Thursday 5 January 2017

Survey about Sasikala-Results..சசிகலா...ஏகோபித்த ஆதரவு என்பது கட்டமைக்கப்பட்ட மாயை..

சசிகலா – முதல்வராவதற்கு 97% மக்கள் எதிர்ப்பு…   

 ஆளுங்கட்சி பொதுச்செயலாளர் ஆனதற்கு 94% மக்கள் எதிர்ப்பு…
 ஏகோபித்த ஆதரவு என்பது கட்டமைக்கப்பட்ட மாயை

       

                     சட்ட பஞ்சாயத்து இயக்கக்
              கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு
                             05-01-2017

                                 87545-80270, 87545-80274


முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பின்னர் சசிகலா அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும், அவரே முதலமைச்சர் ஆகவேண்டும் என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கருத்தறிவதற்காக இணைய தளம் மூலம் சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது.  அதிமுக பொதுக்குழு நடப்பதற்கு முந்தைய நாளான டிசம்பர் 28, 2016 முதல் ஜனவரி 1, 2017 வரை நடத்தப்பட்ட இக்கருத்துக்கணிப்பின் முடிவுகளை இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடுகிறோம். ( இணைப்பில் விரிவான விவரங்கள் )


இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளிலிருந்து சசிகலா அவர்களுக்கு கட்சியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு இருப்பதாக வெளியான செய்திகள் திட்டமிட்டு, கட்டமைக்கப்பட்ட ஒரு மாயை என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரியவருகிறது. இதையெல்லாம் மதிக்காமல் சசிகலா அவர்கள் முதலமைச்சராக ஆசைப்படுகிறார்  என்றால் அது ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் அநீதி; ஓட்டுப்போட்ட மக்களுக்கு செய்யும் பெருந்துரோகம் என்பதே இயக்கத்தின் கருத்து.


                  கருத்துக்கணிப்பு குறித்த விவரங்கள்…

கருத்துக்கணிப்பு துவங்கிய நாள்:  28-12-2016
கருத்துக்கணிப்பு முடிந்த நாள்:  01-01-2017
கருத்துக்கணிப்பு வழிமுறை: இணைய தளம் மூலமாக


சென்னை, கோவை, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து அதிகம் பேர் வாக்களித்துள்ளனர். மேலும், நீலகிரி, பெரம்பலூர், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் குறைவான வாக்குப்பதிவாகி உள்ளது. 20 வயது முதல் 40 வயது வரை 72 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்..         


பங்கு பெற்றவர்கள்: 3090                      

பங்கேற்ற மாவட்டங்கள்: 32 (தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும்)

சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் - எதிர்ப்பு    :  2916 ( 94% )

ஆதரவு : 174 ( 6% )

சசிகலா முதலமைச்சர் ஆவதற்கு 
எதிர்ப்பு : 2984 ( 97% )

ஆதரவு: 106 ( 3% )


           சட்ட பஞ்சாயத்து இயக்கம்
             87545-80270, 
87545-80274






சிவ.இளங்கோ,                          

                                                              தலைவர்


                                                                   87545-80270, 87545-80274









​கருத்துக்கணிப்பு  லிங்க்:  https://goo.gl/d1B3Sw

No comments:

Post a Comment