Thursday 22 December 2016

சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும்... சட்ட பஞ்சாயத்து இயக்கம் உச்ச நீதி மன்றத்திற்கு அவசர மனு



தமிழகத்தில் மீண்டும் ஒரு அசாதாரண நிலை உருவாகாமல் தடுக்க  சசிகலா  உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு  வழக்கின் தீர்ப்பை விரைவாக  வழங்க வேண்டும்...                             


சட்ட பஞ்சாயத்து இயக்கம் உச்ச நீதி மன்றத்திற்கு அவசர மனு 

           

           பத்திரிகை செய்தி(23-12-2016)

1991 முதல் 1996 வரை தமிழக  முதலமைச்சராக  ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் மாதம் 1 ரூபாய் சம்பளம் வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ 60 மட்டுமே சம்பளமாக பெற்றார். ஆனால்  இந்த கால கட்டத்தில் வருமானத்திற்கு பொருந்தாத வகையில் பல கோடிகள் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. முறைகேடாக ஜெயலலிதா சொத்து சேர்த்ததற்கு உடந்தையாக இருந்ததாக சசிகலா இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். ஒரு வழக்கை எப்படி எல்லாம் ஜவ்வாக இழுக்கலாம்(20 ஆண்டுகள் வரை..) நீதியை வளைக்கலாம் என்பதற்கு இந்திய அளவில் இந்த வழக்கு உதாரணமாகத் திகழ்கிறது. ஒரு வழியாக 2014 ல் இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100 கோடிக்கு மேல் அபராதமும் விதித்து தீர்ப்பு எழுதினார் நீதிபதி குன்ஹா அவர்கள். முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா இழக்க நேரிட்டது. ஆட்சிப்பொறுப்பில் இருக்கும்போதே, ஊழல் வழக்கிற்காக பதவி இழந்த முதல் அமைச்சர் என்ற பெருமையை இந்திய அளவில் முதலாவதாக ஜெயலலிதா பெற்றார். ஜெயலலிதா கைதைத் தொடர்ந்து .தி.மு. வினர் தமிழகத்தில் பல அட்டூழியங்களை செய்தனர். பொதுச் சொத்துக்களுக்கு கோடிக்கணக்கில் சேதம் விளைவித்தனர். தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா அவர்களைக் கண்டித்து தகாத வார்த்தைகளை எழுதி .தி.மு.கவினர் தமிழகம் முழுவதும் பேனர்  வைத்து நீதித்துறையை பல்வேறு வகையில் அசிங்கப்படுத்தினார்கள். ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி நாங்கள்தான் என்று காட்டிக்கொள்ள அமைச்சர் முதல் அடிமட்ட .தி.மு. தொண்டர்கள்வரை பல சகிக்க முடியாத காரியங்கள் செய்ததை பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். பல ஆண்டுகள் விசாரிக்கப்பட்டசொத்து குவிப்பு வழக்கின்  மேல்முறையீட்டை 1 மாதத்திற்குள் விசாரித்து தீர்ப்பு உடனே வழங்க உச்ச நீதிமன்றம் பெங்களுரு உயர்நீதிமன்றத்திற்கு வினோதமாக உத்தரவிடுகிறது. அதன் படி விசாரித்து பெங்களூர் உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்கிறது. விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஜெயலலிதா குற்றவாளியா, நிரபராதியா என்ற விடை தெரியாமலேயே 05-12-2016 அன்று காலமானார். இதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் குறிப்பாக .தி.மு.கவில் பல அரசியல் சடுகுடு வேலைகள் அரங்கேறி வருகிறது. சசிகலா அவர்கள் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நடராஜன் தலைமையில் காய்களை நகர்த்தி வருகிறார். துணைக்கு தன் குடும்ப உறவினர்கள் அனைவரையும் பயன்படுத்தி வருகிறார். .தி.மு..வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று அதன் பிறகு தமிழக முதலமைச்சராக சசிகலா துடிக்கிறார். இதற்கு பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் நேரிடையாகவும், மறைமுகமாவும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பின்ணணியில், சசிகலா அவர்கள் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சொத்து குவிப்பு வழக்கில் ஒருவேளை சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், சசிகலா பதவி விலக வேண்டி வரும்.  மீண்டும் தமிழகத்திற்கு ஒரு தலைகுனிவு ஏற்படும். ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு  எதிராக .தி.மு. வினர் செய்த அட்டூழியங்கள் மீண்டும் அரங்கேறும். தமிழக மக்கள் மீண்டும் பாதிக்கப்படுவார்கள். பல கோடி மதிப்புபுள்ள பொதுச்சொத்துக்கள் சேதமாக்கப்படும்.

ஏற்கனவே மழை -புயல்- முதலமைச்சர் மரணம் என்ற பல்வேறு காரணங்களால் அசாதாரண சூழல் நிலவிவரும் தமிழகத்தில் மேலும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு நடக்காமல் தடுக்கவேண்டியது அவசியமாகிறது.

தமிழகத்தில் நிலவிவரும்  இத்தகு சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு உச்ச நீதிமன்றம் சொத்துகுவிப்பு வழக்கின் மீதான தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கம் உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறது. இதன் மூலம் தமிழக மக்களின் உயிர், உடைமைகள் காக்கப்படும். பொது சொத்துக்கள் சேதமாக்கப்படுவது தவிர்க்கப்படும். .தி.மு. வினரின் பல அட்டுழியங்கள் செய்வதை தடுத்துவிடலாம்.

மத்திய அரசின் தலையீட்டால்தான் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும்  நீதிபதிகளுக்கு பல கோடி லஞ்சம் கொடுத்து வழக்கு சரி செய்யப்பட்டுள்ளது என்றும் வதந்திகள் உலவிவருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றம் உடனே சொத்துக்குவிப்பு தீர்ப்பு வழங்கி நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இந்திய மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். விரைந்து வழங்கப்படும் இத்தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். இதுகுறித்து உச்சநீதிமன்றத்திற்கு அவசரமனு ஒன்றை சட்ட பஞ்சாயத்து இயக்கம் அனுப்பியுள்ளது(நகல் இணைக்கப்பட்டுள்ளது)


 

 சிவ.இளங்கோ,                                              தலைவர்                                                   சட்ட பஞ்சாயத்து இயக்கம்             

                                                             87545 80270, 87545 80274 

 

 

 

 

 

 

From

Siva.Elango,                                                 president,                                                 satta panchayat iyakkam,

No:31,south West Boag Road,                       T.Nagar, Chennai – 600 017.


To

 

The Honourable Chief Justice of India and his other companion Judges of Supreme Court of India,

Supreme Court of India,

Tilak Marg,

New Delhi – 110 201

 

 

Subject: Prayer to pass orders in disproportionate wealth case of Late Ms. J Jayalalitha and her aides. 

 

Respected Honourable Chief Justice of India and his other companion Judges of Supreme Court of India,

 

We are a NGO engaged in fight against corruption and for prohibiting the consumption of intoxicating drinks and drugs injurious to health. We are having our head office at the above said address and having branches all over Tamilnadu and having a membership of 6500 (face book members 70,000).  As a part of our crusade against the corruption we have filed many Public interest litigations in High Court of Tamilnadu and also continuously exposing corrupt officials through court of law. 

 

        We humbly submit that now deceased Ms. J. Jayalaitha was chief Minister of Tamilnadu from 1991 to 1996 and received a salary of Rs.1/- but Ms. J. Jayalalitha along with her aides Sasikala Natarajan, V.N. Sudhakaran and J.Elavarasi were booked under various sections of Prevention of Corruption Act and IPC for amassing wealth disproportionate to their income in the year of 1997. The above case become a symbol of delay in our Justice System and was dragged for 18 years and become a bible for some unscrupulous persons who want to drag their cases. But after the intervention of the Honourable Supreme Court of India the judgment convicting Ms. J. Jayalalitha along with her aides Sasikala Natarajan, V.N. Sudhakaran and J.Elavarasi was pronounced in 2014. The Judgment not only Sentenced her to undergo imprisonment of simple imprisonment of 4 years but also  imposed a fine of 100 crores. As a consequence of the Judgment Ms. Jayalalitha lost her post of Chief Minister and earned the dubious and infamous distinction of first constitutional Authority to get punished while in office and losing the office. When the Judgment was delivered there were riots and deplorable acts took place throughout Tamilnadu including defamation of Honourable judge Mr. John Michael D'Cunha who convicted Ms. Jayalaitha and Judiciary in general. Banners and posters were erected throughout condemning the Judiciary and one of the Municipalities even went to the extent of passing resolution against the Judiciary. It is pertinent to note that this kind of rioting is not new as her party men indulged in riot in the

 

-3-

year 2000 when she was convicted in Pleasant Stay hotel case and college bus was burnt with students inside and in the 3 girl students were killed.

 

        We humbly submit that in the above situation Honourable Supreme Court of India intervened in that case and directed the Honourable High Court of Karnataka to hear the case with in 4  weeks and pass orders. The Honourable High Court of Karnataka on 11.05.2015 acquitted Ms. Jayalalitha and others and as against an appeal has been filed before the Honourable Supreme Court and the same is pending for the past two years and it is pertinent to note that Ms. Jayalalitha had again become the Chief minister of Tamilnadu and was again reelected as Chief Minister of Tamilnadu. She passed away on 05.12.2016 while holding the office of Chief Minister.  In the circumstance, lot of political gambling and horse trading have started in Tamil Nadu especially in AIADMK party of Ms. Jayalalitha and her aide and second accused in disproportionate asset case namely Ms. Sasikala is trying to take control of the AIADMK party and become chief minister of Tamilnadu with the help of her husband Mr. Natarajan and her relatives. 

 

        If Ms. Sasikala is elected as Party president and Chief minister by her loyalist and if she was convicted and was forced to resign her post there is a possibility that riots will erupt all over Tamilnadu. Tamilnadu is already facing a desperate situation due to the Cyclone, Demonetization

 

-4-

 

and death of its CM and hence it is imperative that no fresh crisis is created.

       

We humbly submit that Justice delayed is Justice denied and the above case is pending for almost 19 years and that too involving the persons who had held constitutional posts and may hold such constitutional posts in future and persons who should have unblemished morality. The Honourable Supreme Court had reserved its verdict on 07.06.2016 but no judgment was pronounced till date and the case is pending for Judgment for past 6 months and in the mean time prime accused Ms. Jayalalitha had passed away in mysterious circumstances.

 

We submit that there are rumors circulating that the Central Government had interfered in this case and crores of rupees is paid to Judges for a favorable order. The above are pure rumors circulated with an intention to defame the Judiciary and create confusion in the minds of common public. In this situation credibility of Judiciary is at stake. Independence of Judiciary is being questioned by unscrupulous elements. Judiciary is the last resort of Indian citizen and protector of Constitution of India. Hence it is imperative that the credibility and independence of Judiciary should be protected at any cost and even an iota of doubt should not be allowed to cast on the integrity of this great institution. In 1967 Honourable Justice M H Beg said in R C Sharma Vs UOI "The Civil

-5-

 

Procedure Code does not provide a time limit for the period between the hearing of arguments and the delivery of a judgment. Nevertheless, we think that an unreasonable delay between hearing of arguments and delivery of a judgment, unless explained by exceptional or extraordinary circumstances, is highly undesirable even when written arguments are submitted. It is not unlikely that some points which the litigant considers importan may have escaped notice. But, what is more important is the litigants must have complete confidence in the results of litigation. This confidence tends to be shaken if there is excessive delay between hearing of arguments and delivery of judgments. Justice, as we have often observed, must not only be done but must manifestly appear to be done." Further in Anil Rai Vs State of Bihar Honourable Justice K. T. Thomas and R.P. Sethi had laid down certain procedures/instructions to be followed by the High courts when the Judgment was reserved and delivered later. We conceded that the Judgment is in respect of the High courts but still it may be refereed to.

 

It is, therefore humbly prayed that my lords may kindly direct the concerned bench to pass order in the above case as soon as possible to protect the faith of common people in Judiciary and protect the credibility and independence of our Judiciary. We reiterate we have full faith in our Judiciary and the order in the above case would bring down curtain on the uncertainty prevailing in Tamilnadu and bring peace to Tamilnadu.     

                    Yours faithfully,  

 

                    Siva.Elango                                                                    president,                                                                      satta panchayat iyakkam,                                                                                          

 

 

                                                                

                                              

 

 



​Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

No comments:

Post a Comment