Friday 28 September 2018

Sri Sri's article on Non- Violence: A Dream for a World Without Violence

Dear Editor,

On 2nd October, Sri Sri will be leading a Masterclass in Non-Violence at the World Summit on Countering Violence and Extremism. This event is named as Non Violence Peace Summit 2018. National and International delegates like global thinkers, policy makers, law enforcement officials, activists, lawmakers and scholars will be part of the conference.

In this context attached please find the article on Non Violence by Sri Sri.


A Dream for a World Without Violence

Gurudev Sri Sri Ravi Shankar

Deep within, we aspire for that which is our true nature and deep within, everybody wishes to be happy and joyful. Yet, the world is caught in the grip of violence. Nearly every nation is affected by violence and terrorism today. In order to bring peace to our world, we have to understand what the root causes of violence are. When our joyful nature gets covered with stress, our thoughts, speech and eventually our actions are distorted. In extreme cases, this distortion becomes a disorder. Most of the incidents of shootings that we hear about in America, including suicides, involve people with such a disorder. The need today is for any method to relieve stress from society and many studies indicate that yoga and meditation can help.

Apart from individual incidents of violence, another kind of violence happens on a larger, more organized scale, which arises out of religious fanaticism. They are not open to any dialogue and violence is their only tool. To restrain this ideology, puritanism among religious leaders must be shunned. Instead, they must play a role in imparting multi-religious and multi cultural education. When people are given a healthy exposure to the wisdom in other religions, especially from a young age, they will not harbor prejudices against them.

A third kind of violence involves rebel groups fighting for independence or other rights. Wherever there is a lack of social justice and humane leadership, there is rebellion in society. It begins with a mission, a cause but eventually erupts as terrorism and terrorism is blind. It has led neither to economic progress nor to justice anywhere in the world. However, these so-called extremists are full of passion, sincerity and a fierce sense of sacrifice. Their readiness to put their life on the line for a cause is commendable. I have met several extremist groups over the years with the intention of bringing them back to the mainstream. Our experience has been that if these people are approached with an open mind, they are willing to engage in dialogue and share their side of the story. When they gain confidence in the justice and humanness in society, they can turn around and contribute a lot to society. Their rehabilitation and re-integration in the mainstream is quicker and more effective if the establishment supports it, like in the case of FARC in Colombia*.

The number of people who cause violence in the world is proportionately very small. However, news about their activities dominate headlines. I would say the silence of good people is more responsible for this than the violence of the others. Those who are at peace within themselves have a responsibility to bring peace around them. Sensible people everywhere must get together and empower each other to take greater responsibility to better the world.

If there is a will, it is possible to have peace at all levels, from individual to global. Never before has the collective will for peace in the world been stronger and never before have the means been so available. A world without violence is a dream worth making every effort for.

* For 50 years, a civil conflict raged on in Colombia between the government and rebel group FARC which claimed more than 220,000 lives. In June 2015, with consent from then Colombian president, Juan Manuel Santos, Sri Sri met top commanders of the Revolutionary Armed Forces of Colombia (FARC). Sri Sri convinced the FARC about the strategic implications of the Gandhian principles of non violence. After a three day long dialogue, FARC announced in a joint press conference with Sri Sri that they would adopt Gandhian ways of non-violence and announced a unilateral ceasefire within days which was never breached after and went on to become a milestone in the Colombian peace process. Sri Sri and The Art of Living have continued to work with victims of both sides of the conflict. In September, The Art of Living facilitated a forgiveness meeting between FARC leaders and the families of 12 deputies who were kidnapped and finally killed by FARC. 

Gurudev Sri Sri Ravi Shankar will be leading a Masterclass in Non-Violence at the World Summit on Countering Violence and Extremism on October 2nd, marking Mahatma Gandhi's 149th Birth Anniversary.

--------

வன்முறையின் ஆழத்திற்குச் செல்லுதல்

  குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள்

நமது உண்மையான இயல்பாகிய மகிழ்ச்சி, ஆனந்தம் இவற்றையே உள்ளத்தின் ஆழத்தில்  வேண்டுகிறோம். ஆயினும் உலகம் வன்முறையின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது.  அநேகமாக அனைத்து நாடுகளும் பாதிக்கப் பட்டு சில வன்முறையின் விளிம்பிற்கே வந்து  விட்டன. முன்னைப் போன்றல்லாது இன்று மோதல் அல்லது வன்முறை நிகழ்வு ஒரு  இடத்தில் இருந்தால் உலகம் முழுவதிலும் அந்த சீற்றம் பரவி விடுகிறது. வன்முறையை  ஏற்படுத்துபவர்கள் சிறிய அளவில் இருந்தாலும் அவர்கள் தலைப்பு செய்தி இடத்தை  ஆக்கிரமித்துக் கொண்டு விடுகின்றனர். வன்முறை செய்பவரை விட நல்ல விஷயங்களின்  மற்றும் நல்லவர்களின் மௌனம் இதற்குப் பெரிதும் காரணமாகிறது. நமது உலகில்  அமைதியை ஏற்படுத்தும் பொருட்டு, எது வன்முறைக்கு காரணம் என்பதை நாம் புரிந்து  கொள்ள வேண்டும்.  வன்முறையை மூன்று விதமாக பிரித்துக் கூறலாம். தனிப்பட்ட மனிதன் என்னும் நிலையில்  மனம் அழுத்தத்தால் பாதிக்கப் படும்போது எண்ணங்கள், பேசும் சொற்கள் பின்னர் செயல்கள்  உருக்குலைந்து விடுகின்றன. அது அளவுக்கதிகமான நிலைக்குச் செல்லும்போது இந்த  உருக்குலைந்த நிலை சீர்குலைவிற்கு வழி வகுக்கிறது. அமெரிக்காவில் நாம் கேள்விப்படும்  துப்பாக்கிச் சூடுகள் தற்கொலைகள் அத்தகைய சீர்குலைவுக்காளான மக்களின் தொடர்பு  டையனவாகவே இருக்கின்றன. இன்று தேவையென்னவெனில் சமுதாயத்திலிருந்து இந்த  அழுத்தத்தை நீக்குவதுதான். யோகா தியானம் ஆகியவை அழுத்தத்தைக் குறைக்க உதவும்  என்று பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த நுட்பங்கள் எதிர்மறை உணர்ச்சிகள்  மற்றும் சவால்களை சிறு வயதிலேயே கையாள ஒருவரை த் தயார் செய்கின்றன. இவற்றுடன்  பள்ளிகளில் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு ஆதரவளிக்கும் சூழல் ஏற்பட்டால் நல்ல  குணநலன்களை பெற முடியும்.  துப்பாக்கியை நெருங்குவதற்குப் பதிலாக மனங்களை நெருங்க வேண்டும். ஒரு தனி மனிதர்  அல்லது ஒரு சமூகத்தைச் சேர்ந்த குழு குற்றம் புரிந்தால் இளம்வயதினருக்கு அனைவரையுமே  அதே கருத்துடன் காணும் குணம் இருக்கிறது. இந்த குணத்தை பற்றிய ஜாக்கிரதையுணர்வு  டன் இருக்க வேண்டும் என்று கற்பிப்பது முக்கியமானது. வன்முறையின்மையின் முக்கியத்  துவத்தைக் கற்பிக்க வேண்டும். அமெரிக்காவில் மளிகை சாமான்கள் கடைகளை விட  துப்பாக்கிகள் விற்கும் கடைகள் அதிகமாக உள்ளதாக ஒரு செய்தித் தாள் அறிக்கை சுட்டிக்  காட்டுகிறது.வன்முறையின்மையைப் பற்றிய கல்வியை நாம் அளிக்கவில்லையெனில் அல்லது  தங்களுடைய ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் நுட்பங்களை அவர்கள் தெரிந்து  கொள்ளவில்லையெனில் தீவிர வன்முறை செயல்களைத் தொடர உதவும் துப்பாக்கிக் கடை  கள் இத்தகைய அதிக எண்ணிக்கையில் இருப்பது நமக்கு சரியாக இருக்குமா?  துரதிஷ்ட வசமாக இன்று கருணை, தொடர்பு மற்றும் கூட்டுறவிற்குப் பதிலாக ஆக்கிரமிப்பு,  வன்முறை ஆகியவற்றுடன் பெருமை இணைக்கப் பட்டுள்ளது. நாம் பெரும்பாலும் நம்  குழந்தைகளிடம் கோபப்படக் கூடாது, வருத்தப் படக் கூடாது என்று கூறுகிறோம், ஆனால்  அதற்கான நுட்பங்களை அளிப்பதில்லை. எவ்வாறு மூச்சின் மூலம் உணர்ச்சிகளை  மேலாண்மை செய்வது என்று அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப் படவில்லை. நாங்கள்  அமெரிக்காவில் சிகாகோ, நியூ யார்க், நியூ ஜெர்சி மற்றும் சில இடங்களில் பணிபுரிந்த போது  பள்ளிகளில் மிகுந்த ஆக்கிரமிப்புணர்வும் கோபமும் உடைய குழந்தைகள் அவற்றை  மேலாண்மை செய்யும் வழிகளாக ஆன்மீக நுட்பங்களையும் அறிவையும் கற்றுப்    பெற்றிருப்பதை அறிந்திருக்கிறோம். அண்மையில் இந்த நுட்பங்கள் ஐரோப்பிய யூனியனில்  தீவிரமயமாக்கலுக்கு எதிரான பயிற்சிகளில் பயன்படுத்தப் பட்டுள்ளன.  மற்றொரு விதமான வன்முறை பெரிய, மற்றும் ஒழுங்கமைக்கப் பட்ட அளவில் சமய  வெறியின் காரணமாக எழுகின்றது. தீவிரமான இளைஞர்கள் எந்தப் பேச்சு வார்த்தைக்கும்  இடம் கொடாமல் வன்முறையை மட்டுமே கருவியாகக் கொண்டுள்ளனர். இந்தக் கருத்தை  தடுக்கும் பொருட்டு அதிக சமய ஒழுங்கு முறை தவிர்க்கப் படவேண்டும். அதற்குப் பதிலாக  பல்வேறு சமயங்களைப் பற்றிய கல்வி அளிக்கப் படவேண்டும். இது நமது கல்வி முறை  மற்றும் சமுதாயத்தின் மற்றொரு இலக்காக அடையப் படவேண்டும். உலகிலுள்ள பல்வேறு  பகுதிகளுள்ள இசை மற்றும் உணவு ஆகியவற்றை ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் ஞானம்  என்று வரும்போது தப்பியோடுகிறோம். டேனிஷ் பிஸ்கட்டுகளைச் சாப்பிடுவதால் டேனிஷ்  ஆகி விட மாட்டீர்கள். சீன உணவு வகைகளை ஏற்பதால் சீனாக்காரராக ஆகி விட  மாட்டீர்கள். இந்த சமயத் தடையை நாம் அகற்ற வேண்டும். பிற சமயங்களை பற்றிய  விஷயங்களை ஆரோக்கியமாக முக்கியமாக சிறு வயதிலேயே ஏற்று அணுகும்போது  சமயங்களுக்கு எதிரான வெறுப்பு வளராது. சமயங்களுக்கிடையே பேச்சுவார்த்தைகளும்  நடைபெற வேண்டும். பல்வேறு சமயங்களை சேர்ந்த சமயத் தலைவர்கள் ஒரே குரலில்  பேசினால் அது பின்பற்றுபவர்களுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய  பேச்சு வார்த்தைகளுக்கு இடமளிக்காமல் இருக்கும் நாடுகள் மற்றும் இடங்களில் சமய  நல்லிணக்க உரையாடல் நடைபெற வேண்டும்.  ஒவ்வொரு குற்றவாளிக்குப் பின்னரும் ஓர் பாதிக்கப் பட்டவர் உதவி கோரி அழுது கொண்டி  ருக்கிறார். பாதிக்கப் பட்டவரைக் குணப்படுத்தினால் குற்றவாளி மறைந்து விடுவார்.  மூன்றாவது விதமான வன்முறையாளர்கள் யாரெனில் தங்கள் உரிமைகள் அல்லது  சுதந்திரத்தை வேண்டிப் போராடும் கிளர்ச்சியாளர்கள். சமூக நீதி அல்லது மனிதநேயத்  தலைமை குறையும்போது சமுதாயத்தில் கிளர்ச்சி ஏற்படுகிறது.அது ஒரு கோரிக்கை, காரணம்  ஆகியவற்றுடன் துவங்கி பின்னர் பயங்கரவாதமாக உருவெடுக்கிறது. பயங்கரவாதம்  கண்ணற்றது ஆகும். உலகெங்கும் அதற்கு பொருளாதார முன்னேற்றம் நீதி ஆகியவை  கிடையாது. ஆயினும் இவர்கள் கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் உண்மையானவர்கள், மற்றும்  தீவிரமான தியாக உணர்வுள்ளவர் கள்.  ஒரு காரணத்திற்காக தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு அவர்கள் தயாராக  இருப்பது பாராட்டத்தக்கது. பல ஆண்டுகளாக பல தீவிரவாத குழுக்களை நான் பிரதான  நிலைக்கு கொண்டு வருவதற்கான நோக்கத்துடன் சந்தித்திருக்கிறேன். இந்த மக்கள் திறந்த  மனதுடன் அணுகினால் அவர்கள் உரையாடலில் கலந்து கொள்ளவும், கதையின்  தங்களுடைய பக்கத்தை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கின்றனர் என்பதே எங்கள்  அனுபவம்.  அவர்கள், சமுதாயத்தில் நீதி மற்றும் மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கையைப் பெறும்போது,  அவர்கள் திருந்தி சமுதாயத்திற்கு நிறைய பங்களிக்க முடியும். தாங்கள் உரையாடலின் ஒரு  பகுதியாக இருப்பதை உணருவதும் முக்கியமானது. நாம் யாரையும் குற்றம் சாட்டி , உரை  யாடலில் பங்கேற்கும்படிக் கேட்க முடியாது. அவர்களாகவே உணர்ந்து புரிந்து கொள்ள  வைக்க வேண்டும். கொலம்பியாவில் FARC இன் விஷயத்தில், நிர்வாகம் ஆதரவு  அளித்ததால் , மறுவாழ்வு மற்றும் மறு ஒருங்கிணைப்பு விரைவாகவும், மிகவும் பயனுள்ள  தாகவும் அமைந்தது. எந்த முரண்பாட்டிலும், முதல் விஷயம் தொடர்பு முறிவு மற்றும்  இரண்டாவது நம்பிக்கை குறைபாடு. நாம் இவற்றை சரி செய்து விட்டால் பின்னர் சமாதான  செயல்முறை தொடங்குகிறது.  வன்முறையற்ற உலகம் என்னும் கருத்து கற்பனையானது போல் தோன்றலாம், ஆனால் அது  தொடர்ந்து செயல்பட மதிப்புள்ள இலக்காகும். வன்முறையற்றவர்களாக இருப்பது,  மற்றவர்களிடம் இரக்கமுள்ளவர்களாகவும் உதவிகரமாகவும் இருப்பது பெருமைக்குரிய    விஷயமானால் அந்த ஒரு சிறிய மாற்றமானது ஒரு புதிய திசையில் நமது வாழ்க்கையை  எடுத்துச் செல்லும். அது நம் அசைக்க முடியாத அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும்.  கொசோவோ, கொலம்பியா, ஜோர்டான், பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா  மற்றும் இந்தியாவில் வன்முறை மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முரண்பாடு  அகற்றுதல் அதிர்ச்சி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள  மனிதமதிப்புக்களுக்கான சர்வதேச சங்கத்தின் நிறுவனர், மற்றும் உலகளாவிய மனித நேய  ஆன்மீகத் தலைவராகிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் மகாத்மா காந்தியின் 149  வது பிறந்தநாளை குறிக்கும் அக்டோபர் 2 ம் தேதியன்று நிகழவிருக்கும் , வன்முறை மற்றும்  தீவிரவாதத்தின் மீதான உலக உச்சிமாநாட்டில் திறமையானவர்களுக்கு ஒரு நிபுணர் எடுக்கும்  வகுப்பை அளிப்பார்.

------
Regards,
Rajalakshmit
Art of Living Bureau of Communication
Mob: 9884017767

No comments:

Post a Comment