Friday 25 September 2015

மதுவிலக்குப் போராட்டத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள்..

சட்டசபையில் மதுவிலக்கை அறிவிக்கக் கோரி
                 33 வது நாள் உண்ணாவிரதம்
                          
25.09.2015


      மதுவிலக்குப் போராட்டத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள்


இலவசங்களை அள்ளித்தெளிக்க, தேர்தலில் ஓட்டுக்குப் பணத்தை வாரியிறைக்க ஆட்சிக்கு,கட்சிக்கு பல ஆயிரம் கோடி பணம் வேண்டும். அதற்கு, மதுவிற்பனை தங்கு தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே இன்றைய ஆளுங்கட்சியின் அணுகுமுறையாக இருந்து வருகிறது. மக்கள் நலனைவிட, முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், தான் நடத்தும் "மிடாஸ் சாராய உற்பத்தி ஆலை" மூலம் கிடைக்கும் 11000 கோடி வருமானமே முக்கியம் என்ற அடிப்படையிலேயே மதுவிலக்கு குறித்து வாய்திறக்க மறுக்கிறார் முதல்வர்.டாஸ்மாக் முற்றுகை, பொதுநலவழக்கு, ஆர்ப்பாட்டங்கள் என மதுவிலக்கு கோரி பலகட்டப் போராட்டங்கள் நடத்தியுள்ள சட்ட பஞ்சாயத்து இயக்கம், சட்டசபையில் மதுவிலக்கை அறிவிக்கக்கோரி கடந்த 33 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவருகிறது.

அடுத்த கட்ட செயல்திட்டங்கள்:

1.
மதுவிலக்கை அறிவிக்காத அ.தி.மு.கவை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்போம்,தோற்கடிப்போம்:


தமிழகத்தில் மிகப்பெரும்பாலான அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மதுவிலக்கை அறிவிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளபோது சட்டசபையில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும், மதுவிலக்கு என்பது தேர்தல் பிரச்னையாக, ஓட்டுக்களைப் பாதிக்கும் பிரச்னையாக மாறாது என்ற நம்பிக்கையிலேயே முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதுவிலக்கை அறிவிக்க மறுக்கிறார். இது உண்மை நிலையில்லை என்பதை நிரூபிக்கும்விதமாக நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலில் மதுவிலக்கை அறிவிக்காத அ.தி.மு.க.வைப் புறக்கணிக்க வேண்டும் ; தோற்கடிக்க வேண்டும் என்று பொதுமக்களை சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது. அதேசமயம், எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஆதரவு தரவில்லை, வாக்களிக்கக் கோரவில்லை என்பதைத்  தெரிவித்துக்கொள்கிறது.

2. மாவட்டங்களில் "மதுவிலக்கு பேரணி":

மதுவிலக்கு கோரிக்கை என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை என்பதை வலுவாக வெளிக்காட்டும்விதமாகவும், வரும் தேர்தலில் மதுவிலக்கை அறிவிக்கும் கட்சிக்கே வாக்களிப்போம் என்பதைப் பொதுமக்கள் தெரிவிக்கும்விதமாகவும் மாவட்டங்களில் "மதுவிலக்குப் பேரணி" நடத்தப்படும்.


3. "மதுக்கடைக்குப் பூட்டு; அதற்கு எனது ஓட்டு"
                                 வீடு வீடாய்ப் பிரச்சாரம்:

பொதுமக்களை வீடு, வீடாய் சந்தித்து மதுவிலக்கை அறிவிக்கும் கட்சிகளில் உங்களுக்குப் பிடித்தமானோருக்கு வாக்களியுங்கள், மதுவிலக்கை அறிவிக்காத அ.தி.மு.கவைப் புறக்கணியுங்கள் என்று தொடர் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.


4. நீதிமன்றத்தை அணுகி சட்ட ரீதியிலான போராட்டம்:

டாஸ்மாக் மேல்மட்ட நிர்வாகம், டாஸ்மாக் கடைகள்,  பார்களில் ஏராளமான முறைகேடுகள், ஊழல்கள் நடக்கின்றன. இதுதொடர்பாக நாங்கள் தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலமாக பெற்றுள்ள ஆவணங்கள், ரகசிய கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்  நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்துப் போராட உள்ளோம்.

விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள ஏராளமான டாஸ்மாக் கடைகளை மூடுவதற்காக நீதிமன்றத்தில் வழக்குதொடுக்க உள்ளோம்.


5. "அம்மா – சாராயக் கடை":

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல திட்டங்களுக்கு "அம்மா" திட்டம் என்று பெயர் வைக்கப்படுகிறது. அந்த அடிப்படையில், மக்களைக் கொன்று 30 ஆயிரம்கோடி ரூபாய் சம்பாதித்துத் தரும் டாஸ்மாக் கடைகளுக்கு "அம்மா-சாராயக் கடை" என்று பெயர் வைப்பதே பொருத்தமானது என்பதை வலியுறுத்தி 23-09-2015 அன்று மதுரையில் போராட்டம் நடத்திக் கைதானோம். இப்போராட்டங்கள் தமிழகமெங்கும் தொடரும்
                     

                              செந்தில் ஆறுமுகம்,
                                       மாநிலப் பொதுச்செயலாளர்,
8754580274

No comments:

Post a Comment