Sunday 11 February 2018

ஜெயலலிதா படம் : சட்டசபைக்குக் கரும்புள்ளி... சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்டனம், பிரச்சாரம்...

ஜெயலலிதா படம் : சட்டசபைக்குக் கரும்புள்ளி

-           சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்டனம்







 

அவசர அவசரமாக சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்படவுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட பிரதான குற்றவாளியின் படத்தை சட்டசபையில் தவறான முன்னுதாரணம். ஜனநாயகத்திற்கு விரோதமானது. உச்சநீதிமன்றத்தை அவமதிப்பு போன்றது. ஆகவே, சட்ட சபையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறக்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி சட்ட பஞ்சாயத்து இயக்கம் "கரும்புள்ளிப் பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளது.

60 ஆண்டுகள் நடந்து வைரவிழா கண்ட பாரம்பரியமிக்க தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் இருப்பது ஒரு கரும்புள்ளியே என்பதை வெளிப்படுத்தும்விதமாக இப்பிரச்சாரத்தை முன்னெடுக்கிறோம்.  பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், லஞ்ச-ஊழல் எதிர்ப்புப் போராளிகள் அனைவரும் தங்களது முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப்பில் வெள்ளைப் பின்புலத்தில் ஒரு கருப்புப்புள்ளி இருப்பதுபோன்ற படத்தை தங்களது சுயவிவரப்படமாகவும், முகப்புப்படமாகவும்( Cover pic, Profile pic, Display pic) மாற்றி  சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்படுவதற்கு ஜனநாயக முறையில், அறவழியில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

ஜெயலலிதா குற்றவாளியே இல்லை என்ற வாதம் குறித்து…

பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்குபேர் தண்டிக்கப்பட்டனர்(குன்ஹா தீர்ப்பு) . ஜெயலலிதா(1), சசிகலா(2), இளவரசி(3), சுதாகரன்(4). இவர்கள் மீது சுமத்தப்பட்ட முக்கியக்குற்றச்சாட்டு "கூட்டுச்சதி(120(பி))". ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து ஊழல் செய்வதற்கு வழிவகுத்துக்கொடுக்கிறார். கொள்ளையடித்த பணத்தை பதுக்குவதற்கு, பல்வேறு இடங்களில் முதலீடு செய்வதற்கு மற்ற மூவரும் பரபரப்பாக உதவி(!!) செய்தனர். இப்போது 2,3,4 தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றனர். 1 ஆகிய ஜெயலலிதா இல்லாமல், அதாவது பொதுஊழியராக-முதல்வராக இருந்த ஜெயலலிதா இல்லையென்றால் 2 சசிகலா உள்ளிட்ட மூவர் எப்படி கூட்டுச்சதி செய்யமுடியும்ஒருவரியில் சொல்வதென்றால், "... களவாணியே இல்லையென்றால் கூட்டுக்களவாணி  எங்கிருந்து வருவான்"?? ஆகவே, ஜெயலிதா தண்டிக்கப்பட்டவர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. அவர் இறந்துவிட்டதால் அவரை தண்டிக்கமுடியவில்லை அவ்வளவுதான். 

பேருந்து நிலையத்திலும், காவல் நிலையத்திலும் படம்:  படத்தை மாட்டிவைத்திருப்பது எல்லா இடங்களிலும் புகழுக்குரியது அல்ல. பேருந்து நிலையத்திலும், காவல் நிலையத்திலும் படம்: சிலரின் படத்தை மாட்டி வைத்திருப்பார்கள்  "ஜாக்கிரதை திருடர்கள்" என்ற தலைப்பிட்டு... அங்கெல்லாம், அவர்களின் படம் இருப்பதால் அவர்கள் புகழ்பெற்றவர்களாகிவிடமாட்டார்கள். நீங்கள் சட்டமன்றத்தில் திறக்கப்போகும் படத்தை காவல் நிலையத்திலும், பேருந்துநிலையத்திலும் மாட்டிவைக்கப்பட்ட படங்களுள் ஒன்றாக நாங்கள் கருதுகிறோம்.

 

சட்டசபையில் எங்கு மாட்ட வேண்டும் படத்தை..?

ஜெயலலிதா படம் சட்டசபையில் திறக்கப்படுவது தவறான முன்னுதாரணம் என்பது நம் கருத்து. இருந்தபோதும், அதிமுக அதைச் செய்யத்தான் போகிறது. ஆகவே, ஆளுங்கட்சிக்கு ஒரு கோரிக்கை. இப்படித்தான் முதலமைச்சர்கள் இருக்கவேண்டும் என்று நேர்மையின் சிகரங்களாக வாழ்ந்த ஓமந்தூரார்,காமராஜர் போன்றவர்களின் படத்தை ஒருபக்கமும்; "...இவர் போல் பொதுச்சொத்தை கொள்ளையடித்து, சர்வாதிகார ஆட்சி நடத்தக்கூடாது" என்பதற்கு உதாரணமாக ஜெயலலிதா படத்தை மறுபக்கமும் மாட்டி வையுங்கள் என்பதே கோரிக்கை.

 

செந்தில் ஆறுமுகம்,  மாநில பொதுச்செயலாளர், 
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 87545-80274,





No comments:

Post a Comment