக்கப்பட்டு வரும் சூழலில்  ரூ.2000 நோட்டை அறிமுகப்படுத்தப்படுவது முரணாக உள்ளது. இலஞ்ச-ஊழலில் ஈடுபடுபவர்கள் பணத்தைப் பதுக்குவதற்கு இது எளிய வழியை ஏற்படுத்திக்கொடுக்கும். 1000ரூபாய் நோட்டே இல்லை எனும் சூழல் உருவாகியுள்ள நிலையில் புதிதாக 2000ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்படுவது தேவையில்லாதது, எதிர்விளைவை உருவாக்கக் கூடியது. ஆகவே, ரூ.2000 நோட்டு அறிமுகப்படுத்தப்படுவதை மறுபரிசீலனை செய்யவேண்டும்
                                                                                                                              
                                                                                                                                            

செந்தில் ஆறுமுகம்
மாநில பொதுச்செயலாளர்
87545-80274, 87545-80270

No comments:

Post a Comment