Monday 13 March 2017

Delhi university students press meet.. photo, press release.. காலாவதியான பாடத்திட்டத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.. டெல்லி பல்கலைக்கழக மாணவிகள் கோரிக்கை..


English representation given to School education minister, School education secretary is attached..

Senthil Arumugam, 8754580274

 மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு
  காலாவதியான பாடத்திட்டத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.. காலத்திற்கேற்ற புதிய பாடத்திட்டத்தைக் கொண்டுவர வேண்டும்...

 

           டெல்லி பல்கலைக் கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்கள் தமிழக  

               பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு வேண்டுகோள்...


                                        
பத்திரிகைச் செய்தி 13-03-2017 )

 

வணக்கம்,

நாங்கள் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் எங்களுக்கு நேர்ந்த அவமானத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்எங்கள் வகுப்பறையில் "பட்ஜெட்குறித்தான விவாதம் ஒன்று நடைபெற்றதுஅதில், CBSE வழியில் பயின்ற மாணவர்கள் சிறப்பாக பதிலளித்தார்கள்தமிழகத்தில் படித்த எங்களால்(State board) எந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியவில்லைஇந்த சம்பவத்தினால் தமிழக மாணவர்கள் குறித்த அபிப்ராயம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

 

காலத்திற்கேற்ப புதிய பாடப்பகுதிகளைச் சேர்க்காததுமனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை போன்றவையே இதற்குக் காரணம் என்று நாங்கள் உணர்கிறோம்.

மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் நாங்கள் போட்டித்தேர்விற்குச் செல்லும்போதோபிற மாநிலங்களுக்குச் சென்று படிக்கும்போதோ எங்களால் CBSE போன்ற பாடத்திட்டத்தில் படித்துவந்தவர்களோடு போட்டியிடமுடியவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

 

இதனைக் கருத்தில்கொண்டும் மாநிலப்பாடத் திட்டத்தில் படிக்கும் எங்கள் தம்பிதங்கைகளின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டும் உடனடியாக தமிழக பள்ளிக்கல்வித்தரத்தினை மேம்படுத்த வேண்டுகிறோம்.  குறிப்பாக பாடப்பகுதிகளை(Syllabusகாலத்திற்கேற்றவாறு உடனடியாக மாற்றியமைக்க வேண்டுகிறோம்

 

 

இதுதொடர்பாக கல்வித் துறை அமைச்சர்செயலாளர்பள்ளிக்கல்வித்துறை இயக்குனர அதிகாரிகளைச் சந்தித்து இன்று மனு கொடுத்துள்ளோம்அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்கிட்டத்தட்ட ஒருகோடி மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்வி முறை தொடர்பான விவகாரத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.


தேவதர்சினி & ஹனிசா

டெல்லி பல்கலைக்கழக மாணவிகள்...


- ஒருங்கிணைப்பு: சட்ட பஞ்சாயத்து இயக்கம்,

செந்தில் ஆறுமுகம், பொதுச்செயலாளர்  8754580274




No comments:

Post a Comment