Friday 14 December 2018

ரபேல் தீர்ப்பு : OPPosition and OPP.. Rafale Judgement

OPP - (O)FFSET -(P)RICE - (P)ROCEDURE -  & OPPosition
- செந்தில் ஆறுமுகம்

”செருப்புக்கேற்றவாறு காலை வெட்டிய கதை” இதுதான் ரபேல் விவகாரம். ஒப்பந்தம் போட்டுவிட்டு அதற்கேற்றவாறு விதிமுறைகள் மாற்றப்பட்டன.!!

ரபேல் தீர்ப்பு:  சட்டத்தின் பார்வையில், அரசிற்கு இராணுவ கொள்முதல் விதிமுறைகளை மாற்றுவதற்கு உரிமை இருக்கிறது. 
நமது பார்வையானது, அப்படி அவசர அவசரமாக விதிமுறைகளை மாற்றியது யார், யார் பயனடைவதற்கு என்பதே..!!  ( தற்போதுள்ள Offset policy, விதிமுறைகளின்படி யார் நினைத்தாலும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் Offset Partner ஆக வருவதை யாராலும் தடுக்க முடியாது 
என்பது வேறுவிவகாரம்..!!)  பிரதமர் மோடி ஏப்ரல் 2015ல் 36ரபேல் விமானங்கள் வாங்க பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் போட்ட பிறகு இந்தியாவின் இராணுவ கொள்முதல் விதிமுறைகள்(DPP) சட்டம் 2013ல் திருத்தம் கொண்டுவந்தது(ஜீன் 2015ல்) மற்றும் ஏற்கனவே போடப்பட்ட 126 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவது குறித்தான விதிமுறைகளானது, புதிய ஒப்பந்தம் போட்டுவிட்டு வந்து சாவகாசமாக நிறைவேற்றியது போன்றவை “யாருக்கோ” , “ஏதோ” உதவி செய்வதற்காகத்தான் என்ற சந்தேகத்தை வலுவாக்குகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், நீதிமன்றம் இதுபோன்றவற்றை எல்லாம் ஆதாரமாக எடுத்துக்கொள்வதில்லை..!! 

- செந்தில் ஆறுமுகம், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 87545-80274

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்பித்த அறிக்கை(Affidavit) - 





No comments:

Post a Comment