Friday 28 September 2018

தேர்தல் மோசடி செய்த தி.நகர் அ.தி.மு.க எம்.எல்.ஏ சத்யநாராயணாவின் எம்.எல்.ஏ. பதவி பறிக்க வேண்டும் - சட்ட பஞ்சாயத்து இயக்கம் பத்திரிகைச் செய்தி

                        சட்ட பஞ்சாயத்து இயக்கம் பத்திரிகைச் செய்தி
                                                          
(28-09-2018)

ஒரேசமயத்தில்  தமிழகத்திலும், ஆந்திராவிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து
  தேர்தல்  மோசடி செய்த தி.நகர் அ.தி.மு.க எம்.எல்.ஏ  சத்யநாராயணாவின் எம்.எல்.ஏ. பதவி பறிக்க வேண்டும்.                                         - சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை

1.      மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, பிரிவு 17 ன் படி எந்தவொரு குடிமகனும் தன்பெயரை, ஒன்றிற்கு மேற்பட்ட தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது. அப்படிச் சேர்த்தால், அது அச்சட்டப்பிரிவு 31ன்படி  ஒராண்டு சிறைதண்டனைக்குரிய குற்றமாகும்.

2.      இதனை அறிந்திருந்தும், அதிமுகவைச் சேர்ந்த தி.நகர் தொகுதி சட்ட மன்ற   உறுப்பினரான சத்யநாராயணா தமிழகத்தில் இரண்டு இடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளார்( IOR1522374, LMG4367306 என்ற எண்கள் கொண்ட வாக்காளர் அடையாள அட்டைகள் இணைப்பில்).
 

3.      தமிழகத்தில் இரண்டு இடத்தில் பெயரைச் சேர்த்ததே குற்றம் என்றுள்ள நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி தொகுதி வாக்காளர் பட்டியலிலும் தன் பெயரை மூன்றாவதாகச் சேர்த்துள்ளார்( வாக்காளர் அடையாள அட்டை எண்:AYM2119387). திருப்பதி தாசில்தார் இதனை உறுதி செய்த கடிதம் இணைப்பில்

 

4.      அரசியல் சாசனத்தையும், மற்ற சட்டங்களையும் மதித்து நடந்து, அதனைப் பாதுகாக்க வேண்டிய ஒரு சட்டமன்ற உறுப்பினரே, சட்டத்தைத் துச்சமெனத் தூக்கியெறிந்து குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார். ஆகவே, தி.நகர். எம்.எல்.ஏ. சத்ய்நாராயணாவை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்று கோரி, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு 20-09-2018 அன்று புகார் மனு அனுப்பியுள்ளோம்( இணைப்பில்)

 

5.      எங்களின் புகார் மனு மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், நீதிமன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் வழக்கு தொடுக்க உள்ளது.

இணைப்பில் ஆவணங்கள்...


சிவ.இளங்கோ,
                
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 87545-80270

No comments:

Post a Comment