Thursday 5 May 2016

மதிப்பிற்குரிய செய்தி ஆசிரியர் அவர்களுக்கு

மதிப்பிற்குரிய செய்தி ஆசிரியர் அவர்களுக்கு

நமது இந்திய திருநாட்டில் சாதிய வன்கொடுமைகளையும் தீண்டாமை செயல்களையும் பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை முற்றிலும் ஓழிக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் இன்றைய தருணத்தில் எங்களது ஊராகிய இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில் உள்ள எஸ். தரைக்குடி கிராமத்தில் ஊர் விலக்கிவைத்தல், நன்மை தீமைகளில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது, வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல் செய்தல் கூடாது போன்ற வன்கொடுமைகள் தற்போதும் நடந்து வருகிறது. இக்கொடுமையினை காவலதுறையிலும் அரசு நிர்வாக துறையிலும் பலமுறை புகார் செய்தும் கண்டும் காணாமல் உள்ள நிலைதான் மிச்சம், எனவே இதை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்ல தங்களின் மேலான ஓத்துழைப்பை விரும்புகின்றோம். நடந்த நிகழ்வுகளின் விபரம் வருமாறு:

இஸ்லாம் மார்க்கத்திலும் பல பிரிவுகள் உள்ளது என்பதனை தாங்கள் அறீவீர்கள்.

எனது தம்பி அதில் ஒரு பிரிவில் நம்பிக்கையுடன் செயல் பட்டுவருகின்றான்.

கடந்த 22.-10.2015 அன்று எங்கள் தந்தை இறுதி சடங்கின் போது ஊர் முஸ்லிம் ஜமாத்தார்கள் என் தம்பியை இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அதற்கு நான் சம்மதித்தால் தான் இறுதிச்சடங்கை நடத்த விடுவோம் என்று என்னிடம் தகராறு செய்தார்கள். தம்பியை திருப்பி அனுப்பிவைத்து விட்டு என்னிடம் கட்டாயப்படுத்தி எழுதிவாங்கி கொண்டு காலம் தாழ்த்தி தான் சடங்குகள் நிறைவேறியது. அத்தோடு இல்லாமல் மீண்டும் உன் தம்பி ஊருக்கு வரக்கூடாது, பெற்ற தாயை பார்க்க வரக்கூடாது. நீ உன் தம்பியிடம் எந்த வித உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று என்னை கட்டாயப்படுத்தினார்கள். அதற்கு நான் உடன்பட மறுத்ததினால் எனது குடும்பத்தையும் ஊர் விலக்கி வைத்து

யாரும் தொடர்பு வைத்துகொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார்கள்.  

அதை எதிர்த்து நாங்கள் காவல் துறையிலும், வருவாய் துறையிலும் புகார் அளித்தோம். அதன் மீது இதுநாள் வரை எங்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கணவனை இழந்த பின் இஸ்லாம் மார்க்கத்தின் படி, நான்கு மாதம் தவனைக்காலம் முடிவடைந்து எங்களின் தாயார் வீட்டிற்கு வெளியே வந்துள்ள சூழ்நிலையில் 3.05.2016 அன்று ஊர் முஸ்லிம் ஜமாத்தார்கள் மீண்டும் எனது தாயார், தங்கை குடும்பத்தினர் மற்றும் அத்தை குடும்பத்தினர் ஆகிய மூன்று குடும்பத்தையும் ஊர் விலக்கிவைத்து ஊரில் உள்ள மளிகை கடை.கள், மற்றும் ஹோட்டல்களில் அத்தியாவாசிய பொருட்கள், உணவு பொருட்கள் விற்ககூடாது என கட்டுப்பாடு வைத்துள்ளார்கள் மேலும் எங்களுக்கு கட்டுப்பட்டு நாங்கள் கூறியபடி தான் வாழ வேண்டும் இல்லையெனில் இங்கு நிம்மதியாக வாழவிடமாட்டோம் என்று அச்சுறுத்தியும் மிரட்டியும் வருகிறார்கள்.

இச்செயல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது, தனிமனித சுதந்திரத்திற்கு விரோதமானது.

ஆகவே இந்த வன்கொடுமையிலிருந்து எங்களின் குடும்பத்தினரை பாதுகாக்கவும், அரசாங்க நிர்வாகத்தினரின் கவனத்துக்கு கொண்டு செல்ல தங்களின் ஊடகம் வழியாக உதவியை செய்து பின் வரும் இந்திய சமூகம் இதுபோன்ற அவலங்களை சந்திக்காமல் பாதுகாக்க கேட்டுக் கொள்கின்றோம்

தங்களின் உயரிய ஓத்துழைப்பை நம்பி நிற்கும்

அபூபக்கர் மற்றும் குடும்பத்தார்கள் 8015716952 / 9176448388

எஸ். தரைக்குடி போஸ்ட், கடலாடி தாலுகா, இராமநாதபுரம் மாவட்டம் 623135

வியாபார விலாசம்: 1, சூரியபிரகாசம் தெரு, கிருஸ்னாபுரம், அம்பத்தூர் ஒ டி, சென்னை -600053

No comments:

Post a Comment